59 நிமிடத்தில் தொழில் கடன் வழங்கப்படும் என்பது ஏமாற்று வேலை என்று கூறும் குற்றச்சாட்டு உண்மையா? நரேந்திர மோடி அவர்களின் இந்த முயற்சி எந்தவிதம் வெற்றி அடையும்?? {கேள்வி: சிவா}
எந்நேரமும் நரேந்திர மோடி ஒழிக என்று பரப்பனும் இது ஒரு வேலை இங்கே சிலருக்கு!! அதை வெறுப்பின் காரணமாக சிலர் செய்கிறார்கள் தவிர இந்தத் திட்டத்தை என்னால் முடிந்த அளவு எளிமையாக விளக்குகிறேன்- பின் கொஞ்சம் நீங்களே சிந்தியுங்கள் நரேந்திர மோடி முயற்சி சரியா தவறா என்று.
நம் நாட்டில் பெரும்பாலும் வேலை தேடுவதில் தான் படித்து முடித்தவர்களுக்கு ஆர்வம் இருக்கிறதே தவிர இங்கே தொழில் சார்ந்த சிந்தனை குறைவு. அப்படியே நீங்கள் தொழில் தொடங்க விரும்பி தொழில் கடன் சார்ந்து அரசு அலுவலகங்களுக்குச் சென்றால் ஏண்டா தொழில் தொடங்க விரும்பினோம் என்று நினைக்கும் அளவுக்கு உங்களை எரிச்சல் அடையச் செய்துவிடுவார் நமது கடமை உணர்வு உள்ள அரசு ஊழியர்கள்.
-----------------------------------------
நரேந்திர மோடி அவர்கள் பதவிக்கு வரும் முன் என்ன நடந்து கொண்டிருந்தது?
-----------------------------------------
நரேந்திர மோடி அவர்கள் பதவிக்கு வரும் முன் என்ன நடந்து கொண்டிருந்தது?
25 லட்சம் தொழில் கடன் கேட்டு நீங்கள் விண்ணப்பிக்க விருப்பினால் அதில் 10%, 15% கமிஷன் நமது அரசு ஊழியர்களுக்குக் கொடுக்க வேண்டும். அத்துடன் அரசு மானியம் கொடுக்கும் தொகையில் ஒரு பகுதியையும் கொடுக்க வேண்டும். அப்படி நீங்கள் தாராள மனதுடன் வந்தால் உங்களுக்கு அங்கே வேலை நடக்கும்.
Micro, Small and Medium Enterprises (MSME) கீழ் இருக்கும் Small Industries Development Organisation (SIDO), National Small Industries Corporation Limited (NSIC), Mahatma Gandhi Institute of Rural Industrailisation (MGIRI) என்று பல அமைப்புகள் கொண்டு அரசு சிறுகுறு தொழில் முன்னேற்றத்திற்கு ஒதுக்கும் நிதிகள் இந்த விதம் தான் காலம் காலமாக செல்கிறது. இதைத் தடுக்கவே முடியாத அளவு அரசு ஊழியர்கள்- அரசியல்வாதிகள் அட்டுழியம் அதிகம். இதே போல் தான் வங்கிகள் மூலம் கிடைக்கும் கடன்களும் பெரும்பாலும் அதிகாரிகளுக்கு 10%,15% வரை கமிஷன் பேசி - தொழில் தொடங்க விரும்பும் அனைவரையும் நோகடித்து அனுப்புவர். லஞ்சம் கொடுத்து நாட்டையும் கெடுத்து ஏமாற்றும் கூட்டத்திற்கு தான் எளிதில் கடன்கள் கிடைத்து வந்தது.
மத்திய அரசின் கீழ் இயங்கிய இந்த அமைப்புகள் மற்றும் வங்கிகள் மூலம் நடைபெற்ற பெரும்பாலான கடன் வழங்கும் விஷயத்தை முறைப்படுத்துவது தான் நரேந்திர மோடி அவர்களுக்கு இருந்த மிகப் பெரிய பிரச்சனை.
எதற்கு அரசின் திட்டத்தில் கடன் வாங்க விரும்புகிறோம்??? ஒன்று குறைவான வட்டி , இரண்டு மானியம் கிடைக்கும் என்பதால். ஆனால் அதைப் பயன்படுத்து அரசு ஊழியர்கள் அட்டூழியம் தாங்க முடியாது. அது இன்று ஏறக்குறைய முடிவுக்கு வந்துள்ளது.
இப்போது என்ன மாதிரியான நிலை மாறியுள்ளது????
நீங்கள் அதிகாரிகளிடம் சென்று நிற்க வேண்டாம் , தொழில் தொடங்க விரிவு படுத்த விரும்பும் நீங்கள் உங்கள் 2வருட வருமான வரி கணக்கு விவரங்களை மத்திய அரசின் இந்த psbloansin59minutes வெப்சைடில் பதிவேற்றம் செய்ய அரசு உங்களுக்கு எவ்வளவு கொடுக்க முடியும் என்பதை வெளிப்படையாகத் தெரிவித்து விடுவர். உங்களுக்குச் சரி என்றால் GST , IT document , 6 month bank details , நிறுவனத்தின் பதிவு விவரம் இதைக் கொடுக்க அடுத்த 6மணிநேரத்தில் உங்களுக்குக் கடன் ஒப்புதல் கிடைக்கும் - அடுத்த சில தினங்களில் உங்கள் வங்கி கணக்கிற்கு வந்து சேரும்.
இப்போது அதிகாரிகள் தொல்லைகள் முடிவுக்கு வந்துள்ளது ஒருபுறம் என்றால் - போலியாக ஆவணங்கள் காட்டுவது குறைந்துள்ளது. உங்கள் தகுதி என்ன அதற்கு என்ன கிடைக்கும் என்பது வெளிப்டையாக மாறியுள்ளது. {இது இந்த லோனில் மட்டும் அல்ல அனைத்து வகையான கடன்களுக்கும் இப்போது நிர்வாக வழிகாட்டுதல் தெளிவாக மாறியுள்ளது. வங்கி அதிகாரிகளிடம் இருந்த பவர் பெரும்பாலும் பிடுங்கியுள்ளது அரசு. அனைத்தும் நேரடியாக department of financial services மூலம் நேரடியாக வேலை முடிகிறது.}
இதற்கு முதலில் நாம் அரசுக்கு உண்மையில் நன்றி தெரிவிக்க வேண்டும். அரசு அதிகாரிகள் ஆடிய ஆட்டத்தை கட்டுப்படுத்தி அரசும் மக்களுக்கும் இடையே இடைத்தரகர்கள் போல வேலை செய்து திரிந்த இந்தக் கூட்டத்தை ஒடுக்கி நேரடியாக அனைத்து மானியங்களையும் கொண்டு சேர்த்தவர் நரேந்திர மோடி அவர்கள். அதே போல இந்த வங்கிக் கடன் விவகாரத்தையும் முறைப்படுத்தியுள்ளார்.
--------------------------------------------------------------
அதுசரி சார்.. ஆனால் இதுவரை வருமான வரி கட்டியது இல்லை. நாங்கள் எப்படி இந்தக் கடனை பெறுவது?????
--------------------------------------------------------------
அதுசரி சார்.. ஆனால் இதுவரை வருமான வரி கட்டியது இல்லை. நாங்கள் எப்படி இந்தக் கடனை பெறுவது?????
நரேந்திர மோடி அவர்களைப் பொறுத்தவரை படித்த அனைவருமே வருமான விவரத்தைக் காட்ட வைக்க வேண்டும் என்று முனைப்பாக இருக்கிறார். காரணம் யாருக்கு என்ன உதவிகள் செய்ய வேண்டும் என்று அப்போது தான் தெளிவாகத் திட்டமிட முடியும். ஆனால் அதையும் அவர் கட்டாயபடுத்திட விரும்பவில்லை. எனவே தான் Pradhan Mantri MUDRA Yojana (PMMY) இன்னொரு பக்கம் தொடக்கி வைத்தார்.
இதில் முதலில் அனைவருக்கும் Rs.50,000 வரை கடன் கொடுக்க ஏற்பாட்டினை செய்தார். அது வங்கிகளில் நேரடியாக வரவு வைத்தார். இந்தக் கடன் தொகையைச் சரியாக திருப்பிச் செலுத்திய நபர்களுக்கு 5லட்சம் வரை தொழில் கடன் வழங்க வழிவகை செய்தார். அதிலும் நீங்கள் முறையாகச் செலுத்தி உங்கள் திறமையை நேர்மையைக் காட்ட உங்களுக்கு 10 லட்சம் வரை வழங்கவும் வழிவகை செய்துள்ளது. {50,000 வரை Shishu ,5லட்சம் வரை Kishor, 10 லட்சம் வரை Tarun என்று முத்ரா வங்கி மூலம் கடன் கொடுப்பது நடைமுறையில் உள்ளது.}
கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 2,48,22,342 பேருக்கு இந்த விதம் கடன் வழங்கியுள்ளது அரசு , அதற்கு முந்தைய இரண்டாண்டுகளில் சுமார் 7.5கோடி கடன் தேவைக்கான அக்கவுண்ட ஒப்பன் ஆகியுள்ளது. உங்களைச் சுற்றி பலரிடம் கேளுங்கள் கண்டிப்பாக 50,000 - 1,00,000 தொழில் கடன் இந்த முத்ரா வங்கியின் மூலம் பெற்றவர்கள் நிச்சயம் இருப்பர்.
எனவே இப்போது அரசு மிகத் தெளிவாக , வெளிப்படையாகத் தான் இதைச் செய்கிறது. எதுவும் தரவில்லை என்று பேசுவது நியாயம் இல்லை. வாங்கி நாம் என்ன முயற்சி செய்தோம் என்று மக்களாகிய நாம் தான் சிந்திக்க வேண்டும். இந்த விதம் சிறுக சிறுக முன்னேறிவிட்ட பின் நீங்கள் 25லட்சம் , 50 லட்சம் என்று1கோடி வரை அரசிடம் கடன் பெற்றுக்கொள்ளத் தான் psbloansin59minutes அறிமுகம் ஆனது. {எதுவுமே செய்யாமல் வெறும் Facebook , Whatspp உக்காந்து கொண்டு எவனையாது திட்டிக் கொண்டு இருக்கும் கூட்டம் எந்நேரமும் அரசையும் , நாட்டையும் குறை சொல்லுமே தவிர அந்தக் கூட்டம் என்றும் திருந்தாது.}
1லட்சம் , 50,000 த்தில் என்ன பிசினஸ் செய்ய முடியும் என்று நக்கல் பேசாதீர் - 10,000ரூபாயை 15,000ரூபாயாக மாற்ற என்னிடம் திட்டம் இருந்தால் அது தான் தொழில் வியாபார புத்தி. அந்தப் புத்தி வரவேண்டும் - அடுத்து தொழில் தொடக்கி ஒரு வாரத்தில் 1லட்சம் சம்பாரிபேன் , 2 வருடத்தில் 2கோடி சம்பாரிப்பேன் என்று எதையாது கற்பனை குதிரையை ஓட விட்டுக் குழப்பாமல் படிப்படியே உயர்வை நோக்கி நகரத் திட்டம் நம்மிடம் இருக்கும் என்றால் நரேந்திர மோடி அவர்கள் வகுத்துக் கொடுத்துள்ள இந்த வழி நிச்சயம் நமக்குப் புரியும்.
-----------------------------------------------------------------
-----------------------------------------------------------------
இறுதியாக :
500 கோடி , 1,000கோடி என்று பெரும் தொழில் அதிபர்களுக்கு மட்டும் வழங்கி ரிஸ்க் எடுப்பதை விட நாடு முழுவதும் தொழில் தொடங்க நினைக்கும் மக்களுக்கு 1லட்சம் , 10லட்சம் என்று கொடுத்து முயற்சிப்பது இன்னும் நல்ல முயற்சியாக இருக்கும் - அதன் மூலம் நாடு முழுவது தொழில் சார்ந்த சிந்தனை அதிகரிக்கும் உற்பத்தி அதிகரிக்கும் அத்துடன் அரசுக்கு வெளிப்படையாக விவரங்கள் தெரியவரும் என்று நினைக்கிறார். எளிமையாகக் கூறினால் 100கோடியை ஒருத்தருக்குக் கொடுத்து ரிஸ்க் எடுப்பதை விட அதை 10,000பேருக்கு 10லட்சமாகக் கொடுத்து முயற்சித்துப் பார்க்கலாம் என்று நினைக்கிறார் நரேந்திர மோடி அவர்கள். அதில் ஆவணங்கள் முறைப்படுத்தி வெளிப்படைத் தன்மை கொண்டு வருவதன் மூலம் வெற்றி பெறலாம் என்று நினைக்கிறார்.
இப்போது மக்கள் நாம் என்ன செய்யவேண்டும்???? நாம் நம்பக்கம் தேவையான முயற்சியை எடுத்து வைக்கவேண்டும். நீங்கள் செய்ய வேண்டியது மிக எளிது
Apparels , Machinery , consumer Electronics , Textile , Leather products, chemicals , Packaging, Food products இப்படி எதில் என்ன தொழில் செய்யலாம் எப்படிச் செய்யலாம் என்று தேடுங்கள். எடுத்துக்காட்டுக்கு leather patch making machine எல்லாம் சும்மா வீட்டில் வைத்துச் செய்யும் அளவுக்குச் சின்ன அளவில் மேசின்ஸ் உண்டு. வீட்டில் இருக்கும் நபர்களுக்கு அந்த விதம் குட்டி குட்டி மெசின்ஸ் வாங்கிப் போட்டு உற்பத்தி செய்ய முயற்சிக்கவும். வீட்டில் நாடகம் பார்த்துக்கொண்டே இதையும் பெண்கள் செய்யலாம். அரசு குறைந்த வடியில் கடன் தருகிறது - அதை வாங்கி வீட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த நாம் தான் சிந்திக்க வேண்டும். எனக்குத் தெரிந்து நரேந்திர மோடி அவர்கள் அவர் பக்க வேலையைச் சிறப்பாக இந்த விசயத்தில் செய்துள்ளார் - மக்கள் நாம் தான் கொஞ்சம் மாறவேண்டும்.
வருமானவரியைத் தாக்க செய்யாதவர்கள் முத்ரா வங்கியைப் பயன்படுத்துங்கள் - தாக்கல் செய்தவர்கள் கொஞ்சம் psbloansin59minutes பயன்படுத்துங்கள். கட்டாயம் அனைவரும் முயற்சி செய்யுங்கள். அரசுக்கு எதையும் மறைக்கக் நினைக்க வேண்டாம் நேர்மையாக வருமான விவரங்களைக் காட்டுங்கள் அது நீடித்த பலனை தரும்.
"எதை நீ பின் தொடர்கிறாய் - நீயும் அதுவாகவே மாறுவாய்". எந்நேரமும் எவர் மீதாது வெறுப்பை பேசிட்டே திரிவது உங்களுக்கு வெறுப்பான ஒரு வாழ்வைத் தருமே தவிர நல்லது நடக்க வாய்ப்பில்லை. நல்லதைத் தேடி பின்தொடருங்கள் நல்லது நடக்கும். ஒன்றும் மட்டும் உறுதியாக கூறுகிறேன் கம்யுனிஸ்ட், திக கூட்டத்திடம் மட்டும் சேரவே சேராதீர்.இவனுகளுக்கு வெறுப்பைப் பரப்புவதை தவிர எதுவும் வராது.
No comments:
Post a Comment