நான் இரவு Netflix ல் விசாலின் இரும்புத் திரை திரைப்படம் பார்த்தேன்.நமக்குத்தெரியாமலேயே நம்முடைய அக்கௌன்ட்டை ஹேக் செய்து வங்கிகளில் இருந்து பணத்தை எப்படி கொள்ளையடிக்கிறார்கள் என்பதை மிகத்தெளிவாக காட்டியிருக்கின்றனர்.
பயத்தில் உடம்பு சில்லிட்டுப்போனது.
அதே மூடில் இன்று மதியம் 'தெகடி' என்ற திரைப்படம் பார்த்தேன்.நம்முடைய இன்சூரன்ஸ் பணம் எப்படி நம்முடைய கணக்கில் இருந்து நமக்குத் தெரியாமலேயே எடுக்கப்படுகிறது என்பதை மிகத்தெளிவாக விளக்குகிறது.'யாரைத்தான் நம்புவதோ 'என்ற திரைப்பட பாடல்தான் எனக்கு நினைவுக்கு வந்தது .
முன்பெல்லாம் கடற்கொள்ளைக்காரர்கள் ,வழிப்பறிக் கொள்ளைக்காரர்கள், முகமூடி,கன்னக்கோல்...இப்படி பலவகை.
வேல்,அம்பு,கத்தி ,துப்பாக்கி இப்படி பல்வேறு உபகரணங்கள் கொள்ளையடிப்பதற்கு.
இப்பொழுது... டிஜிட்டல் உலகத்தில் ஒன்றும் வேண்டாம்.ஏர்கண்டிசன் அறையில் இருந்துகொண்டே கொள்ளையடிக்கலாம்....
நான் இந்த திரைப்படங்களில் இருந்து கற்றுக்கொண்ட பாடம்...
இந்த நவீன யுகத்தில்
வாழ்வதற்கு அறிவாளியாக இருந்து சம்பாதித்தால் மாத்திரம் போதாது புத்திசாலித்தனமாக அதை பாதுகாக்கவும் தெரியவேண்டும்.
வாழ்வதற்கு அறிவாளியாக இருந்து சம்பாதித்தால் மாத்திரம் போதாது புத்திசாலித்தனமாக அதை பாதுகாக்கவும் தெரியவேண்டும்.
No comments:
Post a Comment