"நீங்க எல்லாம் சாப்பிட்டுலே உப்பு போட்டு தானே சாப்பிடரீங்க, எத்தனை வாட்டி சொன்னாலும் புரியல? போயி ஸ்கேன் ரிப்போர்ட் வாங்கிட்டு வாங்க " என்று உரக்க கத்தினார் அந்த இளம் நர்ஸ். அவரால் காலையில் இருந்து வந்த நோயாளிகளை சமாளிப்பதில், பாத்ரூம் கூட போக முடியவில்லை என்ற கோவம்..
அந்த 60 வயசு மதிக்க தக்க ஆண் புற்றுநோய் நோயாளி கெஞ்சினார் . " அம்மா ஸ்கேன் ரிப்போர்ட் நாளைக்கு தான் கிடைக்கும். அந்த மெஷின் ரிப்பேர் இன்னிக்கினு சொன்னாங்க..வலி அதிகமா இருக்கு டாக்டர் பார்க்கணும் " என்று பயந்து கொண்டே சொன்னார்..
" அதுக்கு நான் என்ன பண்ண முடியும்.ரிப்போர்ட் இல்லாம வந்தா டாக்டர் பார்க்க மாட்டார் " என்று நர்ஸ் மொபைலை பார்த்து கொண்டு சொன்னாள். " ஏம்மா உங்களுக்கும் இந்த வயசில் ஒரு அப்பா இருந்து அவருக்கும் இப்படி ஒரு நோய் வந்தா இப்படியா பதில் சொல்வீங்க, நாங்க காலை லிருந்து ஒண்ணுமே சாப்பிட கூட இல்லை, திருவாரூர்லிருந்து நேர இங்கே வந்தோம் 5 மணி நேரம் ஆயிடுச்சு.. " என்று நோயாளியின் மகள் பொறுமையிழந்து கேட்க.. " நர்ஸ் எரிமலை போல் சீறினாள்.
" ஓஹோ நீங்க பெரிய மினிஸ்டர் குடும்பம்,பாரு..உங்களுக்கு நாங்க முதல் மரியாதை கொடுக்கணுமோ? இலவச காப்பிடு திட்டம் தானே எல்லாம் பொறுமையாதான் நடக்கும். அப்படி அவசரம் னா காசு கொடுத்து பிரைவேட் ஆஸ்பத்திரில போயி டிரீட்மென்ட் எடுத்துக்கோங்க.. புரியுதா " என்று பொரிந்து தள்ளினாள்.
அதுவரை அமைதியாக பார்த்து கொண்டிருந்த நான், நர்சிடம் " ஏம்மா நீ உண்மையாவே நர்சிங் படித்து இங்கே ட்ரைனிங் எடுத்து வேலை செய்யறீங்களா, இல்லை சினிமா ஆர்ட்டிஸ்ட் வேஷம் போட்டு கேண்டிடேட் கேமரா மாதிரி ஏதாவது ப்ரோக்ராம் நடித்து கொண்டு இருக்கீங்களா?! " என்று கேட்டவுடன் சிறிது அதிர்ந்து.. " நீங்க யார் சார், இவங்க உறவு காரங்களா " என்று நக்கலாக கேட்டாள்.
" நான் இங்கே வந்திருக்கும் NABH ஆடிட்டர்.. உங்க ஹாஸ்பிடல் நோயாளிகளை எப்படி நடத்தறாங்கன்னு பார்க்க வந்தேன்.ஆடிட் ரிப்போர்ட்ல முதலில் உங்க பேர் தான் வரும் . ஒரு பானை சோறுக்கு ஒரு சோறு பதம். உங்க பேர் என்ன சிஸ்டர் " என்று கேட்டேன்.
அது, அது வந்து.. சாரி ஸார், நான்.. என் பேரு ரோஹிணி.. சேர்ந்து 4 மாசம் தான் ஆகுது. என்ன மன்னிச்சுக்கோங்க.. என்று கெஞ்ச ஆரம்பிதாள்.
சரி, லாஸ்ட் வார்னிங்.. உடனே அவருக்கு மாத்திரைக்கு ஏற்பாடு பண்ணுங்க, என்றேன். " சரி வாங்க " என்று நோயாளி மற்றும் முகம் வாடிய அவர் மகளையும் ரோஹிணி அழைத்து செல்ல..
நான் வெளியே வந்து ஆஸ்பத்திரி போர்டு ஒன்றை பார்த்து சிரித்து விட்டு அடுத்த வார்டு க்கு சென்றேன். அதில் " நோயாளிகள் எங்கள் கண்கள் " என்று எழுதி இருந்தது !
No comments:
Post a Comment