Thursday, December 13, 2018

கொய்யா இலையின் பயன்கள் !!

கொய்யா பழத்தின் நன்மைகள் அனைவரும் அறிந்ததே. ஆனால் அதன் இலை, பட்டை, கனி என அனைத்தும் மருத்துவ குணங்கள் உடையது என்பது எத்தனை பேருக்கு தெரியும்.
ஆம்...... கொய்யா பழம் மட்டுமல்ல, அதன் இலைகளும் பல மருத்துவ பயன்களை தன்னுள் இரகசியமாக கொண்டுள்ளது.

அப்படி என்ன என்ன மருத்துவ குணங்கள் உள்ளன என்பதை சற்று விரிவாக பார்க்கலாம்.
கொய்யா இலையின் இரகசியம் :
கொய்யா இலையில் புரதம், விட்டமின்கள் பி6, சி, கோலைன், கால்சியம், இரும்பு, மெக்னீசியம், மாங்கனீசு, பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம், துத்தநாகம் போன்ற ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளன.
கொய்யா இலையை வெயிலில் காய வைத்தோ அல்லது பச்சையாகவோ நீரில் போட்டு கொதிக்க வைத்து டீ தயாரித்து, பின் அதை 12 வாரங்கள் தொடர்ந்து குடித்து வந்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தி நீரிழிவு நோயை குறைக்கும் தன்மை கொண்டது.
30 கிராம் கொய்யா இலையை, ஒரு கையளவு அரிசி மாவுடன் சேர்த்து, 2 டம்ளர் நீரில் கலந்து தினமும் இரண்டு முறை குடித்து வந்தால், வயிற்றுபோக்கிற்கு நல்ல நிவாரணம் கிடைக்கும்.
எடையை குறைக்க விரும்புபவர்கள் கொய்யா இலையின் சாறு எடுத்து, அதோடு தேன் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் விரைவில் எடை குறையும்.
எட்டு கொய்யா இலையை ஒன்றரை லிட்டர் தண்ணீரில் போட்டு காய்ச்சி வடிகட்டி, தினமும் மூன்று முறை குடித்து வர தீராத வயிற்று வலி காணாமல் போய்விடும்.
மேலும் இதில் கொழுப்பு இல்லாததால் பெருங்குடலை நச்சு தன்மையில் இருந்து பாதுகாக்க உதவுகிறது.
வாயில் ஏற்படும் பல் வலி, ஈறு பிரச்சனைகள், வாய்ப்புண் மற்றும் தொண்டைப் புண் ஆகியவற்றை சரி செய்ய கொய்யா இலையில் டீ செய்து சாப்பிடலாம். சாதாரணமாக வாயில் போட்டு மென்றும் சாப்பிடலாம்.
கொய்யா இலையில் டீ போட்டு அருந்தும் பொழுது, உடலில் உள்ள கெட்டக் கொழுப்புகளை குறைத்து, நல்ல கொழுப்புகளை பராமரித்து கல்லீரலுக்கு சிறந்த டானிக்காக பயன்படுகிறது.
கொய்யா இலையை தண்ணீரில் கொதிக்க வைத்து குளிர்ந்த பிறகு தலையில் மசாஜ் செய்து வந்தால் முடி உதிர்வது நின்று முடி பலம் பெறும்.
செரிமான பிரச்சனை உள்ளவர்கள், கொய்யா இலையின் டீயை தொடர்ந்து குடித்து வந்தால், செரிமான நொதிகள் தூண்டப்பட்டு, வயிற்றில் உள்ள பாக்டீரியாக்களை un அழித்து, செரிமானம் நன்கு நடைபெறும்.
கொய்யா இலையில் கஷாயம் செய்து தொடர்ந்து குடித்து வந்தால் தைராய்டு சுரப்பு சமநிலைக்கு வரும்.
கொய்யா இலையில் தயாரிக்கப்படும் கஷாயமானது இருமல் மற்றும் இதய சம்பந்தமான நோய்களுக்கு நல்ல தீர்வாக அமைகிறது.
கொய்யாவில் உள்ள ஆண்டி-ஆக்ஸிடன்டுகள் கட்டிகளின் வளர்ச்சிகளை தடுக்கின்றன. உடலை புற்றுநோயிலிருந்து பாதுகாக்கிறது.
இவ்வளவு நன்மைகள் உடைய கொய்யாவை வீட்டு தோட்டங்களில் எளிதாக வளர்க்கலாம்.
இதன் மருத்துவப்பயன்கள் அதிகம் என்பதால் நம் வீட்டு தோட்டத்தில் இதை வளர்ப்பது கூடவே மருத்துவரை வைத்திருப்பதற்கு சமம்.
எனவே தவறாமல் இந்த மருத்துவரை உங்கள் வீட்டில் வைத்திருங்கள்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...