Tuesday, January 2, 2018

ராஜா ராஜா தான். ....!!

1986ம் ஆண்­டில் இசை­ஞானி இளை­ய­ராஜா ஹவ் டு நேம் இட்" (இதற்கு எப்­ப­டிப் பெய­ரி­டு­வது) என்ற இசைக்­கோ­வையை உரு­வாக்கி இசை நாடா­வைத் தயா­ரித்து வெளி­யிட்­டார். அதற்­காக நடத்­திய ஒரு வெளி­யீட்டு விழாவை மிக­வும் எளி­மை­யா­க­வும், புது­மை­யா­க­வும் நடத்­தி­னார். இசை­ய­மைப்­பா­ளர் எம்.எஸ்.விஸ்­வ­நா­தன், பஞ்சு அரு­ணா­ச­லம், கர்­நா­டக இசை­ய­றி­ஞர்­கள் மற்­றும் பம்­பாய் இசைக்­க­லை­ஞர்­கள் சிலர் ஆகி­யோர் தாம் கலந்து கொண்­ட­னர். நௌஷத் அலி கேஸட்டை வெளி­யிட, பஞ்சு அரு­ணா­ச­லம் பெற்­றுக்­கொண்­டார். அந்த விழா­வில் பேசும்­போது இசை­ஞானி இளை­ய­ராஜா கூறி­யது வரு­மாறு. மேற்­கத்­திய இசை­யை­யும் கர்­நா­டக இசை­யை­யும் இணைத்து இதை உரு­வாக்­கி­யி­ருக்­கி­றேன். இது மக்­க­ளால் விரும்பி வர­வேற்­கப்­பட்­டால் நான் மிக­வும் மகிழ்ச்­சி­ய­டை­வேன். அது, மேலும் இதைப்­போன்ற புதிய முயற்­சி­யில் நான் ஈடு­பட வழி வகுக்­கும். முன்­பெல்­லாம் இதைப்­போல இசைக்­கு­றிப்­பு­களை நிறைய எழுதி வைத்­தி­ருந்­தேன். பின்­னர் வேறு­ஒரு சூழ்­நி­லை­யில் இதற்­கெல்­லாம் மக்­கள் வர­வேற்பு இருக்­காது என்று எண்­ணிக் கிழித்­துப் போட்­டு­விட்­டேன். இங்கு பேசிய அனை­வ­ரும் இது என்­னு­டைய மிகச்சி­றந்த பணி என்று குறிப்­பிட்­டார்­கள். நான் அப்­படி நினைக்­க­வில்லை. இது உயர்­வா­னது என்­றால் ‘ஓரம் போ’ பாடல் இசை­யும், ‘நிலாக்­கா­யுது’ பாடல் இசை­யும் உயர்­வா­ன­து­தான். இந்த நல்ல வேளை­யில் வெறும் ராஜா­வாக இருந்த என்னை இளை­ய­ரா­ஜா­வா­கக்­கண்­டு­பி­டித்த பஞ்சு அரு­ணா­ச­லம், அவர்­க­ளுக்கு என் நன்­றி­யைக்­கா­ணிக்கை ஆக்­கு­கி­றேன்." என்று குறிப்­பிட்­டார்.அந்த விழா­வின் போது­மெல்­லிசை மன்­னர் எம்.எஸ்.விஸ்­வ­நா­த­னின் காலில் விழுந்து வணங்கி ஆசி­பெற்­றார். இளை­ய­ராஜா.உல­கப்­பு­கழ்­பெற்ற இசை­ஞா­னி­யான இளை­ய­ராஜா, தம் காலில் விழுந்து ஆசி கோரி­ய­போது எம்.எஸ் வி. யின் கண்­கள் கலங்­கி­விட்­டன...

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...