Saturday, December 15, 2018

எங்கிருந்து ஆரம்பிக்கிறது?

* நீ எதும் பண்ணாமயா அண்ணன் அடிச்சான்? பொட்டக் கழுத, கை கால் ரொம்பத்தான் நீளம்.
* ஃபோன் அடிக்குது, எடுத்தா கட் ஆகுது. நீதான் யாருக்காச்சும் நம்பர் குடுத்துருப்ப. யாருனு சொல்றியா? தோல உரிக்கவா?
* அந்த மாமா வந்தா மரியாதையா போய் பேசு. அவரு வந்தாவே ஏன் ஓடி ஒளியுற? என்ன நினைப்பார்? எவ்ளோ ஆசையா பக்கத்துல உக்காத்திப் பேசுறாரு?
* அவரத் தப்பா பேசுற வயசா உனக்கு? பிஞ்சுலயே பழுத்தது.. வாய மூடு.
* இந்த வயசுல ப்ரா வாங்கித் தர சொல்ற? எங்களுக்குத் தெரியும். எப்போ என்ன பண்ணனும்னு. இதெல்லாம் பேச வெக்கமா இல்ல?
* போனமா வந்தமான்னு இருக்கணும். அவன் பாத்தான், இவன் இடிச்சான்னு வந்து ஒளரிட்டு இருக்காதே.
* நீ ஒழுக்கமா இருந்தா யார் என்ன பண்ணப் போறாங்க? கண்ணாடி முன்னாடி நின்னு எந்நேரமும் மேக் அப். அப்ரம் அப்டிதான் ஆகும்.
இதை எல்லாம் இங்கிருக்கும் பெண்கள் கடந்திருக்கக் கூடும். என்ன நடக்கிறது தனக்கு என வெளியே சொல்ல, ஏன் பெற்றோரிடம் சொல்லக் கூட சுதந்திரம் இருப்பதில்லை.
11 வயதில் வயதுக்கு வந்த உறவுக்காரச் சிறுமியைப் பார்த்து, ஒரு பெண் பேசியது:
இது, இப்போவே வயசுக்கு வந்துருச்சு. குடும்பம் நடத்த இப்போவே இதுகளுக்கு அவசரம்.
எத்தனை குரூரம் இந்த வார்த்தைகளில்.
யோசிக்க வேண்டிய விஷயங்கள் நிறையவே இருக்கின்றன. இப்பொழுதேனும் விழித்துக் கொள்வோம்.
Couldn't have said better.... parents need to understand and respect daughters.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...