தெருவையடைத்து போடும் கோலங்கள், அதன்மேல் வைக்கப்படும் அழகான பரங்கிப்பூக்கள்,கொட்டும் பனியிலும் விடியற்காலை குளித்து பாவை நோன்பிருக்கும் ,பெண்கள், தேவார திருவாசகங்கள் ஒலிபெருக்கியில் இசைக்கும் கோயில்கள், பொங்கல் வாங்குவதற்காக கோயில்களில் குளிரில் நடுங்கிக்கொண்டு காத்திருக்கும் சிறார்கள்...இந்த காட்சிகள் நிறைந்ததுதான் நான் பிறந்து வளர்ந்த குடந்தை மாநகரம்.
எங்கள் வீடு தெற்குபார்த்தவீடு.இளஞ்சூரியனின் கதிர்கள் அங்குதான் விழும்.எங்கள் வீட்டுத் திண்ணை மிகவும் பெரியது.குளிர்காய்வதற்காக வயதானவர்கள் சிறிய குழந்தைகளுடன் அங்கே கூடிவிடுவார்கள் ஊர்கதைகளை பேசிக்கொண்டு.
மாலை நேரமானால் நாளை என்ன கோலம் போடுவது என்ற டிஸ்கசன் பெண்களிடத்தில் சீரியசாக நடக்கும்.
மாலை நேரமானால் நாளை என்ன கோலம் போடுவது என்ற டிஸ்கசன் பெண்களிடத்தில் சீரியசாக நடக்கும்.
எனக்குத் திருமணமான பின் இந்த காட்சிகளை எங்குமே என்னால் பார்க்க முடிவதில்லை.
ஏக்கமாக இருக்கும்.என்னசெய்வது...எல்லாமாற்றங்களையும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் .மார்கழி மாதநினைவுகளுடன்...
இந்த நாள் இனிய நாளாகட்டும்.
No comments:
Post a Comment