🌺சனி பகவானுக்கு கறுப்பு துணியில் எள் எரிப்பதால் உருவாகும் கெடுபலன்கள்🌺
தீபம் என்றால் திரவ நிலையில் உள்ள எண்ணெய்யை திரியிட்டு எரிப்பது ஆகும். கறுப்பு துணியிட்டு எள்ளை எரிப்பது தீபமாகாது.அதற்கு பெயர் தீப்பந்தம்.
எப்போதிலிருந்து எள்ளை துணியிலிட்டு எரித்து அதனை தீபமாக ஏற்றுக் கொண்டார்கள் என தெரியவில்லை. ஜோதிட சாஸ்திரத்தில் துணி எரிப்பது அபசகுனமாக கருதப்படுகிறது. அப்படி இருக்கும் போது சனி பகவான் சன்னதியில் கோவில்கள் தோறும் எள் விளக்கு என்ற பெயரில் எள்ளை தீ பந்தமாக எரிக்கிறார்கள். இது அனைவருக்கும் நல்லது அல்ல. உண்மையான எள் தீபம் என்பது நல்லெண்ணை விளக்காகும். இனியாவது சனி பகவான் சன்னதியில் எள்ளை கறுப்பு துணியில் இட்டு எரிக்காமல் நல்லெண்ணெய் தீபமேற்றி சனி பகவானையே வழிபடுவோம். சனீஸ்வரன் அருள் பெறுவோம்.
No comments:
Post a Comment