Monday, July 19, 2021

*ஆடி தள்ளுபடி..! ஆஃபரா..? ஆப்பா..?

 ஆடி மாதம் தொடங்கிவிட்டாலே தள்ளுபடி, ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் போன்ற ஆடி தள்ளுபடி விளம்பரத்தை டிவியிலும் கடைகளிலும் காண முடிகிறது. அப்படி என்ன இருக்கின்றது இந்த ஆடி மாதத்தில்...!

*ஆடி மாத நம்பிக்கைகள் :
ஆடி மாதத்தில் துணிக்கடைக்கே செல்லாத நிலை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை இருந்தது. ஆவணி மாத கல்யாணத்திற்குக்கூட ஆடி மாதம் சேலை, துணிகள் எடுக்கச் செல்லமாட்டார்கள்.
இந்த நம்பிக்கை காரணமாக ஆடி மாதம் துணிக்கடைகளின் விற்பனை குறைந்தது. அதனை முறியடித்து, வணிகத்தை மேம்படுத்த துணிக்கடைகள் செய்த வணிக யுக்தி ஆடி தள்ளுபடி விற்பனை.
ஆடியில் 5 முதல் 50 விழுக்காடு தள்ளுபடி கிடைக்கிறதே! விடலாமா? என்ற மக்களின் மனநிலையில் ஆடி மாதம் நல்லது அல்ல என்ற நம்பிக்கைகள் மறைந்தது. வியாபாரிகளின் யுக்தி வெற்றி பெற்றது.
50மூ வரை விலை குறைப்பு உண்மையா..?
முற்றிலும் உண்மையா என நன்கு யோசிக்க வேண்டும். உண்மையாக சொல்லப்போனால் கடைகள் மற்றும் நிறுவனங்கள் 5 முதல் 15மூ வரையே விலை குறைப்பு செய்கின்றன. அதுவும் அடக்க விலையில் அந்த விலை குறைப்பு இருக்காது. மாறாக வாடிக்கையாளர்களிடம் இருந்து வரவேண்டிய லாபத்தில் 5 முதல் 15மூ வரை குறைக்கின்றன. அப்படி குறைப்பதனால் வாடிக்கையாளர்கள் பயனடைவதோடு கடைகளுக்கும் விற்பனை அதிகரித்து சரக்குகள் காலியாகின்றன.
ஆடி தள்ளுபடியில் கவனிக்க வேண்டியவை :
ஆடி தள்ளுபடியில் அடிமாட்டு விலைக்கு பொருட்கள் வாங்கிவிடலாம் என்று நினைக்க வேண்டாம். 50 சதவிகிதம் தள்ளுபடி என்பது சில துணிகளுக்கு மட்டும்தான். இந்த கவர்ச்சித் தூண்டிலில் நீங்கள் சிக்கிவிடாதீர்கள்.
சில நிறுவனங்கள் ஆடி மாத விற்பனைக்கு என்றே கொள்முதல் செய்கின்றன. குறிப்பாக, பல நிறுவனங்கள் மூன்று மாதங்களுக்கு மேல் ஸ்டாக் வைத்து விற்பது கிடையாது. சிறிய நிறுவனங்கள், சிறு கடைகள் போன்றவற்றில் புதிய கொள்முதல் மற்றும் ஸ்டாக் சரக்குகள் இரண்டும் சேர்த்து விற்பனை செய்வார்கள். எனவே, எந்த இடத்தில் வாங்குகிறீர்கள் என்பதைப் பொறுத்தும், எத்தனை சதவிகிதம் தள்ளுபடி என்பதைப் பொறுத்தும் ஸ்டாக் துணியா அல்லது புதுத் துணியா என்பதைக் கண்டுபிடித்துவிடலாம்.
தள்ளுபடியில் வாங்கும்போதே சரியான அளவில், பொருத்தமான பிடித்தமான உடைகளைத் தேர்ந்தெடுத்து விடுவது நல்லது. பில் போடும்போதே இந்த விஷயத்தில் தெளிவான முடிவை எடுக்கவும்.
தள்ளுபடியில் கிடைக்கிறது என்பதற்காக வெளியூர் செல்லும் இடத்தில் எல்லாம் ஆடித் தள்ளுபடியில் அதிக அளவில் வாங்க வேண்டாம். நம்பிக்கையான தள்ளுபடி என்றால் மட்டுமே வெளியூர்களில் வாங்கலாம். அவசரத்தில் வாங்கிவிட்டு, வீட்டிற்கு வந்து பரிசோதிக்கையில் தரம் குறைவு என்றால் மீண்டும் செல்ல முடியபொதுவாக தள்ளுபடி துணி வகைகளை இரவில் எடுப்பதையோ அல்லது பளபளவென கண்ணைப் பறிக்கும் வெளிச்சத்திலோ எடுக்கவேண்டாம். பகல் நேரங்களில் எடுக்கும்போது தான் பழைய துணியா, புதுத் துணியா என்பதைக் கண்டுபிடிக்க முடியும். எனவே, பளபளப்பான வெளிச்சத்தை நம்ப வேண்டாம்.
எலெக்ட்ரானிக் பொருட்களை விற்கும் நிறுவனங்களும் இந்த ஆடி சீஸனில் தள்ளுபடிகளை வாரி இறைக்கின்றன. குறிப்பாக, ஜீரோ சதவிகித வட்டி, குறைந்த முன்பணம், கேஷ் பேக் ஆஃபர் என பல்வேறு சலுகைகளையும் தருகின்றன. இவற்றில் தரத்தை நன்கு பரிசோதித்து வாங்குவதே நலம்.
தரமான பொருட்களை ஆடித் தள்ளுபடியில்
தேர்வு செய்து வாங்குங்கள் !
நன்றிகளும்
பிரியங்களும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...