Sunday, July 18, 2021

உண்மையை உரக்கச் சொல்லுவோம் உலகம் கேட்கும் வரை!!!

 புரட்சித்தலைவருக்கே அரசியல் ஆலோசனை சொன்னதாக ஒருவர் சொல்லிக்கொண்டிருக்கிறார்..

இதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கும் என்பதை logic-காக பார்ப்போம்... பிறகு உண்மை உங்களுக்கே புரியும்..
'கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு.'
1972 அக்டோபர் 16-ஆம் தேதி #புரட்சித்தலைவர் தனி இயக்கம் கண்டபோது அவரின் வயது 55. 1956-ல் பிறந்த சீமாட்டியின் அப்போதைய வயது 16.
1973 அக்டோபர் 16-ஆம் தேதி முன்னாள் முதல்வர் திரு.கருணாநிதி மங்கள நாண் எடுத்துக்கொடுத்து சசிகலா நடராஜன் திருமணம் நடந்தபோது சசிகலா வயது 17.
1977 ஜூன் 30-ஆம் தேதி #மக்கள்திலகம் தமிழக முதல்வராகும் போது அவரின் வயது 60. ஆடியோ அரசியல்வாதியின் வயது 21.
1982 சூன்4-ஆம் தேதி கடலூர் மஞ்சக்குப்பத்தில் நடந்த #அஇஅதிமுக மகளீர் மாநாட்டில், ஒரு ரூபாய் கொடுத்து அதிமுக உறுப்பினர் அட்டையைப் பெற்று அதிகாரபூர் உறுப்பினராக #அம்மா தன்னை கழகத்தில் இணைத்து கொண்டபோது அவரின் வயது 34.
1983 - ஆம் ஆண்டு தனது 35-ஆவது வயதில் அம்மா அதிமுகவின் கொள்கைபரப்புச் செயலாளராக்கப்படுகிறார்..
1984-ஆம் ஆண்டு ஆழ்வார்பேட்டை பீமண்ண தோட்டத் தெருவில் 'வினோத் வீடியோ விஷன்' என்ற வீடியோ கடையை துவங்கியபோது சசிகலாவின் வயது 28.
அம்மாவுக்கு சசிகலா அறிமுகமானது இதே 1984-ம் ஆண்டுதான். கடலூர் மாவட்ட செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அலுவலராக இருந்த தனது கணவர் ம.நடராஜன் மூலம் கலெக்டர் சந்திரலேகாவின் தொடர்பை பிடித்து, சந்திரலேகா மூலம் அம்மாவுக்கு அறிமுகமாகிறார் சசிகலா.
அதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளரான அம்மா அவர்கள் ஒவ்வொரு ஊராக பொதுக்கூட்டத்துக்கு செல்லும் போது தனது நிகழ்வுகளை வீடியோக்களாக பதிவு செய்ய சசிகலா நிறுவனத்தை பணிக்கு அமர்த்துகிறார்.
1984 மார்ச் 24 தேதி அதிமுகவின் சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு தனது 36-ஆவது வயதில் அம்மா அவர்கள் பரிந்துரைக்கப்படுகிறார்..
1984-ஆம் ஆண்டு தனது 28-ஆவது வயதில் அம்மாவுக்கு அறிமுகமான இந்த சீமாட்டி, அம்மா அவர்கள் தலைவரை சந்திக்க ராமாவரம் தோட்டத்திற்கு செல்லும்போது உதவியாளராக சென்றிருக்கலாமே தவிர வேறெப்படி இருக்க முடியும்?
அன்றைக்கு 67 வயதான பழுத்த அரசியவாதி எம்ஜியாருக்கு, 28 வயதான இந்த சீமாட்டி எப்படி அரசியல் ஆலோசனை சொல்லி இருக்க முடியும்?
இந்த நபர் காலடி எடுத்துவைத்த நேரமோ என்னவோ? 1984 அக்டோபர் 5-ஆம் தேதி திடீர் உடல்நல குறைவால் முதல்வர் எம்ஜிஆர் அவர்கள் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பிறகு 1984 நவம்பர் 5ஆம் தேதி எம்ஜிஆர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக அமெரிக்காவின் ப்ரூக்ளின் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அமெரிக்காவில் சிகிச்சை முடித்து 1985 பிப்ரவரி 4-ஆம் தேதி தமிழகம் திரும்பினார் எம்ஜிஆர்.
1987ஆம் ஆண்டு டிசம்பர் 24-ஆம் தேதி மக்கள் திலகத்தின் உயிர் இந்த மண்ணுலகைவிட்டு விண்ணுலகுக்கு சென்றது.
ஆக வரலாறு, புவியியல் இவ்வாறு இருக்க, இந்த 'ஆடியோ அரசியல் சீமாட்டி' எப்படி தலைவருடன் பழக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்கும்? நீங்களே சிந்தித்துப்பாருங்கள்..
காதில் பூ சுத்தலாம்.. அதற்காக தமிழக மக்களின் காதில் கிலோமீட்டர் கணக்கில் பூ சுத்தக்கூடாது..
இதை நம்ப அதிமுக தொண்டர்கள் யாரும் முட்டாள்கள் அல்ல..
இப்படி தொடர்ந்து இந்த மன்னார்குடி & கம்பெனி புளுகு மூட்டைகளை அவிழ்த்து கொண்டேதான் இருக்கும்.. நாமதான் இதை ஒரு நகைச்சுவையாக எடுத்துக்கொண்டு சிரித்து கடந்து விடவேண்டும்..
'கேக்கறவன் கேணையினா இருந்த, எரும ஏரோபிளான் ஓட்டுமாம்'....
May be an image of 3 people and text that says 'தடராசன் சசிகலா திருமணத்துக்குத் த்துக்குத் தாலி டுத்துக் கொடுக்கும் கருணாதிதி...'

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...