Wednesday, December 5, 2018

ஜெ' நினைவு நாள் இன்று... (05/12/2018)


'ஜெ ஜெயலலிதா'- என்னும் நான்...
பிசிரற்ற வெண்கலக்குரல்
அரியர் வைத்தும் அசராத மாணவன்போல்
வென்று..வென்று, தோற்று..தோற்று
ஆறு முறை ஒலித்த ஆளுமை..
தொண்டனை துள்ளவிட்டு
மாற்றானை துவளவிட்டு
'நான்-எனது' என்னும்
ஆணவம்..அதிகாரத்தை,
மைய்யப்படுத்தி..நியாயப்படுத்தி
எதிரியை துவம்சம் செய்யும் ஆற்றல்..
வாழ்வின் தோற்றப்பக்கங்களின்
வலியில் உயிர்த்த மாற்றுப்பக்கங்கள்...
எவருக்கும் அஞ்சா மூர்க்கமும் பிடிவாதமும் ..
அரசியல் அராஜகத்திலும்
அதிகார அடாவடியிலும்
ஆணுக்குப் பெண் வேறில்லையென ஆளுமைகண்ட
இன்னுமொரு இந்திராகாந்தி..
விதி நூற்றுப்பத்திலேயே
சட்ட சபை நடத்தி ,
சட்டசபையில் 144 ஐபிசி கண்ட
துணிச்சலும் தீர்க்கமும்..
ஜெயலலிதாவின் நிழல்கூட
பிடிவாதத்தின் மொத்த உருவமாகி நிற்க-'அவர்
தமிழகம் கண்ட
ஒன் உமன் ஆர்மி என்பார்
அரசியல் மாண்புகள்..
காமராஜ் முதல் அம்மா-வரை
தமிழகம் கண்ட ஆளுமைகள்..
மாற்றுக்கருத்தில்லை,
அனைத்துமே மக்களின் சக்தி..இருப்பினும்
தனக்கென வாழா ,
பிறர்க்கென வாழ்ந்த காமராசு,
வளர்ந்த மக்கள் சக்தி..
தனக்கென வாழா ,
தனக்கென வாழ்ந்த 'ஜெ'
வளைத்த மக்கள் சக்தி
இரண்டுமே தமிழகத்தின்
இருபெரும் ஆளுமைகள்..
இருப்பினும் ஒன்றை வரலாறு பதிவு செய்து முத்திரை குத்தியது..
இன்னொன்றை வரலாறு
பதிவு செய்ய குழம்புகிறது..

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...