Thursday, July 1, 2021

"அதீத விருப்பமோ"

 திருச்செந்தூரில் பிரகாரத்தில் பக்தர் ஒருவர் கந்த சஷ்டி சொல்லிக் கொண்டிருந்தார் , அவர் சொல்லி முடித்ததும் ""கந்த சஷ்டி பாடி முருகப்பெருமானை வணங்குவது தங்களுக்கு அதீத விருப்பமோ"" என நான் கேட்க

,
அவர் லேசான புன்னகையுடன் சொன்னார் ""ஐயா நான் தீவிரமான நாத்திகவாதியாக இருந்தவன் , என்னை போல் எவரும் கடவுளையும் , கடவுளை வணங்குபவரையும் மிகவும் கீழ்தரமாக பேசி இருக்க மாட்டார்கள் அந்தளவுக்கு பேசியவன்"""
.
""30 ஆண்டுகளுக்கு முன் நண்பர்களுடன் திருச்செந்தூர் வந்து அதிகாலையில் நான் மட்டும் கடலும் குளிக்க வந்தேன் , அலையின் சுழற்ச்சியில் உள்ளே சென்று விட்டேன் , என்னால் கடலில் இருந்து வேளியேற முடியாமல்"""
,
"""என்னையும் மறந்து முருகா முருகா முருகா கத்தினேன் , யாரோ எனது தலைமுடியை இறுக்கமாக பிடித்தது போல உணர்ந்தேன் , அடுத்த நொடி கரையில் வந்து வீழ்ந்தேன் ""
.
""எழுந்து நின்று பார்த்தேன் கண்ணுக்கு எட்டிய தூரம் எவரும் தென்படவில்லை , கண்களில் கண்ணீர் ததும்ப ததும்ப என்னால் முடிந்தளவுக்கு உரத்த குரலில் """முருகா முருகா முருகா "" என சொல்லிக்கொண்டே முருகப்பெருமான் சன்னதியில் விழுந்து வணங்கினேன்
,
அன்று முதல் நான் கடலில் விழுந்து பிழைத்த நாளையே ""எனது பிறந்தநாளாக ""கொண்டு , ஒவ்வொரு வருடம் திருச்செந்தூரில் கந்தசஷ்டி பாடி முருகப்பெருமானை வணங்கி மகிழ்கிறேன் என்ற அந்த பக்தர் சொல்ல
,
எங்களின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓட , முருகப்பெருமானை தரிசனம் செய்தோம் , திருச்செந்தூரில் இருந்து .
Move your mouse to view the photo in 3D

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...