உச்ச நீதி மன்றத்தின் 4 மூத்த நீதிபதிகள், இன்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக போர்கொடி உயர்த்தி இருக்கிறார்கள். சுதந்திர இந்தியாவில் இது போல் ஒரு நிகழ்வு நடந்ததில்லை. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக பல்வேறு குற்றசாட்டுகளை கூறி உள்ளனர். அதில் முக்கியமானது, இறந்து போன நீதிபதி லோயா பற்றியது.
பாஜகவின் தலைவர் அமித் ஷா சம்மந்தபட்ட ஷொராபுதின் கொலை வழக்கை விசாரித்த நீதிபதி தான் லோயா அவர்கள். அவரும் மர்மமான முறையில் மரணமடைந்தார். அந்த மர்ம மரணத்தை விசாரிக்க உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்ய பட்டுள்ளது. இந்த மனுவை தலைமை நீதிபதி, அரசாங்கத்திற்கு தொடர்ந்து ஆதரவாக செயல்பட்டு வரும் நீதிபதி அருண் மிஸ்ரா என்பவர் முன்னிலையில் விசாரிக்க உத்தரவிட்டுள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது வைக்கபடும் மற்றொறு குற்ற சாட்டு, இது போல முக்கியமான வழக்குகளில் அரசுக்கு ஆதரவான நீதிபதிகள் முன்னிலையில் அந்த வழக்கை அனுப்பி, அரசுக்கு அனுகூலம் செய்கிறார் என்பதாகும். இந்தியாவின் அனைத்து அமைப்புகளின் மாண்புகளையும் திட்டமிட்டு சிதைத்து வருகிறது பாஜக.
No comments:
Post a Comment