Wednesday, November 7, 2018

திருச்சாட்டியக்குடி_வேதபுரீஸ்வரர்_ஆலயம்.


~`~`~`~` 🌺🌸 `~`~`~`~
நாகபட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் வட்டம் கீழ்வேளூரில் இருந்து கச்சினம் வழியாக திருத்துறைபூண்டிக்கு செல்லும் வழியில் உள்ள மிக பழமை வாய்ந்த ஆலயம்.
இத்தலத்திற்கு - ஒன்பதின்மரில் கருவூர்த்தேவர், திருவிசைப்பா பாடியுள்ளார்.
ஒன்பதாம் திருமுறையான திருவிசைப்பா திருப்பல்லாண்டுப் பதிகங்கள் - சிவபெருமானின் திருமேனிச் சிறப்பு, அடியார்க்கருளிய அப்பெருமானின் நலங்கள் முதலியவற்றையும் எடுத்துரைப்பதோடு, ஆங்காங்குச் சைவசமயத் தத்துவக் கருத்துக்களையும் புகழ்ந்தோதுகிறது.
மூலமூர்த்தி - சிவலிங்கத் திருமேனி; சற்று உயர்ந்த பாணம்; சதுர ஆவுடையார் அமைப்பு.
(குடி - ஊர்) வெப்ப நோயால் பீடிக்கப்பட்டவர்கள் இன்றும் இத்தலத்திற்கு வந்து வழிபட்டுக் குணமடைவது வழக்கில் இருந்து வருகிறது.
அம்பாள் கோயில் தனிக்கோயிலாக உள்ளது.
சண்டிகேஸ்வரி மூர்த்தம் வௌ¤யில் இடப்பால் (மண்டபத்தில்) உள்ளது.இக்கோயில் கி.பி. 4ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதென்பர்.நித்திய வழிபாடுகள் நன்கு நடைபெறுகின்றன. நாள்தோறும் நான்குகால வழிபாடுகள்.
மாசிமக உற்சவம் இத்தலத்தில் மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. நவராத்திரி விழாவும் இத்தலத்தில் சிறப்புடையதாக உள்ள
தலமாக திகழும்....🌺🌸 🌳
#திருச்சாட்டியக்குடி என்னும் ஊரில் சிவன் சுயம்பு மூர்த்தியாக அமர்ந்து அருள்பாலிக்கும் அருள்தரும் வேதநாயகி அம்பாள் உடனுறை அருள்மிகு வேதபுரீஸ்வரர் (வேதநாதர்)சுவாமி ஆலயத்தை அடியார்களுடன் தரிசனம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...