Friday, February 11, 2022

நம் மக்களுக்கு புத்தி எங்கே மேயப் போய்விட்டது? -

 மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சட்டமன்றம் நிறைவேற்றிய ஒரு தீர்மானத்தை நிராகரிக்க யாருக்கும் அதிகாரமில்லை - ஸ்டாலின் -

இந்தியாவில் இருக்கக்கூடிய 28 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேஷங்களில் தமிழகமும் ஒன்று அந்த ஒற்றை மாநில சட்டசபைத் தீர்மானத்திற்கே இவ்வளவு அதிகாரம் என்றால் -
அதே 28 மாநிலங்களும் 8 யூனியன் பிரதேஷங்கள் சேர்ந்து பெரும்பாண்மையுடன் தேர்தெடுத்த லோக்சபா மற்றும் ராஜ்யசபா உறுப்பினர்களால் உச்சநீதிமன்ற உத்தரவின்படி போடப்பட்ட ஒரு தீர்மானத்திற்கு எவ்வளவு சக்தி இருக்கவேண்டும்_
நாட்டின் உட்சபட்ச அதிகாரம் கொண்ட இந்தியப்பாராளுமன்றம் மற்றும் இந்திய உச்சநீதிமன்றம் கொண்டுவந்த தீர்மானத்தை எதிர்த்து அதை நீக்குவது சாத்தியமா?-
நிச்சயமாகத் தோற்றுவிடுவோம் என்று தெரிந்தே ஏன் தி.மு.க இந்த நீட் விவகாரத்தைக் கையில் எடுக்கிறது என்றால்?_
முதலாவது முதன்மையான காரணம் மோடி அரசு எதைச் செய்தாலும் அதை தமிழகத்திற்கு விரோதமாக மாற்றிக்காட்ட வேண்டும் என்ற அரசியல், மோடியரசு தமிழக மக்களுக்காக 10,000 கோடிகள் செலவுகள் செய்து எட்டுவழிச்சாலைத் திட்டம் கொண்டுவந்தால் கூட அதையும் கூட மோடி தமிழக விவசாயிகளை அழிக்கச் செய்யும் சதி என்று கூறி சில மீடியாக்கள் துணையுடன் அந்த வளர்ச்சித் திட்டத்தையே நிறுத்தும் அளவிற்கு வல்லமை கொண்டது தி.மு.கவின் கரங்கள் -
அதேபோன்றுதான் இன்றுவரை நீட்டை எதிர்த்தும் அரசியல் செய்து மக்களைக் குழப்பி வருகிறது தி.மு.க-
நமது மக்களையும் சும்மா சொல்லக்கூடாது, எது நல்லது எது கெட்டது என்று பிரித்துப் பார்க்க முடியாத மக்கள் -
பொதுவாகவே பள்ளியில் படிக்கும் பிள்ளைகளின் பெற்றோரின் நினைப்பு எவ்வாறு இருக்குமென்றால், எப்படியாவது +2 முடித்துவிட்டால் போதும் ஏதாவது ஒரு கல்லூரியில் சேர்த்துவிட்டுவிடலாம் என்று இருக்கும், இதில் கொஞ்சம் நன்றாகப் படிக்கும் மாணவர்களின் பெற்றோரின் எண்ணம் எப்படியிருக்கும் என்றால் ஏதாவது ஒரு கோழிப்பண்ணையில் சேர்த்து +2 - வில் 1180+ வாங்கிவிட்டால் மருத்துவராக்கி விடலாம் என்றுதான் நினைப்பார்கள் இந்த நிலையில் மேலும் ஒரு நுழைவுத்தேர்வா என்று மலைத்துதான் போவார்கள்-
இவர்கள்தான் தி.மு.கவின் இலக்கு-
இரண்டாவதாக தமிழ்நாட்டில் மோடி ஏராவுக்கு முன்பு 23 அரசு மருத்துவக் கல்லூரிகள், 18 தனியார் மருத்துவக் கல்லூரிகள் இருந்தன, இதில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு போக மீதமுள்ள இடங்கள் கோடிக்கணக்கில் விலைபேசி விற்கப்பட்டன (SRM கல்லூரி மதன் 70 கோடிகள் மோசடி செய்து சிறை சென்றதும் இதில்தான்) அரசு ஒதுக்கீட்டிலும் அரசியல்வாதிகளுக்கு கோட்டா சிஸ்டம் இருந்தது அதாவது குறிப்பிட்ட இடங்களை அமைச்சர்கள் காசு வாங்கிக்கொண்டு விற்றுவிடலாம் (இது என்ன சமூகநீதியோ, கருமமோ புரியவில்லை)- இவையெல்லாம் நீட் என்ற ஒற்றைத் தேர்வால் பறிபோய்விட்டது -
மூன்றாவதாக, எப்படி கர்மவீரர் காமராஜர் காமராஜர் அரசுப்பள்ளிகளை அதிகமாகத் திறந்த பொழுது மதம்மாற்றும் மிஷநரிப்பள்ளிகள் ஒன்றுசேர்ந்து அவரைத் தோற்கடித்ததோ அதே போல 7.5% இடஒதுக்கீட்டால் அரசுப்பள்ளிகளில் அதிகரித்து வரும் மாணவர் சேர்க்கை மிஷநரி பள்ளிகளையும், தனியார் கோழிப்பண்ணைகளை நடத்தும் திராவிட அரசியல்வாதிகளையும் அலற வைத்துள்ளது -
நாடே ஏற்றுக்கொண்ட ஒரு நல்ல விஷயத்தை இந்தத் தமிழகத் திருடர்கள் எதிர்க்க காரணங்கள் இவைதான் -
ஆனால் -
நம் மக்களுக்கு புத்தி எங்கே மேயப் போய்விட்டது? -
ஒரு என்ஜியர், வக்கீல் போன்றதல்ல மருத்துவர் பணி அதற்கு மிகச்சிறந்த மாணவர்கள் தேவை, அவர்களால் மட்டுமே மிகச்சிறந்த மருத்துவர்களாக உருவாக முடியும், அவர்களின் IQ தான் இந்தத் தேர்வின் முக்கிய எதிர்பார்ப்பு-
தலைவலி என்று நீங்கள் ஒரு மருத்துவரிடம் சென்றால் 2006க்குப் பிறகு படித்த சில கோழிப்பண்ணை மருத்துவர்கள் வெறும் அனாசின் மாத்திரையை எழுதிக் கொடுத்துவிட்டு 500 வாங்கிக் கொல்வார்கள், ஆனால் ஒரு புத்திசாலி மருத்துவர் தலைவலிக்குக் காரணம் கண்னில் இருக்கிறதா?, தலையில் இருக்கிறதா? அல்லது மனதில் இருக்கிறதா என்பதைக் கண்டறிந்து உரிய மருத்துவரிடம் அனுப்புவார்-
ஏனென்றால் மருத்துவம் என்பது உயிர்காக்கும் பணியாகும் அதற்குத் தகுதித்தேர்வு தேவையா இல்லையா என்பதை மட்டும் தெரிவியுங்கள் -
தேசப்பணியில் என்றும்
🇮🇳🕉️🇮🇳🕉️🇮🇳🕉️🇮🇳🕉️

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...