இந்து நம்பிக்கையில் சைவம், வைணவம், கணபதியம், கௌமாரம் என சில உட்பிரிவுகள் உண்டு. ஒவ்வொரு பிரிவுக்கும் ஒரு கடவுள் முதன்மையானவராக இருப்பார். கோவில்கள், புராணங்கள், சங்ககால பாடல்கள், மடங்கள் போன்றவையும் ஒவ்வொரு பிரிவுக்கும் தனித்தனியாக இருக்கும். தமிழகத்தில் பழங்காலத்தில் கட்டப்பட்ட கோவில்களில் ஒரே கோவிலில் விஷ்ணுவையும், சிவனையும் மூலவராக பார்ப்பது மிகமிக அரிது. அந்தக் கோவில் எங்கே உள்ளது, என்வெல்லாம் சிறப்பு என பார்க்கலாம் வாங்க...
மும்மூர்த்திகளில் ஒருவரான பிரம்மாவுக்க இந்தியாவில் மொத்தம் மூன்றே கோவில்கள் தான் இருக்கின்றன.
எங்கே உள்ளது ?
இப்படியிருக்க விஷ்ணு, சிவன், பிரம்மா ஆகிய மூவரும் ஒரே ரூபமாக இருக்கும் கோவில் தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ளது.
சுசீந்தரம் தனுமலயான் கோவில்...
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுசீந்திரம் என்ற ஊரில் அமைந்திருக்கிறது தாணுமாலயன் கோவில்.
தலவரலாறு...
இக்கோவிலானது வைணவம் மற்றும் சைவம் ஆகிய இரு பிரிவுகளுக்கும் உரிய கோவிலாக திகழ்கிறது. தாணுமாலயன் என்ற இக்கோவிலின் பெயரே மும்மூர்த்திகளின் பெயரை உள்ளடக்கியிருக்கிறது. தாணு என்பது சிவபெருமானையும், மால என்பது பெருமாள் விஷ்ணுவையும், அயன் என்பது பிரம்மாவையும் குறிக்கும் சொல்லாகும்.
சுசீந்தரம் தாணுமாலயன் கோவில் 17ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. தற்போது, இந்த கோவில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த நம்பூதிரிகளின் கட்டுப்பாட்டில் இருந்திருக்கிறது. குறிப்பாக தீக்குமொன் மடம் என்ற நம்பூதிரி குடும்பத்தினர் பரம்பரை பரம்பரையாக இக்கோவிலை நிர்வகித்து வந்திருக்கின்றனர்.
சுசீந்தரம் தாணுமாலயன் கோவில் 17ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. தற்போது, இந்த கோவில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த நம்பூதிரிகளின் கட்டுப்பாட்டில் இருந்திருக்கிறது. குறிப்பாக தீக்குமொன் மடம் என்ற நம்பூதிரி குடும்பத்தினர் பரம்பரை பரம்பரையாக இக்கோவிலை நிர்வகித்து வந்திருக்கின்றனர்.
காணக்கிடைக்காத வரம்...
இந்த கோவிலின் மூலவராக மும்மூர்த்திகளான சிவன், விஷ்ணு மற்றும் பிரம்மா ஆகியோர் இணைந்து ஒரே ரூபமாக தாணுமாலயனாக காட்சியளிக்கின்றனர். இப்படி முமூர்த்திகளையும் ஒரே ரூபமாக பார்ப்பது அரிதிலும் அரிதானதாகும்.
கட்டிடக் கலை.....
17-ஆம் நூற்றாண்டு திராவிட கட்டிடக்கலையின் எடுத்துக்காட்டாக திகழும் இக்கோவிலில் ஏழு அடுக்குகள் கொண்ட பிரம்மாண்ட கோபுரம் ஒன்றும் இருக்கிறது. இது தவிர இன்னும் ஏராளமான கட்டிடக்கலை அதிசயங்கள் இக்கோவிலினுள் இருக்கின்றன. இதில் குறிப்பிடத்தக்க விசயம், தாணுமாலயன் கோவிலில் ஒரே கல்லினால் செய்யப்பட்ட 5.5 மீட்டர் உயரமுள்ள நான்கு மிகப்பெரிய இசைத்தூண்கள் உள்ளன. அலங்கார மண்டபம் என்ற பகுதியில் இருக்கும் இந்த இசைத்தூண்களை தட்டினால் சப்தசுவரங்களில் இசை வெளிப்படுவது பிரம்மிப்பின் உச்சம்.
இந்தியாவில் மிகப்பெரிய நந்தி சிலை...
இக்கோவிலில் தான் 22 அடி உயரமுள்ள ஒரே கல்லினால் செய்யப்பட்ட ஆஞ்சநேயர் சிலையும், 13 அடி உயரமும், 21 அடி அகலமும் கொண்ட நந்தி சிலையும் இருக்கின்றன. இந்த நந்தி சிலை இந்தியாவில் இருக்கும் மிகப்பெரிய நந்தி சிலைகளில் ஒன்றாக கருதப்படுகிறது.
திருவிழா....
தாணுமாலயன் கோவிலின் முக்கிய திருவிழாவாக இருப்பது டிசம்பர் அல்லது ஜனவரி மாதத்தில் 10 நாட்கள் கொண்டாடப்படும் தேர் திருவிழா தான். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு ஊர்கூடி தேர் இழுப்பது பரவசத்தின் உட்சமாக இருக்கும். ஏப்ரல் அல்லது மார்ச் மாதங்களில் கொண்டாடப்படும் தெப்பம் என்னும் திருவிழாவும் இங்கு நடக்கும் முக்கியமான திருவிழாக்களில் ஒன்றாகும்.
மிஸ் பண்ணிடாதீங்க...
அடுத்த முறை கன்னியாகுமரிக்கு செல்ல வாய்ப்பு கிடைத்தால், கண்டிப்பாக இந்த தாணுமாலயன் கோவிலுக்கும் தவறாமல் சென்று வாருங்கள்.
பேருந்து வசதிகள்
நகேர்கோவிலில் இருந்து கன்னியாகுமரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.....
வடசேரி பேருந்து நிலையத்தில் இருந்து கிழக்கு நோக்கி செல்லும் கன்னியாகுமரி பேருந்து களில் செல்லாம்.
வடசேரி பேருந்து நிலையத்தில் இருந்து கிழக்கு நோக்கி செல்லும் கன்னியாகுமரி பேருந்து களில் செல்லாம்.
No comments:
Post a Comment