காலம் காலமாக நடைமுறையில் இருக்கும் ஒரு பழக்கம் இன்றும் கூட பேஷன் உலகத்தில் முக்கியத்துவம் பெறுகிறது. சிறு குழந்தைகளுக்கு மூக்குத்தி குத்தும் பழக்கம் இல்லை.
பருவப்பெண்களே மூக்குத்தி அணிய வேண்டும் .பருவப் பெண்களுக்கு மண்டை ஓட்டுப் பகுதியில் சில வாயுக்கள் காணப்படுகிறது.
இந்த வாயுக்களை உடலில் இருந்து அகற்றுவதற்கு தான், மூக்கில் துளை இடும் பழக்கம் உருவானது. இதனால் பெண்களுக்கு மூக்கு தொடர்பான பிரச்சனைகள் நிவர்த்தியாகும்.
காற்றை வெளியேற்றுவதில் ஆண்களுக்கு வலப்புறமும் பெண்களுக்கு இடப்புறமும் பலமான வலுவான பகுதிகளாகும். வலது புறமாக சுவாசம் செல்லும் போது தான் உடலுக்கும் மனதுக்கும் பலன் கிடைக்கும். முறையான சுவாச பரிமாற்றத்துக்கு உதவுகிறது மூக்குத்தி.
நமது மூளையின் அடிபகுதியில் நரம்பு மண்டலங்களை கட்டுப்படுத்தக்கூடிய சில பகுதிகள் உணர்ச்சி களை செயல்படுத்தும். இந்த பகுதியின் செயல் பாட்டை பெண்களுக்கு அதிகப்படுத்த மூக்குத்தி அவசியப்படுகிறது.
பெண்களின் இடதுபுற மூக்கில் குத்தக்கூடிய மூக்குத்தி, வலது புற மூளையையும் வலது புற மூக்கில் குத்தும் மூக்குத்தி இடதுபுற மூளையையும் இயக்க கூடியதாக உள்ளது.ஷ...ரு🌳
இன்று இருபுறமும் மூக்குத்தி அணிந்தாலும் சாஸ்திரப்படி பெண்கள் இடப்புறம் தான் அணிய வேண்டும். இடப்புறம் அணிவதால் சிந்தனா சக்தி,மனம் ஒரு நிலைப்படுத்தபடுகிறது.
நமது முன் நெற்றிப்பகுதியில் இருந்து சில நரம்புகள் மூக்கு தூவாரம் வரை கீழ் இறங்கி மூக்கு பகுதியில் மெல்லிய துவாரங்களாக இருக்கும். இதில் அணியப்படும் தங்க மூக்குத்தி உடல் வெப்பத்தை குறைத்து குளிர்ச்சி அளிக்கும்.
மூக்கு மடலில் ஏற்படுத்தப்படும் துவாரம் நரம்பு மணடலத்தில் உள்ள அசுத்த வாயுவை அகற்றும். ஒற்றைத்தலைவலி, நரம்பு நோய்கள், உளச்சோர்வு ஏற்படமால் மூக்குத்தி தடுக்கிறது.🌺🌸
No comments:
Post a Comment