மனதில் எண்ணுவதை எல்லாம் அப்படியே வெளிப்படையாக பேசக் கூடிய நபர்களா நீங்கள்??
சற்று சிந்திக்க வேண்டிய நேரம் இது.
எனக்கு எதையும் மறைக்க தெரியாது பட்டென்று கேட்டு விடுவேன் என்பதை தங்கள் இயல்பாக கூறுபவர்கள் இனி சற்று சிந்திக்க வேண்டும்.
இப்படிப்பட்டவர்கள் தங்கள் வாழ்நாளின் வரலாற்றை புரட்டிப் பார்த்தால் தாங்கள் அடைந்த கஷ்டங்களும் நஷ்டங்களும் அதிகம். எது ஒன்றை சொல்வதற்கு முன்பும் இதை சொல்ல வேண்டிய கட்டாயம் தான் என்ன? கேட்கும் நபர் உரியவர் தானா? நாம் சொல்லும் நேரம் காலம் சரிதானா? இதன் பின் விளைவுகள் என்னவாக இருக்கும்? சற்று சிந்திக்க வேண்டும்.
கொதிக்கும் உணர்வுகளுக்கு அறிவு என்னும் நீரை ஊற்றி ஆற்றுவோம். துள்ளி எழுந்து துடித்து வெளிவரத் துடிக்கும் கருத்துக்களின் மீது பொறுமை என்னும் வலையை வீசுவோம்.
எதையும் ஆராய்ந்து அறிந்து சற்று நிதானமாகப் பேசி நம்மைச் சுற்றி இருப்பவர்களின் உள்ளத்தில் நீங்கா இடம் பெற இந்த நாளை
இனிமையாக
பயன்படுத்துவோம்.
No comments:
Post a Comment