''தாத்தா, எங்க டீச்சர் இன்னிக்கும் ''உலக அதிசயங்கள் ஏழு தெரியுமா? என்று கேட்டாள் . எனக்கு தெரியலை. உனக்கு தெரியுமா. சொல்லு '' என் தாத்தாவை கேட்டான்.
''அடே பயலே, எனக்கு தெரிந்த ஏழு அதிசயங்கள் வேறே . புத்தகங்களில் இல்லாதது. தனியாக அதற்கு படமும் கிடையாது'' என்றேன்.
''அது என்ன தாத்தா அப்படிப்பட்ட 7 அதிசயங்கள்?
''உனக்கு சொன்னால் புரியுமா என்று தெரியவில்லை. இருந்தாலும் ஒரு நாள் உனக்கும் தெரிந்து தானே ஆகவேண்டும். அதை இப்போதே தெரிந்து கொள்ளேன்.
1. உங்க அம்மா இருக்கிறாளே அவள் தான் இந்த உலகில், அதாவது உன் வாழ்க்கையில் முதல் அதிசயம்.
'' என்ன தாத்தா சொல்றீங்க நீங்க?
'' ஆமாண்டா, அவள் தாண்டா உன்னை இந்த உலகத்திலேயே வரவேற்ற முதல் மனுஷி''.
'' ஆமாண்டா, அவள் தாண்டா உன்னை இந்த உலகத்திலேயே வரவேற்ற முதல் மனுஷி''.
2. உங்க அப்பா இருக்கிறாரே அவர் தான் ரெண்டாவது அதிசயம். நீ சிரித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்று என்ன பாடெல்லாம் பட்டிருக்கிறார் என்று உனக்கு தெரியுமா?''
3 ''எது உனக்கு வேண்டுமோ அதை மற்றவரோடு பகிர்ந்து கொள்ள வைத்த, பாசம் என்றால் என்ன என்று புரிந்து கொள்ள உதவிய முதல் ஜீவனை கொடுத்தவர். . எனவே தான் உன்னுடன் கூடப் பிறந்தவனோ/(ளோ ) தான் மூன்றாவது அதிசயம்.
'' போதும் போதும்'' என்று நான் ஓடிவிட்டாலும் அருகில் இருந்த கமலா டீச்சர் ''தாத்தா சார் மேலே சொல்லுங்க, குழந்தைக்கு என்ன புரியும். எனக்கு சொல்லுங்க'' என்றாள். அடுத்த வீட்டுக்காரி. பேசாமல் வந்து இதுவரை நான் பேசியதை எல்லாம் கேட்டுக்கொண்டிருந்தவள்.
4. ''நண்பனோ நண்பியோ தான் வாழ்வில் நான்காவது அதிசயம். விசால புத்தி, மனோபாவம், மற்றவரை புரிந்து கொள்ளும் தாராள மனம் நட்பு என்று ஒருவரை ஒருவர் நேசிக்கும் ஸ்வபாவம் வர காரணமானவர்கள்.
5. அடுத்தது. குறைகளை நோக்காமல் நிறைகளை மட்டுமே பார்க்கும் தன்மை யாரால் முதலில் வந்தது என்றால் உன் மனதை முதலில் கொள்ளை கொண்ட பெண்ணோ ஆணோ தான். உலகையே, பெற்றோரையோ, மற்றோரையோ, அவனுக்காகவோ, அவளுக்காகவோ எதிர்க்கும் தைரியம் வந்தது அந்த அதிசயப் பிறவியால் தான். எனவே அந்த ஜீவனே வாழ்வில் கண்ட ஐந்தாவது அதிசயம். மனைவியோ கணவனோ.
6. ஆறாவது அதிசயம் என்ன தெரியுமா? உன் பிள்ளையோ பெண்ணோ தான் .
உன்னை சுயநலமற்றவனாக மாற்றிய முதல் ஜீவன். உன்னைவிட மற்றவர் நலம் பற்றி நீ அறிய, எண்ணங்கள் உன் மனதில் உதிக்க, வைத்த அபூர்வ பிறவி. பிள்ளைக்கோ பெண்ணுக்கோ விட்டுக்கொடுக்காத, தியாகம் செய்யாத அப்பனோ அம்மாவோ உலகிலேயே இல்லையே.
உன்னை சுயநலமற்றவனாக மாற்றிய முதல் ஜீவன். உன்னைவிட மற்றவர் நலம் பற்றி நீ அறிய, எண்ணங்கள் உன் மனதில் உதிக்க, வைத்த அபூர்வ பிறவி. பிள்ளைக்கோ பெண்ணுக்கோ விட்டுக்கொடுக்காத, தியாகம் செய்யாத அப்பனோ அம்மாவோ உலகிலேயே இல்லையே.
''அசாத்தியமாக இருக்கிறது சார்'' கடைசி ஏழாவது அதிசயம் என்று எதை சொல்ல்லப்போறீங்க?'' -- கமலா..
7. வாழ்க்கையிலே இன்னும் என்னம்மா பாக்கி இருக்கு. கடைசியாக இது தான் ஏழாவது அதிசயம் என்று கொள்வது ஒருவனது பேரன் பேத்தி தான்..
''அடே தாத்தா, பாட்டியே , உனக்கு மீண்டும் உலகில் வாழவேண்டும் என்ற ஆசையை, எண்ணத்தை முதலில் வளர்த்த அதிசயங்கள். திரும்பவும் உன் வாழ்க்கை சக்கரம் உருண்டோட காரணமானவர்கள் இந்த அற்புதன் பேரன் பேத்திகள் தானே. அவர்களுக்காக நீ டான்ஸ் ஆடலையா , பாடலையா, குதித்து தூக்கிக்கொண்டு ஓடி விளையாடவில்லையா. சிலர் குட்டிக்கரணம் கூட போட்டதில்லையா? அப்படியென்றால் இது நிச்சயம் அதிசயமில்லையா?''.
பின்குறிப்பு: நம் குடும்பமே ஒரு அதிசயம் தான். நாம் எப்படி அதிசயத்தை வெளியில் தேடுகிறேமோ, அதுபோல் மகிழ்ச்சியையும் நம்முள்ளே வைத்துக்கொண்டு, வெளியில் தேடுகிறோம்.
நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் என்பதற்கு இதுவே ஆதாரம்.
No comments:
Post a Comment