Friday, November 16, 2018

அருமை. மிக சிறப்பான பணி ........

உறங்காத உதயகுமார்.. களத்தில் நின்ற விஜயபாஸ்கர்.. கஜாவை சிறப்பாக எதிர்கொண்ட தமிழக அரசு!
கஜா புயலுக்கு எதிராக தமிழக அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இதனால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. கஜா புயலை அடுத்து தற்போது மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது .
கஜா புயல் இன்று அதிகாலை வேதாரண்யம் அருகே கரையை கடந்தது. திருவாரூர், தஞ்சை, நாகை, கடலூர் மாவட்டங்களை கஜா புயல் மோசமாக தாக்கியது.
என்னவெல்லாம் செய்தது
இந்த புயல் குறித்து எச்சரிக்கை விடப்பட்டு இருந்த தமிழக அரசு போர்க்கால முறையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கிவிட்டது. தமிழகம் முழுக்க ஐஏஎஸ் அதிகாரிங்கள் தாயர் நிலையில் இருக்க வைக்கப்பட்டனர். பேரிடர் மீட்பு படை களமிறங்கியது. அமைச்சர்கள் அனைவரும் மொத்தமாக களமிறங்கினார்கள்.
500க்கு அதிகமான மீட்பு முகாம்கள் அமைக்கப்பட்டது.
படகுகள் உள்ளிட்ட பாதுகாப்பு சாதனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டது.
எரிபொருள் நிறுவனங்களுக்கு எரிபொருளை சேமித்து வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
உணவு பொருட்கள் தயாராகி வைக்கப்பட்டது.
தமிழகம் முழுக்க மருத்துவ குழுக்கள் சென்றது.
தப்பித்த பேரிடர்
இந்த தொடர் நடவடிக்கைகள் காரணமாக தமிழகம் மிகப்பெரிய பேரிடரில் இருந்து தப்பித்து இருக்கிறது. பல இடங்களில் இதனால் பெரிய பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. ஆனாலும் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக, பலர் காப்பாற்றப்பட்டு இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 1 லட்சம் பேர் முகாம்களில் தங்க வைப்பது எல்லாம் சென்னை வெள்ளத்தின் போது கூட கடைசி நாட்களில்தான் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
களத்தில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
இந்த மீட்பு பணிகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையிலும் அதிகம் பாராட்ட வேண்டியது வருவாய் துறை அமைச்சர் ஆர்பி உதயகுமாரைத்தான். நேற்று காலை சென்னையில் சேப்பாக்கம் கட்டுப்பட்டு அறைக்கு வந்தவர் இன்று அதிகாலைதான் கிளம்பி சென்றார். அதிகாலை சென்றவர், மீண்டும் 2 மணி நேரத்தில் வந்துவிட்டார். அந்த அளவிற்கு போர்க்கால அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டார்.
உறங்காத விஜயபாஸ்கர்
அதேபோல் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் , நேற்று இரவு முழுக்க 108 ஆம்புலன்ஸ் சேவைகளை முடுக்கிவிட்டு இருந்தார். அது மட்டுமில்லாமல் களத்தில் இறங்கி நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்களையும் அமைத்து இருந்தார். அதேபோல் இன்னும் சில அமைச்சர்களும் களத்தில் இறங்கி பணியாற்றினார்கள்.
மக்கள் பாராட்டு
தமிழக அரசின் இந்த துரிதமான நடவடிக்கைக்கு மக்கள் பெரிய அளவில் பாராட்டு தெரிவித்துள்ளனர். இந்த புயலை குறித்து பயந்து கொண்டு இருந்தவர்கள் இப்போது நிம்மதி அடைந்துள்ளனர். தொடர்ச்சியாக விமர்சனங்களை சந்தித்து வந்த எடப்பாடி அரசா இவ்வளவு துரிதமாக பணிகளை செய்தது என்று எல்லோரும் ஆச்சர்யம் அடைந்துள்ளனர்.
பெரிய பாடம்
தமிழக அரசு இதற்கு முன்பு ஏற்பட்ட பேரிடர்களில் இருந்து பாடம் கற்று இருக்கிறது என்றுதான் கூற வேண்டும். வர்தா புயலின் போது தமிழக அரசு சரியாக செயலாற்றவில்லை. சென்னை வெள்ளத்தின் போதும் அரசு சரியாக செயலாற்றவில்லை. ஆனால் அதில் கற்ற பாடங்களை வைத்து இந்த கஜாவை சமாளித்து இருக்கிறார்கள்.
நல்ல விஷயங்கள் நடந்தால் பாராட்டலாம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...