பொதுவாகவே நான் கல்யாணம், பிறந்தநாள், போன்ற விஷேசங்களுக்கு போய் உணவு உண்டால்... உண்மையிலேயே நன்றாக இல்லை என்றாலும் கூட விழா நடத்துபவர்களிடம் சென்று சாப்பாடு super என்றும், அதில் ஒரு பொரியல், சாம்பார் வத்தல் குழம்பு...
இப்படி ஏதாவதை ஒற்றைகுறிப்பிட்டு நன்றாக இருந்ததாக சொல்வேன், அப்போது அவர்கள் முகத்தில் தெரியும் மகிழ்ச்சி நமக்கும் மகிழ்ச்சியை தரும்,
காரணம் எந்த விசேசம் என்றாலும் சாப்பாடு முக்கியம்.
உடை, நகை, மண்டபம் போல மிகவும் அக்கறை எடுத்து செலவு செய்து வருபவர்கள் ருசித்து பருகி வாழ்த்த வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பில் எவ்வளவு என்று கணக்கு பார்க்காமல் செலவு செய்து வைப்பார்கள்.
நாம் அந்த சாப்பாடை அவர்களிடம் குறை கூறும்போது அபசகுணம் என்ற அளவில் நினைப்பார்கள். அவர்களின் சந்தோஷம் கருதி நன்றாக இருந்ததாக கூறுங்கள். மற்றவர்கள் சந்தோசமாக இருக்க பொய் கூட சொல்லலாம் தவறில்லை. வள்ளுவர் கூறியது போல!
No comments:
Post a Comment