Friday, July 2, 2021

சிங்கம், புலி இதில் எது பலமானது?

 இரண்டும் சண்டை போட்டால் எது ஜெயிக்கும்?

இப்படி ஒரு கேள்வி கேட்டால், இதிலென்ன சந்தேகம், சிங்கம்தான் காட்டுக்கு ராஜா, அப்போ அதுதானே ஜெய்க்கும் என்று பலர் சொல்வார்கள். இருந்தபோதும் இந்தியர்களை கேட்டால் புலிதானுங்க 🐯 ஜெய்க்கும் என்பார்கள் ஏனெனில் புலிதான் தேசிய விலங்கு என்பதால் அதன் மீது கொஞ்சம் பாசம் அதிகமாக இருக்கும். ஆனால் உண்மையில் என்ன நிகழும்? எது பலசாலி?
அதற்கு முன்பு சில விஷயங்களை நாம் தெரிந்து கொள்ளவேண்டும். சிங்கமும், புலியும் ஒரே இடத்தில் வாழ்வதில்லை. சிங்கம் ஆப்ரிக்க, நாடுகளிலும், இந்தியாவில் குஜராத்திலுள்ள கிர் காடுகளில் வாழ்கிறது. இந்த இரண்டு இடமுமே வெப்பம் அதிகமாக உள்ள இடம். சிங்கம் 45" செல்ஷியஸ் வெப்ப நிலை உள்ள இடங்களில் கூட வாழக்கூடியது. ஆனால் புலிக்கு 35" தாண்டினால் வாழ முடியாது, ஆனால் குளிரான சைபீரியாவில் கூட புலி வாழும். ஆப்ரிகாவில் கடும் வெப்ப நிலையில் சிங்கம் வாழும், அங்கே புலிகள் இல்லை. அதே நேரம் குளிர் பகுதிகளில் சிங்கம் வாழ்வதில்லை. என்பதால் காட்டில் சிங்கமும், புலியும் ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்ள வாய்ப்புகள் மிகக்குறைவு.
1960 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவின் சிங்கமும், புலியும் அருகருகில் வாழ்வதற்கான வாய்ப்புகள் இருந்தது. ஆனாலும் சிங்கம் பகல் வேளையில் வேட்டையாடக்கூடியது. புலி இரவு நேரத்தில் வேட்டையாடக்கூடியது என்பதால் அங்கேயும் ஓரளவுக்கு நேரடியான மோதல் தவிர்க்கப்பட்டுவிட்டது.
🐯 இந்திய சிங்கங்களை விட ஆப்ரிக்க சிங்கங்கள் பெரியவை, ஆனால் ஆப்ரிக்க சிங்கத்தைவிட பெங்கால் டைகரும், சைபீரியன் வெள்ளை புலியும் பெரியது. பூனை இனத்திலேயே புலிதான் பெரியது.
🐯 ஆண் சிங்கம் தன் எல்லையை காப்பதற்காக சக ஆண் சிங்கத்தோடு மோதி எது வலிமையானதோ அதுவே அந்த காட்டுக்கு ராஜாவாக இருக்கும். அந்த சண்டையில் சிங்கங்கள் சாகும்வரை கூட சண்டையிட்டு இறந்து போவது உண்டு. அது போல புலியும் தன் எல்லையை காக்க பலமான ஆண் புலியுடன் மோதும். ஆனால் எந்த புலி பலம் குறைவானது அது சண்டடையில் இருந்து விலகிவிடும்.
🐯 சிங்கத்தைவிட புலி பெரியது. அதன் எடை அதிகமானது. அதன் தாக்கும் திறனும், வேகமும் அதிகம்.
🐯 சிங்கம் ஒரு காலால் தாக்கும், ஆனால் புலி இரு கால்களால் ஒரே நேரத்தில் தாக்கக்கூடியது.
🐯 சிங்கம் பொதுவாக புலியைவிட வேகமாக ஓடக்கூடியது. 45 மைல் வேகம்வரை ஓடும். பொதுவாக புலிகள் 40 மைல் வேகத்தில்தான் ஓடும், ஏனெனில் அதன் எடை அதிகம்.
🐯 சிங்கத்தைவிட புலி நீரில் நன்கு நீந்தும், மரங்களில் நன்கு ஏறும்.
🐯 சிங்கம் பெரும்பாலும் அதன் கூட்டத்தோடு வாழும். அதில் ராஜாவான ஆண் சிங்கங்கள் மட்டும் தனியாக போவதுண்டு. இருந்தபோதும் அது பெரும்பாலான நேரங்களில் கூட்டமாக சேர்ந்து வேட்டையாடும். ஆனால் புலி தனியாக வேட்டையாடக்கூடியது.
🐯 சிங்கம் ஒட்டகசிவிங்கி போன்ற மிகப்பெரிய விலங்குகளை கூட்டமாக சேர்ந்து வேட்டையாடும். ஆனால் புலி தனியாக கொல்லக்கூடியது. ஏனெனில் அது உயரமாக குதித்து அதன் கழுத்தை கடித்து கொல்லக்கூடியது. ஆனால் சிங்கத்தால் அவ்வளவு உயரம் குதிக்க முடியாது.
🐯 சிங்கம் குரல்வளையை கடித்து கொல்லும், ஆனால் புலி பின் கழுத்தை கடித்து கொல்லும்.
🐯 சிங்கம் பெரும்பாலும் நேரடியாக, கூட்டமாக சேர்ந்து வேட்டையாடும். ஆனால் புலி பெரும்பாலும் பதுங்கி தக்க சமயம் பார்த்து பின்னால் இருந்து தாக்கக்கூடியது.
🐯 புலிக்கு 25% சிங்கத்தை விட மூளை அதிகம். அதனால் இரண்டு வருடம் வளர்ந்த ஒரு புலி பெரிய சிங்கத்தோடு பலமாக மோதக்கூடியது.
🐯 பெரிய மிருகங்களை வேட்டையாடும்போது சிங்கங்கள் உயிர் இழப்பது அதிகம். ஆனால் புலிகள் அறிவுப்பூர்வமாக தாக்குவதால் அதன் இறப்புகள் எண்ணிக்கை குறைவு.
🐯 வனவிலங்கு பூங்காக்களில் இவை மோதுவதற்கான வா ய்ப்புகள் உண்டு என்றாலும் இவை காடுகளில் மிக பலம் வாய்ந்த ஆப்ரிக்க சிங்கமும், பூனை வகையிலேயே மிகப்பெரிய பலம் வாய்ந்த வங்க புலியும் மோதுவதற்கான வாய்ப்புகள் இல்லை. அதையும் மீறி ஒரே வயாதான, பலத்தில் இணையான சிங்கம், புலி மோதிக்கொண்டால் புலியுன் கை ஓங்கியே இருக்கும். சிங்கத்தை காட்டு ராஜா என்று சொன்னாலும், புலி அதே காட்டுக்கு டாண் என்பது மறுக்க முடியாததுதான்.
May be an image of big cat and outdoors

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...