சென்னை ICAI என்ற Charted Accountant அரசு கல்வி நிறுவனத்தில், ஆண்களும் பெண்களும் இணைந்தே படித்து வருகின்றனர்.
அங்கேயும் ஒரு கழிசடை மாணவன், ஒரு மாணவியைத் தன் மொபைல் கேமெராவில் படம் பிடித்திருக்கிறான். அது அந்தப் பெண்ணிற்கும் தெரியாது. டீ ப்ரேக்கில் இரண்டு மூன்று அலுவலர்கள் வகுப்பிற்குள் வந்து, அந்த குறிப்பிட்ட மாணவனை அழைத்து, தம்பி ஃபோட்டோ எடுத்தியே அந்த மொபைலைக் கொடு என்று கேட்டிருக்கிறார்கள்.
அவனோ, தன்னிடமிருந்த வேறொரு மொபைலைக் கொடுத்திருக்கிறான். மீண்டும் கேட்கிறோம் ஃபோட்டோ எடுத்த மொபைலைக் கொடு. மீண்டும் அந்தப் பையன் இல்லை என்று சாதித்திருக்கிறான். (ஒவ்வொரு க்ளாஸ் ரூமிலும் 7 கேமெரா வைத்திருக்கிறோம். இங்கே ஒவ்வொரு மாணவர்களும் செய்யும் சின்னச் சின்ன செயல்கள் கூட ரெக்கார்ட் ஆயிட்டு தான் இருக்கு எங்களிடம் பொய் சொல்லாதே! என்று சொல்லி விட்டு,
உன் ID cardஐக் கொடுன்னு வாங்கிட்டுப் போயிட்டு 10 நிமிடங்கள் கழித்து வந்து, தம்பி, இனி இந்தியாவில் எங்கேயும் நீ C.Aவுக்கான தேர்வு எழுத முடியாது. போயிட்டு வா என்று அனுப்பி வைத்துவிட்டார்களாம்.
இறுதியாக அவர்கள் சொன்னது, “இங்கே ஒழுக்கம் கெட்டவர்களுக்கு மன்னிப்பு கிடையாது. எங்கள் ப்ரொஃபஷனலுக்கு லாயக்கு கிடையாது” .
இத்தனை அக்கறையாக எல்லா கல்வி நிறுவனங்களிலும் இருந்தால், குற்றங்கள் வெகுவாகக் குறையும் இல்லையா?
*ICAI நிறுவனத்தின் நிர்வாகத்திற்கு மனமார்ந்த நன்றி!*
No comments:
Post a Comment