Friday, February 11, 2022

அழுகிய தேங்காய் அபசகுனமா? நல்ல சகுனமா?..

 இங்கு அழுகிய தேங்காய் அபசகுனமா? நல்ல சகுனமா? என்பது பற்றி கூறப்பட்டுள்ளது வீட்டில் என்ன ஒரு விஷேசம் நடந்தாலும் அதில் ஒரு முக்கிய இடம் தேங்காய்க்கு இருக்கும். சாமிக்கு பூஜை செய்வதில் இருந்து சடங்கு சம்பிரதாயம் என எதுவாக இருந்தாலும் தேங்காய் உடைப்போம்.இப்படி வீட்டில் அல்லது கோவிலில் பூஜைக்கு கொடுத்த தேங்காய் அழுகிய நிலையில் இருந்தால் அபசகுனம் என சிலர் கூறுவார்கள்.

உண்மையிலேயே அழுகிய தேங்காய் அபசகுனமா? நல்ல சகுனமா? என்பது பற்றி இங்கு காணலாம்...
மூன்று கண்கள்! தேங்காயில் மூன்று கண்கள் இருக்கும். இதில் முதல் கண் பிரம்மன், இரண்டாம் கண் லக்ஷிமி, மூன்றாம் கண் சிவனாக போற்றப்படுகிறது. சகுனம்! தேங்காய் மூலமாக உள்ளத்தின் சுத்தம் வெளிப்படும் என்ற கருத்து நிலவுகிறது. அழுகிய தேங்காய், தேங்காய் கோணலாக உடைவது, சிதறு தேங்காய் போடும் போது சுக்குநூறாக உடைவது, தேங்காயில் பூ வருவது என பலவன நாம் நல்ல, தீய சகுனமாக பிரித்து பார்க்கிறோம்.
குழப்பம்!
தேங்காய் உடைக்கும் போது அது அழுகிய நிலையில் இருந்தால் ஆன்மிகம் சார்ந்து இருப்பவர்களுக்கு அது ஏமாற்றத்தை, கலக்கத்தை ஒரு மன குழப்பத்தை அளிக்கும். இதை ஒரு அபசகுனமாக பார்பார்கள். சந்தோஷம் தான்! ஆனால், உடைக்கும் போது அழுகிய தேங்காய் வருவது நல்ல அறிகுறி என்றும். உங்களை அண்டிஇருக்கும் தீய சக்திகள், பீடை, கண்திருஷ்டி போன்றவை அகன்று போகிறது என்பதன் நல்ல அறிகுறி தான் இது என கூறப்படுகிறது. கொப்பரை! நீங்கள் உடைக்கும் தேங்காய் கொப்பரையாக இருந்தால் உங்களுக்கு, உங்கள் வீட்டில் சுப காரியங்கள் நடக்க வாய்ப்புகள் இருக்கிறது. தேங்காயில் பூ! நீங்கள் உடைக்கும் தேங்காயில் பூ இருந்தால் உங்களுக்கு பணவரவு, நல்ல லாபம், எதிர்பாராத நல்லவை நடக்கும் என்பதை குறிக்கும் சகுனமாக காணப்படுகிறது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...