எம்.ஜி.ஆர். மீது முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, மிகுந்த அன்பும் மரியாதையும் கொண்டவர்..
ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது, தமிழக கோரிக்கைகளுக்காக பிரதமரை சந்திக்க எம்.ஜி.ஆர். டெல்லி சென்றார். தமிழக அரசு அதிகாரிகளை அழைத்து, ‘‘எல்லா பள்ளி பிள்ளைகளுக்கும் சீருடை வழங்க பிரதமரிடம் மாநில அரசின் சார்பில் நிதி கேட்கலாம் என்று இருக்கிறேன். எவ்வளவு தேவைப்படும் என்று கணக்கிட்டு வாருங்கள்’’ என்று எம்.ஜி.ஆர். கூறினார். அதிகாரிகள் கணக்கிட்டு 120 கோடி ரூபாய் தேவைப்படுவதாக தெரிவித்தனர்.

ராஜீவ் காந்தியுடனான சந்திப்பின்போது, எம்.ஜி.ஆரின் மற்ற எல்லாக் கோரிக்கைகளையும் அவர் ஏற்றுக் கொண்டார். சீருடைத் திட்டத்துக்கு மானியம் வழங்குவதை மட்டும் ஏற்கவில்லை. ‘‘பின்னர் பார்க்கலாம்’’ என்று கூறிவிட்டார். அதற்கு எம்.ஜி.ஆர். சம்மதிக்கவில்லை. ‘‘தமிழ்நாட்டுக்கு மானியமே வேண்டாம்’’ என்று எழுந்துவிட்டார்.
பிறகு, தமிழ்நாடு இல்லத்தில் தங்கியிருந்த எம்.ஜி.ஆரை பிரதமர் அலுவலகத்தில் இருந்து ஆர்.கே.தவான் தொடர்பு கொண்டு, ‘‘மாலையில் வேண்டுமானால் நீங்கள் மீண்டும் பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்கிறேன்’’ என்றார். அதற்கு எம்.ஜி.ஆர். சம்மதித்தார். ராஜீவை மீண்டும் சந்திக்க புறப்படும் முன் அதிகாரிகளிடம், ‘‘பிரதமர் நமது கோரிக்கையை ஏற்றுக் கொண்டால் பார்ப்போம். இல்லாவிட்டால் தமிழக அரசின் நிதி நெருக்கடியை மக்களிடம் சொல்லி, வீட்டுக்கு கொஞ்சம் பணம் வாங்கி நாமே சீருடைத் திட்டத்தை செயல்படுத்துவோம்’’ என்றார் எம்.ஜி.ஆர்.!
ஆனால், அதற்கு அவசியம் ஏற்படவில்லை. எம்.ஜி.ஆர். மீது கொண்டிருந்த அன்பு, மதிப்பு காரணமாக மத்திய அரசின் சார்பில் மானியம் வழங்க ராஜீவ் காந்தி சம்மதித்துவிட்டார். ‘‘சிறுவயதில் ஒருவேளை சோற்றுக்கும் ஒரு ஜோடி துணிக்கும் எவ்வளவு கஷ்டப்பட்டேன் என்று எனக்குத்தான் தெரியும். அதனால்தான் சத்துணவோடு சீருடையும் கொடுக்க விரும்புகிறேன்’’ என்று எம்.ஜி.ஆர். கூறினார்.
இந்த திட்டங்களையெல்லாம் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதியாக அவர் சொன்னதில்லை. எம்.ஜி.ஆர். சொன்னதை செய்தார்; சொல்லாததையும் செய்தார். இவற்றைவிட முக்கியமாக...
செய்ததை சொல்ல மாட்டார்.
செய்ததை சொல்ல மாட்டார்.
No comments:
Post a Comment