Sunday, December 9, 2018

ஏராளமான ஓட்டை.

இந்தியாவில் இயற்றப்படும் ஒவ்வொரு சட்டமும், அத்துமீறலுக்கு வழி வகுக்கிறது. மக்கள் மீது பெரும் சுமையாய் விழுகிறது. ஒரு பள்ளிக்கூடத்தில் திடீர் தீ விபத்து. அவ்வளவு தான். ஒரு சட்டம் வந்து புதிதாய் குதிக்கும். வேன் கவிழ்ந்து விட்டது. அவ்வளவு தான். ஏராளமான நிபந்தனைகளுடன் சட்டம் போடப்படும். சிறுமி கற்பழிப்பு. கும்பல் வன் கொடுமை. எதற்கெடுத்தாலும் சட்டம். அதன் மீதான நிர்ப்பந்தம். தப்பிக்க ஏராளமான ஓட்டை. சந்து. பணம் வெட்டு. மாமூல் கொடு. அதே குற்றம் முன்னெப்போதையும் விட மிக மூர்க்கத்தனமாக, வெளிப்படையாக அரங்கேறும். பட்டப்பகலில் பேருந்து நிலையத்தில் ஆஸிட் வீச்சு. பெண் படுகொலை. பஸ் எரிப்பு. தொடர்கதை. சட்டம் தன் கடமையைச் செய்யும். சட்டத்திற்கு முன் அனைவரும் சமம். சட்டம் பாயும். மிரட்டல் சொற்கள். குடிமக்களை எந்தப் பக்கமும் நகர விடாமல், கிடுக்கிப்பிடி. கொடூர விலங்கு. கழுத்தைச் சுற்றிலும் இரும்பு வளையம். செயற்கையான நெருக்கடி. யாருமே இங்கு நிம்மதியாக வாழக் கூடாது. இப்படித்தான் சட்டத்தின் ஆட்சி நடக்கிறது. சட்டத்தின் யோக்யதையை புள்ளிவிவரம் மட்டுமே பறைசாற்றும். எல்லா கோணங்களிலும் குற்றம் பன்மடங்கு அதிகரிக்கிறது. தீர்வு என்ன ? புதிய சட்டம் போடுவதை விட ஏற்கெனவே போடப்பட்ட சட்டத்தைத் தீவிரமாக அமுல்படுத்தலாம். தண்டனை, குறிப்பிட்ட காலத்திற்குள் பாரபட்சமின்றி வழங்கலாம். வழக்கு இழுத்தடிப்பு கூடாது. சொத்து பறிமுதல், வங்கிக் கணக்கு முடக்கம், உடல் அங்கம் சிதைப்பு குற்றவாளியைக் கவலைக்குள்ளாக்கும். 

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...