ஜோதிடம் ஒரு அறிவியல் என்பதைவிட நுண்ணறிவியல் (Micro Science) என்பதுதான் என் முடிவு.
இந்த அறிவியலைப் பற்றி தெரியாமல், பஞ்சாங்கத்தில் உள்ள சில அடிப்படை தகவல்களை மட்டும் தெரிந்து கொண்டுள்ள ஒருசில அரைகுறை ஜோதிடர்
சில பேர்வழிகள் மக்களின் அறியாமையை பயன்படுத்திக்கொண்டு பிழைப்பு நடத்துகிறார்கள்.
ஜோதிடப் பயிற்சி மையம் என்ற பெயரில் சில நபர்கள் தவறான வழியுடன் ஜோதிடத்தின் அடிப்படை விஷயங்களை மட்டும் சொல்லித் தருகின்றனர்
இனி விஷயத்திற்கு வருவோம்
அதென்ன தில்லாலங்கடி வேலை? (சற்று நீண்ட பதிவுதான்.. பொறுமையாகப் படிக்கவும்.)
நான் சில ஜோதிடர்களை(?) சந்தித்திருக்கிறேன். அவர்கள் ஜாதகர்களுக்கு பலன் சொல்லியதை நினைத்து பிரம்மித்து இருக்கிறேன். எப்படியென்றால்?
சுமார் 17 ஆண்டுகளுக்கு முன்.... ஒரு குறிப்பிட்ட ஜோதிடர் மிக அற்புதமாக பலன் கூறுகிறார் என்று பரவலாக கேள்விப்பட்டு, அவரைப் பார்க்க சென்றேன். (அப்பொழுது எனக்கு ஜோதிடம் ஏட்டுச சுரைக்காய்)
அந்த ஜோதிடர்(?) ஜாதகரைப் பார்த்து "உன்னுடன் பிறந்தவர்கள் ஆண் சகோதிரம் 2; பெண் சகோதிரம் 3; என்று கூறியவுடன் அந்த ஜாதகர் ஆமா சாமி..கச்சதமா சொன்னீங்க.. என்று சொன்னவுடன் நான் பிரம்மித்துபோனேன்.இந்த பிரம்மிப்பு நீங்குவதற்க்குள் அடுத்த அதிர்ச்சி...
உன் அப்பனுடன் பிறந்தவர்கள் 5 ஆண்கள்: 4 பெண்கள்: அதில் ஒருபெண், ஒரு ஆண் இறந்து விட்டனர். என்று கூறியவுடன், அந்த ஜாதகர் பதில் சொல்லுவதர்க்குமுன்பே நான் அந்த ஜோதிடரின் காலில் விழுந்து கும்பிடலாம் என்று என்னினேன்(விழவில்லை). அந்த ஜாதகர் உண்மை என்று சொல்லி வாய் மூடவில்லை அடுத்த அதிர்ச்சி...
உன் அம்மாவுடன் பிறந்தவர்கள் 6 ஆண்கள், உங்க அம்மா ஒருத்தி மட்டுந்தான்.
எப்படி இது சாத்தியம் என்று மிகவும் அதிசயித்துப் போனேன். இதற்கும் மேல் அங்கிருந்தால் எனக்கு மயக்கமே வந்துவிடும் போல இருந்தது. உடனே வெளியில் வந்து அருகில் உள்ள டீ கடையில் "ஸ்ட்ராங் காபி" ஒன்று குடித்தபிறகே சமநிலைக்கு வந்தேன்.
மீண்டும் ஜோதிடரிடம் சென்றேன், இன்னும் என்ன சொல்கிறார் என்று கவனிப்பதற்காக..
அவர் சொன்னதை எல்லாம் கவனித்தேன். அப்பொழுதுதான் முன்பைவிட அதிக அளவு ஆச்சரியம் அடைந்தேன். கரணம் மேற்படி அதிர்ச்சிதகவல்களை தவிர ஜாதகருக்குத் தேவையான உருப்படியான தகவல்கள் ஏதும் வரவில்லை. (ஜாதகர், அப்பா, அம்மா ஆகியவர்களின் உடன்பிறந்தவர்களின் எண்ணிக்கை அதில் இறந்தவர்களின் எண்ணிக்கை ஆகியவற்றை சரியாகச் சொன்ன இவரால் மற்ற விஷயங்களை ஏன் சரியாக சொல்லவில்லை என்ற ஆச்சர்யம்)
அந்த ஜாதகர் சென்றவுடன் அந்த ஜோதிடரிடம் என்னை ஜோதிடப் பரிச்சயம் உள்ளவன் என்று அறிமுகப் படுத்திக்கொண்டு, அவரிடம் உடன் பிறந்தவர்கள் எண்ணிக்கையை மிகச்சரியாக சொன்னீர்கள், அது எப்படி, அதற்க்கு உரிய கிரக அமைப்புகள் என்ன என்று எனக்கு சொல்லித்தரமுடியுமா? என்று கேட்டேன்.
அவர், இதெல்லாம் எனக்கு என் குரு ரகசியமாக சொல்லிக்கொடுத்தது. என்றார்.
ஐயா, நீங்கள் எனக்கு ரகசியமாகவே சொல்லித்தாருங்கள், அதற்கு குருதட்சனையும் தந்துவிடுகிறேன் என்று கேட்டேன்.
அதுக்கு 1,000 (ஆயிரம் ரூபா ) ஆகும் என்றார். நானும் சம்மதித்தேன்.
அவர் எனக்கு சொல்லித்தந்த பாடங்கள் (இதற்குமேல்தான் சுவாரஸ்யமே இருக்கிறது)
முதல் பாடம் எனக்கு பேரதிர்ச்சியாக இருந்தது.
உடன்பிறந்தவர்களின் எண்ணிக்கைக்கும் கிரக அமைப்புக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்பதுதான் முதல் பாடம்.(என் பேரதிர்ச்சிக்கு காரணம் இப்போது புரிந்திருக்கும்)
ஜோதிடர்களுக்கு மட்டுமே தெரிந்திருக்கும் துருவகணிதம் (சில ரகசிய குறியீடுகள்) தான் அடிப்படை., துருவகணிதம் தெரியாமல் ஜோதிடம் பண்ணமுடியாது. என்று கூறினார்.
முன்பு பேரதிர்ச்சியாக இருந்த எனக்கு (துருவ)கணிதம் என்ற உடனே பேராவல் ஏற்பட்டது.
துருவகணிதம்
(இந்த துருவக்னிதம் குடும்ப ஜோதிடரால் எழுதப்படும் குறியீடு. கம்ப்யூட்டரில் போடப்பட்ட ஜாதகத்தில் ஒரு ஓரமாக (ராசிக்கட்டம் அருகில்) குறிக்கப்பட்டிருக்கும்.
1) ஜாதகருடைய உடன் பிறந்த சகோதிர எண்ணிக்கை காண
அ) ல323 - விளக்கம்
"ல" என்றால் லக்கினம் (ஜாதகர்):
"3" (முதலில் உள்ளது) சகோதிரம்(மூன்றாமிடம் சகோதிர ஸ்தானம்)
"2" ஆண் சகோதிரம் 2
"3" (கடைசியாக உள்ளது) பெண் சகோதிரம் 3
ஆ) ல,திருதி,துதி,திருதி/ல,சதுர் விளக்கம்
"ல" என்றால் லக்கினம் (ஜாதகர்)
"திருதி" (முதலில் உள்ளது) சகோதிரம் (3 என்ற எண்ணுக்கு சமஸ்கிருதத்தில் திருதியை என்று பெயர், இதனுடைய சுருக்கம் திருதி) திருதியை = 3 (மிடம்)-சகோதிர ஸ்தானம்
"துதி" ஆண் சகோதிரம் 2 (2 என்ற எண்ணுக்கு சமஸ்கிருதத்தில் துதியை என்று பெயர், இதனுடைய சுருக்கம் துதி)
"திருதி" (கடைசியாக உள்ளது) பெண் சகோதிரம் 3 (3 என்ற எண்ணுக்கு சமஸ்கிருதத்தில் திருதியை என்று பெயர், இதனுடைய சுருக்கம் திருதி)
"ல,சதுர்" "ல"என்றால் ஜாதகர், சதுர் என்றால் 4 வது பிறப்பு.(4 என்ற எண்ணுக்கு சமஸ்கிருதத்தில் சதுர்த்தி என்று பெயர் இதனுடைய சுருக்கம் "சதுர்"
இன்னும் நிறைய இருக்கிறது.
No comments:
Post a Comment