Thursday, November 8, 2018

பெட்ரோல் விலை daily ஏறும்போதும் இதுதான் நடக்கிறது.

மருந்து கடைக்கு போனேன், எனக்கு முன்னாடி ஒருவர் எதோ மருந்து வாங்கினார், கடைக்காரர் Rs.220 சொன்னார், அந்த பெரியவர் நான் எப்போதும் வாங்குகிற மருந்து தானே Rs.180 தான் வாங்குவேன் என்றார், இல்லை இப்போ விலை ஏறி விட்டது என்கிறார் கடைக்காரர், பெரியவர் அந்த மருந்து பாக்கெட்டை கொடுக்க சொல்கிறார், அதில் Rs.180 தான் இருக்கிறது, கடைக்காரர் எதோ சகஜமாக இதுகூட உங்களுக்கு தெரியாதா எல்லாம் விலை ஏறி போய்டுச்சிங்கறார், அவரோட computer சிஸ்டம் எதோ புதிய விலை காட்டுகிறது ஆனால் டபபால பழைய விலை தான் இருக்கு அந்த பெரியவருக்கு நாற்பது ரூபாய் பெரிய தொகையாக இருக்கும் போலருக்கு, அவர் விடாமல் வாதம் செய்கிறார் பாவம்! என்னோட கேள்வி கடைக்காரர் ஒரு பொருளை ஒரு குறிப்பிட்ட விலைக்கு வாங்கி ஸ்டாக் பண்றங்க, வாடிக்கையாளர் நாம அந்த குறிப்பிட்ட விலைக்கு வாங்கறோம், உற்பத்தி பண்றவன் திடீர் விலை ஏறினா புதிதா கடைக்காரர் கொள்முதல் பண்ணினத்துக்கு தானே விலை ஏத்தணும், அவன் ஸ்டாக் வாங்கினத்துக்கும் அந்த விலை ஏற்றம் பொருந்துமா, இது கொள்ளையா இருக்கே, இதுவே உற்பத்தியாளர் திடீர்னு விலை குறைச்சா மட்டும் இவங்க ஏற்கனவே வாங்கின பொருளுக்கு அந்த பழைய விலையில் விற்பார்கள், இதெல்லாம் நடைமுறையில் ஒழுங்கு படுத்துவது யார்? பாவம் அந்த பெரிசுகள்! இந்த நடுத்தர வர்கம் தான் நடுவில் மாட்டிக்கொண்டு முழிக்கிறது, அந்த பக்கம் டோக்கன் வாங்கி ஒட்டு போடுறது இலவசத்துக்கு நிக்கிறது இது ஒரு பக்கம்! then இருநூத்தி ஐம்பது ரூவா கொடுத்து சர்க்கார் பார்த்திட்டு இருநூத்தி ஐம்பது ரூவாய்க்கு பாப்கான் சாப்பிட்டு நூறு ரூவா கார் பார்க்கிங்க்கு கொடுக்கற ஆளுங்க இன்னொரு பக்கம், இந்த ரெண்டு கும்பலுக்கும் நடுவில அந்த பெரியவர் போல நடுத்தர கும்பல் நாற்பது ரூவாய்க்கு பட்ஜெட்ல என்ன பண்றதுன்னு முழிச்சிட்டு நிக்கிது, ஆனா நாம் போற போக்கிலே எல்லாரையும் இலவசத்துக்கு விலை போறவங்கன்னு பொத்தாம் பொதுவில் திட்டறது இல்லாட்டி பொறுப்பில்லாத சினிமா பாக்கற கூட்டம்னு திட்டறது ரெண்டுக்கும் நடுவிலே ஒரு பெரிய மக்கள் கூட்டம் தவிச்சிட்டு இருக்கே, அந்த கூட்டம் ரெண்டு பக்க திட்டையும் வாங்கிட்டு நிக்கிது!!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...