Tuesday, December 11, 2018

2019 தேர்தல் - ஒரு முன்னோட்டம் !

நடந்த 3 மாநில தேர்தல் முடிவுகளும் கடந்த சில மாதங்களுக்கு முன் கிடைத்த UP போன்ற முடிவுகளும் பாஜகவிற்கு சாதகமாக இல்லை.
2014 வெற்றிக்கு மிகவும் உதவிய மாநிலங்கள் இவை. இதிலிருந்து மாறுபட்டு மக்கள் அடுத்த முறை வாக்களிப்பார்களா என்பது சந்தேகமே. இதே நிலை தான் தொடரும்.
அப்படி என்றால் 150 -170 இடங்களுக்கு மேல் பாஜக வெற்றி பெறுவது கடிணம்.
ஆனால் இதில் கவலைப்பட வேண்டிய அம்சம் என்னவென்றால் பாஜகவின் தோல்வி காங்கிரஸ் கட்சிக்கு வெற்றியாக அமையாது, காரணம் இந்த 3 மாநிலங்கள் தவிர மற்ற மாநிலங்களில் அந்தந்த மாநில கட்சிகளே வெற்றி பெறும். காங்கிரஸ் அதிக பட்சம் 100 இடங்களை வெல்லலாம்.
ஒரு நிலையற்ற. ‘89 வி.பி. சிங் ஆட்சி போலவோ, ‘96 தேவ கவுடா போலவோ ஆட்சி அமையும். நல்லதோ கெட்டதோ மன்மோகன் ஆட்சி அமைந்தால் கூட பரவாயில்லை, ஆனால் அது நடக்காது.
இந்த நிலை மாற வேண்டும் என்றால்,
ஒன்று மக்கள் மனநிலை மாற வேண்டும், ஆனால் அதற்கான வாய்ப்பு குறைவு.
இரண்டு, ஏதாவது ஒரு நிகழ்வு நடந்து மோடி அலை வீசி வேண்டும், அதற்கான அறிகுறியும் இப்போது இல்லை.
எனவே ஒரு ஸ்திரமற்ற தன்மையை நோக்கி நாடு போக உள்ளது.
வளர்ச்சிக்கு போடப்பட்ட பாதையில் பயணிக்குமா அல்லது திசை மாறுமா என்பதே இப்போதைய கேள்வி ?

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...