ஒரு தாய் தன் பிள்ளைக்கு பார்த்து பார்த்து செய்வதைப் போல தன் சேலம் மக்களுக்கு என்னென்ன செய்து இருக்கிறார் என்பதை பட்டியலிடுகிறேன்.
16 ஏக்கரில் உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு மைதானம் வாழப்பாடியில் அமைத்தார்.
"ஜெ.ஜெயலலிதா இரண்டு அடுக்கு மேம்பாலம்" கொண்டு வந்து போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
தலைவாசல் அருகே கூட்டு ரோட்டில் பிரம்மாண்டமான கால்நடை ஆராய்ச்சி நிலையம் மற்றும் கால்நடை மருத்துவக்கல்லூரி.
பல்வேறு பகுதிகளில் ரயில்வே உயர் மட்ட மேம்பாலம்.
திருச்செங்கோடு-சங்ககிரி-கொங்கணாபுரம்-ஓமலூர் வரை நான்கு வழி சாலையாக அகலப்படுத்த திட்டப் பணிகள்
வேறு எந்த மாவட்டத்திற்கும் இல்லாத வகையில்,கூட்டு குடிநீர் திட்டங்களின் மூலமாக சேலம் மாவட்டம் முழுவதும் பாதுகாக்கப்பட்ட காவேரி தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.
மேட்டூர், ஓமலூர், சங்ககிரி மற்றும் எடப்பாடி சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட வறண்ட பகுதிகளிலுள்ள 100 ஏரிகளில் தண்ணீர் நிரப்பும் திட்டம்
சேலம் மாவட்டத்தில் 32,468 நபர்களுக்கு முதியோர் உதவித்தொகை வழங்கியுள்ளார்.
13,153 நபர்களுக்கு பட்டாக்கள் கொடுத்துள்ளார்.
சேலத்தில் குடிமராமத்து திட்டத்தின் மூலம் அனைத்து ஏரி குளம் தூர்வாரப்பட்டு சாதனை படைத்தார்.
இத்தோடு முடித்துக் கொண்டேன் என்று கருத வேண்டாம்,
இன்னும் புள்ளி விவரத்தோடு எடுத்துச் சொல்ல ஆரம்பித்தால், நூற்றுக்கும் மேற்பட்ட பதிவுகளை கட்டுரை கட்டுரையாக போட வேண்டி இருக்கும்.
எனவே குறிப்பிட்ட சிலவற்றை மட்டும் மேலே குறிப்பிட்டு இருக்கிறேன்.
No comments:
Post a Comment