1) பரம் = மேலான குன்று தோறும் குமரன் அருள்பாலித்தாலும் இக்குன்று மேலான குன்று என்று பெயரிலேயே பெருமை சேர்க்கப்படுகிறது. இது ஒரு குடவரை கோயில்.
2) ஆறு படை வீடுகளிலேயே முதல் படைவீடு எனப்படுகிறது.காரணம் இங்குதான் சுப்பிரமணிய சுவாமி குருநாதர் திருக்கோலத்தில் இருந்து நமக்கு குருவருள் பாலிக்கிறார்.
3) ஞான சக்தி எனப்படும் வலது திருவடியை தாமரை மலரில் பதித்து நமக்கு பரஞானத்தை அருள் பாலிக்கிறார். கிரியா சக்தி எனப்படும் இடது திருவடியை மூலாதாரத்தில் வைத்து அழுத்தி யோக நிலையை நமக்கு உபதேசம் செய்கிறார் பெருமான்.
4) நாராயண மந்திரத்தை இடைவிடாது
ஓதும் நாரத முனிவர் பெருமானுக்கு வலது புறத்தில் மண்டியிட்டு சின்முத்திரை காட்டியும் மலர் கொத்துடனும் வணங்குகிறார்.
5) தெய்வயானை அம்பாள் பெருமானுக்கு இடதுபுறத்தில் மண்டியிட்டு திருக்கைகளில் மலர்களுடன் வணங்குகிறார்.
6) அனைத்து அண்டங்களும் பெருமானின் ஆளுகைக்கு உட்பட்டது என்பதை அறிவிக்கும் வண்ணம் பெருமானின் மகுடத்திற்கு மேலே வெண்கொற்ற குடை அமைந்துள்ளது.
7) மகுடத்திற்கு இடதுபுறத்தில் சந்திரனும் வலது புறத்தில் சூரியனும் நமக்கு ஆசீர்வாதம் செய்கிறார்கள்.
8 ) சுப்பிரமணிய சுவாமி வலது திருக்கரத்தை நாம் வேண்டும் வரங்களை அருளும் வண்ணம் காட்சி
அளித்து அருள்பாலிக்கிறார்.
9) நாம் முருகப்பெருமானை தரிசித்து கொண்டு வலதுபுறம் நோக்கினால்
சிவபெருமானையும் இடதுபுறம் நோக்கினால் திருமாலையும் தரிசித்து
அருள் பெறலாம்.
10) ஒரே சன்னதியில் விநாயக பெருமான் துர்க்கை அம்மன் சுப்பிரமணிய சுவாமி திருமால் சிவபெருமான் அனைவரையும் ஒரே நேரத்தில் வணங்கி திருவருள் பெரும் வாய்ப்பு உலகில் இங்கு மாத்திரம் உள்ள சிறப்பு உடையது திருப்பரங்குன்றம்.
முருகன் இருப்பிடமே முத்தித்தலம்
ஆகும் அப்பா --கந்தகுரு கவசம்..
No comments:
Post a Comment