Sunday, July 18, 2021

அதிமுக தொண்டர்களே... ❤️

 சோர்வடைய வேண்டாம், உற்சாகமாக இருங்கள்

❣️❣️❣️
1996 பர்கூர் தொகுதியில் ஜெயலலிதா தோற்று விட்டார், தமிழகத்தில் எதிர்கட்சியே இல்லை எனவே, இனி அதிமுகவை நம்பி எந்த பயனும் இல்லை.
திமுக தான் இனி தொடர் ஆட்சி தமிழகத்தில் இருக்க போகிறது, எனவே அதிமுகவை விட்டு விலகி திமுகவில் இணையுங்கள் என பட்டி தொட்டி எங்கும் திமுகவினர் பிரசாரம் தூள் கிளப்பியது.
ஆனாலும் இரண்டே வருடத்தில் அதிமுக+ 1998 தேர்தலில் 30 நாடாளுமன்ற தொகுதிகளை கைபற்றி அம்மா சாதனை படைத்தார்.
திருச்செங்கோடு மக்களவை தொகுதியில் 1,35,000 வாக்கு வித்தியாசத்தில் எடப்பாடியார் வெற்றி பெற்றார்.
அதிமுக வரலாற்றில் தோல்வி எந்த அளவுக்கு ஏற்படுகிறதோ, அதைவிட 2 மடங்கு வெற்றியை தான் அடுத்தடுத்து தேர்தலில் பெற்றுள்ளது.
3% மட்டுமே வாக்கு வித்தியாசத்தில் இழந்த ஆட்சியை மீண்டும் அமைப்பது எளிது.
தொண்டர்கள் எந்த தீய சக்திகளின் பேச்சை கேட்காமல், எந்த துரோகிகளின் ஆடியோவில் வீழாமல் உற்சாகமாக இருங்கள்.
காலமும், களமும் நமக்கு கைகொடுக்க காத்திருக்கிறது, தொண்டர்களாகிய நீங்கள் கொண்டாடாமல் வேறு யார் கொண்டாடுவார்கள்.
அதிமுகவின் மிகப்பெரிய சக்தியே தொண்டர்கள் தான், தொண்டர்கள் தான் இந்த இயக்கத்தின் சொத்து.
இனி வரும் காலம் நாம் பெறவிருக்கும் வெற்றியை எந்த கயவர்களாலும் தட்டி பறிக்க முடியாது.
உண்மையும், நேர்மையும், நம்பிக்கையும் போதும் நம் வெற்றிக்கு அச்சாரமாக அமைய.
மக்களால் நான்,மக்களுக்காகவே நான் என்பது அம்மாவின் பொன்மொழி,
தொண்டர்களால் நாம், தொண்டர்களுக்காகவே நாம் என்பது நம் கழகத்தின் வெற்றிக்கான தாரக மந்திரம்.

அதிமுக தொண்டர்கள்.. ❤️
2011ல் சட்டமன்ற தேர்தலில் திமுகவை விட அதிமுக 10.5% கூடுதல் வாக்குகள் பெற்றது.
10.5% வித்தியாசம் இருக்கும் போதே திமுக 10 வருடம் அமைதி காத்து ஆட்சிக்கு வந்திருக்கிறது.
2014 தேர்தலில் அதிமுக திமுக வாக்கு வித்தியாசம் 18% ஆக மாறியது.
தற்போது 2021 தேர்தலில் வெறும் 3% வித்தியாசத்தில் தான் ஆட்சியை நிர்ணயித்தது.
தற்போது, திமுகவில் இணையும் துரோகிகளுக்கு ஒன்று மட்டும் நினைவு படுத்த விரும்புகிறேன்,
"அதிமுகவுக்கான ஏற்றம் வெகு தொலைவில் இல்லை, இழந்தது 3 சதவீத வாக்கு வித்தியாசம் என்கிற நிலை மாறி 10% மேல் கூடுதலாக பெற்று தனிப்பெரும் பலத்தோடு அதிமுக ஆட்சி பீடத்தில் அமர போவது உறுதி"
"இழந்ததை எண்ணி வருந்தாதீர்கள், நாளை வரவிருக்கும் வெற்றியை வரவேற்க தயாராகுங்கள்"
இருந்த துரோகிகள் எல்லாம் விலகி புது ரத்தம் பாய்ச்சியது போன்ற புத்துயிர் பெற்ற கட்சியாக மாற போகிறது என்று மகிழ்ச்சியோடு இருங்கள்...
இது கொத்தடிமைகளின் கட்சியல்ல, ஜனநாயக முறையில் இயங்கும் மக்கள் கட்சி. இங்கே சண்டை சச்சரவு, பிளவு, தோல்வி, ஏமாற்றம் இதெல்லாம் இயற்கையானது.
அதன் பிறகு ஒவ்வொரு ஆளுமையையும் இந்த இயக்கம் தந்திருக்கிறது என்பது கூடுதல் சிறப்பு.
சோதனையான காலகட்டத்தில் உறுதுணையாக இருக்கும் அனைத்து உறுப்பினர்களுக்கும் இனிவரும் காலம், நல்ல எதிர்காலமாக மாறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
மீண்டும் அம்மாவின் ஆட்சி அமையும், இது சத்தியம் ....💚
மக்களின் ஏகோபித்த ஆதரவோடு மீண்டும் கழக ஆட்சி அமையும். இது திண்ணம் ...💚
May be an image of 1 person, sitting and indoor

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...