Thursday, July 1, 2021

இது வேறு.

 மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி அவர்களை அதிமுக அரசில் கைது செய்த நாள் இன்று..

அப்போது அதை பகிரங்கமாக ஆதரித்து மேடைகள் தோறும் முழங்கியவர் கி.வீரமணி..
|| போலீஸ் அதிகாரி சொல்லுகின்றார்.அய்யா உங்கள் மீது மேம்பாலம் கட்டியதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்று சொல்லுகின்றார்.உடனே,முன்னாள் முதல்வர் தி.மு.க. தலைவர் கேள்வி கேட்கின்றார்.பாலம் நானா கட்டினேன்? என்று.
பொது மக்களே இனிமேல் உங்களுடைய பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.தாஜ்மகாலை யார் கட்டியது என்றால், ஆக்ராவிலே இருந்த கொத்தனார் என்று சொல்லிக் கொடுங்கள்.தயவு செய்து மும்தாஜ், ஷாஜகான் பெயரைச் சொல்லாதீர்கள். ||
இப்படியெல்லாம் அவருடைய கைதையும், அவர் கைதுக்கு ஒத்துழைக்காததையும் இணைத்து கேலி பேசினார். என்றுமே இவர் நமக்கு ஒத்து வரமாட்டார் என்று தெரிந்துதான் 1987 லேயே திமுவுகக்கும்,தி.கவுக்கும் சம்பந்தமில்லை,வீரமணியோடு கழகத் தோழர்கள் தொடர்பு வைத்துக் கொள்ளக்கூடாது என்றார் திமுக தலைவர்..இது வேறு.
கீழே உள்ள பேப்பர் செய்தியானது,திமுக தலைவர் கருணாநிதியை கைது செய்த போது NDA கூட்டணி சார்பாக ஜார்ஜ் பெர்னான்டஸ் மத்திய சிறையில் கருணாநிதியாரை சந்தித்து பேசினார்.அப்போது திமுக தலைவருக்கு ஏசி வசதி செய்து தரச்சொல்லி ஜார்ஜ் பெர்னான்டஸ் கோரிக்கை வைத்தார்.
அப்போது கொதித்தெழுந்த கி.வீரமணி,அடிப்படை அறிவிருப்பவன் கேட்பானா? இப்படி.யாருக்கு இதற்கும் முன்னால் அப்படி செய்து தரப்பட்டதுள்ளது? இது பலமுறை சிறைசென்ற பெர்னான்டஸ் அவர்களுக்கு தெரியாதா? சிறை என்றால் 'மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை' என்று சொன்ன கருணாநிதியார் இப்போது ஏசி கேட்டால் என்ன அர்த்தம்? என பொங்கியிருக்கிறார்.
அதுமட்டுமல்ல,பாஜகவும் - திமுகவும் சேர்ந்து சதி செய்து "சமூக நீதி காத்த வீராங்கனை " யின் அதிமுக ஆட்சியை கலைக்க பார்க்கிறது என,பிரச்சனையை திசை திருப்பி மத்திய அரசுக்கு செக் வைத்தவர் ஆசிரியர் கி.வீரமணி என்பதை வரலாறு தெரிந்தவர்கள் மறக்க மாட்டார்கள்..

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...