Friday, February 11, 2022

நாம் தெரிந்து கொள்ள வேண்டிய சில தகவல்கள்...

 1.பிரசவம் ,பிறப்பு, இறப்பு மாத தீட்டு இவைகளுக்கு வெந்நீரில் குளிக்க கூடாது (உடல்நலம் சரி இல்லாதவர்கள் மட்டும் குளிக்கலாம் ).

2.நீங்கள் இடது புறமாக ஒருக்களித்து படுக்கலாம். வலது புறம் கூடாது.இடது கையை கீழே வைத்து படுக்கும் போது ஆயுசு கூடுகிறது என்று சொல்ல படுகிறது .
உங்கள்வீட்டில் கிழக்கு பக்கம் தலை வைத்து படுக்க வேண்டும் , மாமனார் வீட்டில் தெற்கு பக்கம் தலை படுக்க வேண்டும், வெளியூர் சென்றால், மேற்கு பக்கம் தலை படுக்க வேண்டும். ஒரு போதும் வடக்கில் தலை வைத்துப் படுக்க கூடாது.
3.இஞ்சி,எள்ளுசாதம்,தயிர் இவைகளை இரவு சாப்பிடுதல் ஆகாது.
4.நாம் சாப்பிடும்போது,இடது கையால் தண்ணீர் குடிக்கிறோம் பொழுது
நம் வலது கை தட்டையோ அல்லது இலையையோ, தொட்டுக்கொண்டு இருக்கவேண்டும்.
5.பெண்கள் தலைக்கு குளித்தவுடன்,துண்டால் துடைத்துக்கொள்வதர்க்கு முன்பு, தலையில் இருந்து முடி வழியாக, அதாவது முதுகு வழியாக, நீர் தரையில் சொட்டக்கூடாது.அதேசமயம், தலைமுடியில்இருந்து, முன் பக்கமாக சொட்டினால் தோஷம் இல்லை.
6.ஆண்கள் இடுப்பில் அறைஞான் கயிறு எப்போதும் அணிந்து இருக்க வேண்டும் . இது இல்லாமல் செய்யும் எந்த கடவுள் காரியமும் பலிதம் ஆகாது.
7..தண்ணீரில் தன் உருவத்தைப் பார்க்கக்கூடாது..
8.நிலையில் அமரக்கூடாது.
9..சூரியனுக்கு எதிரில் மலஜலம் கழிக்கக்கூடாது.
10..நெருப்பை வாயினால் ஊதக்கூடாது/அணைக்க கூடாது .
11.மழை பெய்யும் பொழுது ஓடக்கூடாது.
12.தரையில் கை ஊன்றிச் சாப்பிடக்கூடாது.
13.துணி இல்லாமல் குளிக்கக் கூடாது.
14..அசுத்தமான பொருள்களை நெருப்பில் போடக்கூடாது.
15..இறந்த பாம்பை புதைக்க கூடாது ,எரிக்க வேண்டும் .
16.துடிதுடிக்கப் புழுபூச்சிகளை நெருப்பில் போடுவது பிரம்மகத்திதோஷம்.
17.ஆலயத்தில் இரவுநேரத்தில் குளிக்கக்கூடாது,கங்கையில் மட்டும் எந்த நேரமும் குளிக்கலாம்.
18.ஈரத்துணியைத் தண்ணீரில் பிழியக்கூடாது,உதறக்கூடாது .
19.பசு தன் கன்றுக்குப் பால் கொடுக்கும் சமயத்திலும்,தண்ணீர் குடிக்கும் சமயத்திலும் அதற்கு எவ்விதத் தடையும் ஏற்படுத்துதல் கூடாது.
20.அக்கினி,சூரியன், சந்திரன்,வில்வமரம்,பசு,தண்ணீர் ஆகியவற்றைப் பார்த்துக்கொண்டு மல ஜலம் கழிக்கக்கூடாது.
21.பாம்புப்புற்றின் அருகிலும்,எறும்புகள் கூட்டத்தின் மீதும் சிறுநீர் கழித்தல் கூடாது.
22.படுத்துக் கொண்டோ,அல்லது உட்கார்ந்து காலை நீட்டிக் கொண்டோ, துடையின் மேல் தட்டை வைத்துக் கொண்டோ சாப்பிடுதல் கூடாது.
23.தலைவிரி கோலமாக இருக்கும்போது சாப்பிடுதல் கூடாது .
24.திருமணம் ஆகாத ஆண்கள் வெள்ளை வேஷ்டியை தவிர மற்றதை உடுத்த கூடாது --திருமண தடங்கல் சுபமான இல்லறம் அமையாமல் போக இது ஒரு காரணம் ..
25.திருமணம் ஆகாத ஆண்கள் அவசியமான காரணத்தினால் (சூடா கர்ம யோகம் --பெரிய காரியும் ) மட்டுமே தலை முடி இறக்க வேண்டும் .
காது குத்த குல தெய்வ கோவிலுக்கு மட்டும் முடி இறக்கலாம் .எக்காரணம் கொண்டும், ஆணோ, பெண்ணோ, அதுவும் குறிப்பாக சுமங்கலிகள் வேண்டிக்கொண்டு செய்தல் ஆகாது
இதை பற்றி அகத்தியர் சுவடிகளில் காணலாம் ..
26.மண்,அல்லது மற்ற உலோகத்தினால் ஆன விளக்கில் மட்டும் தீபம் ஏற்ற வேண்டும் ..தேவைதைகள் கோபம் கொள்ளது ..
27.தீபத்தை கைகளில் ஏற்றி காண்பிக்க கூடாது ,குறிப்பாக கோவில்களில் செய்ய கூடாது .
28.சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்ய கறவை பால் தரவும் ,இயலவில்லை என்றால் பதப்பட்ட பால் வேண்டாம் .
29.அசைவம் உண்டு விட்டு ,வெற்றிலை உண்டு விட்டு கோவிலுக்கு போக கூடாது --காரணம் வாயில் எச்சிலுடன் குதப்பி கொண்டோ ,காரி உமிழ்ந்து கொண்டு இருக்க கூடாது ..
30. இறைவனுக்கு சாற்ற பட்ட மாலையை நம் கழுத்தில் அணிய கூடாது,வாகனத்தில் மாற்ற கூடாது ..
31.மந்திரம்களை சப்தத்தோடு உரக்க சொல்லகூடாது ,நாமம்களை சொல்லலாம் .
32.சிவ பிரசாதத்தை வடக்கு பார்த்து தலை விண்ணோக்கி பூச வேண்டும் ,விழும் துளிகள் தோள்களில் விழவேண்டும் ..
33. ஒரு கோவிலுக்கு எடுத்து சென்ற நெய் /எண்ணை/பூக்கள் மற்ற கோவிலுக்கு கொண்டு செல்ல கூடாது ...
34.ஒரு முறை சாற்றப்பட்ட மாலை அல்லது மலர் வேற கோவில் தெய்வம்களுக்கு தரகூடாது ..
35.உங்களுடைய பக்தியினால் வேறு ஒரு வழிபாடு உடைய மற்றவரை பழித்தல் கூடாது ..
36.வீட்டில் செய்த உணவை கோவிலுக்கு எடுத்து சென்றால் அங்கே உள்ள எதாவது ஒரு தெய்வத்திற்கு படைத்தது விட்டு தான் நாம் உண்ண வேண்டும் /படைக்காமல் உண்ணகூடாது.
37.கோவிலில் படுத்து உறங்க கூடாது /தீபம் தரிசனத்தின் பொழுது கண்களை மூட கூடாது .
38.மந்திரம்களை தவறாக உச்சரிப்பது ,தவறான நேரத்தில் சொல்வது ,நம் குல சாமிகளுக்கு ஆகாத படையல் ,பூசைகள் ,சில பரிகார முறைகளை
பிறர் சொல்லி செய்வது நமக்கும் நம் குடும்பத்திற்கும் ஆபத்து தரும் ...

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...