Sunday, July 18, 2021

புற்றுக்கு பால் ஊத்துகிறோமே..! அது எதற்கு என்று யாராவது யோசித்துள்ளோமா?

 உண்மையும்,விஞ்ஞான ரீதியாக ஒத்துக்கொண்ட விஷயமும் என்ன வென்றால் முட்டையையும் பாலையும் பாம்பு குடிக்காது.

பின்னர் எதற்குப் புற்றுக்குள் பால் ஊற்றுகிறார்கள்..?
ஆதி காலத்தில் மனிதனுக்கு பெரிய பிரச்சனையாக பாம்புகள் இருந்தன.
காரணம் அடர்ந்த காடுகள் மத்தியில் மனித நடமாட்டம் மிக மிகக் குறைவு. மனிதனை விடப் பாம்புகள் அதிகம் காணப்பட்டது .
ஒரு உயிரினத்தை கொல்லும் உரிமை இந்து சமயத்தை பின்பற்றும் மக்களுக்கு இல்லை.
அப்போது அவர்கள் அனைத்தையும் மதித்தார்கள். ஆகவே அதனைக் கொல்லாமல் அதன் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்த முயன்றனர்.
பாம்புகள் இனப்பெருக்கம் மேற்கொள்வது மிகவும் வித்தியாசம். பெண் பாம்பு தான் உடலில் இருந்து ஒரு வித வாசனை திரவத்தை (பரோமோன்ஸ்) அனுப்பும். அதனை நுகர்ந்து ஆண் பாம்பு பெண் பாம்பைத் தேடி வரும்.
பெண் பாம்பில் இருந்து வரும் வாசனையைக் கட்டுப்படுத்தும் வேலையை, பால், முட்டையிலிருந்து வரும் வாசனை தடுக்கிறது .
ஆகவே அவற்றால் இனப்பெருக்கம் செய்ய முடியாது.இதன் முழுமையான காரணம் சொன்னால் நிச்சயம் ஒருவரும் பின்பற்ற மாட்டார்கள்.
அதனாலேயே புற்றுக்குள் பால் ஊற்றி முட்டை வைக்கப்படுகிறது.
நம்ம முன்னோர்கள் எவ்வளவு யோசித்து இருக்கின்றார்கள்.!!!
May be an image of food

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...