Tuesday, November 6, 2018

அஹம் என்னும் அகங்காரத்தை துரத்தும் .

இரண்டு சோதிடர்கள் ஒரே தெருவில் எதிரெதிரே உள்ள வீட்டில் வாழ்ந்து வந்தார்கள்.
காலையில் எழுந்ததும் இருவரும் திண்ணையில் வந்து உட்கார்ந்து கொள்வார்கள்.
தங்களது சோதிட ஆற்றலை வெளியே எடுத்துக் காட்டத் தொடங்கி விடுவார்கள்.
ஒருவர், ஒரு குறிப்பிட்ட நட்சத்திரத்திற்கு இராசிபலன்கள் சொல்லிக் கொண்டேயிருப்பார்.
எதிர்வீட்டுக்காரர்,
தன் திறமை மற்றவர் திறமையைவிட மிகுதி என்று காட்ட ,
அதே நட்சத்திரத்திற்கு எதிர்பலன் சொல்ல ஆரம்பித்து விடுவார்!
நான் சொல்லுவதுதான் சரி என்பார் ஒருவர்.
இல்லை நான் சொல்லுவதே சரி என்று உரக்கக் கூறுவார்.
இப்படி , " நான் நான் , நான் நான்" என்று நாளெல்லாம் இரைந்து கொள்வார்கள்.
அந்தத் தெருவிலே போவோர் வருவோருக்கெல்லாம் இதைக் கேட்டு வெறுப்பு பொங்கி எழுந்தது.
" இதைத் தீர்த்து வைக்க வழி இல்லையா?"
என்று அந்தத் தெருவில் உள்ளவர்கள் பேசிக் கொண்டார்கள்.
தண்ணீர் எடுத்து அவ்வழியே சென்று கொண்டிருந்த ஒரு கிழவி ,
" ஒரு வேளை நான் போனால் வழி பிறக்கும்."
என்று சொன்னாள்.
இதைக் கேட்டதும் , தெருவிலுள்ளவர்கள் வியப்படைந்தார்கள்.
அந்த இரு சோதிடர்களிடமும் சினம் மிகக் கொண்டார்கள்.
அந்தக் கிழவி ,
வீட்டிற்குப் போய்த் தண்ணீர்க் குடத்தை இறக்கி வைத்துவிட்டு ,
அந்த இரு சோதிடர்களிடமும் வந்து ,
நான் --நான் என்ற மமதையை விட்டொழித்து விட்டுச் சோதிடத்தில் ,
பொறுமையுடன் கருத்தைச் செலுத்தினால் சொல்லும் பலன் சரியாக இருக்கும்.
கைமேல் பலிக்கும்.
போகும் வழிக்குப் புண்ணியம் கிடைக்கும் என்று சொல்லிப் போனாள்.
அன்றிலிருந்து பொறுமையோடிருந்து, புத்தியோடு பிழைத்தனர் ,
அந்த இரு சோதிடர்களும்.
போட்டி ஒழிந்தது.
பொறுமைக்கு அழிவு கிடையாது.
பொறுமையாய் இருப்பவர்களுக்குப் பெருமைதான் சேரும்.
சிறுமை அவர்களைத் தீண்டாது.
அழிவு அவர்களை அணுகாது.
பொறுமை இழந்தவர்கள் வெற்றி பெறுவது அருமை.
பகையும் , பொல்லாங்கும், நாசமும்,
இழப்பும்தாம் வரும்,
பொறுமை குலைந்தால்..
ஒரு வருடம் என்பது
நம் வாழ்க்கையை பல விதங்களில் மாற்றும்.
காலத்தின் சக்கரங்கள் யாருக்காகவும் நிற்பதில்லை.
பணிவான அன்புடன் அனைவருக்கும்
காலை வணக்கங்கள்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...