மத்திய பட்ஜெட்டை அனைவரும் எந்த விதத்தில் வரவேற்கிறார்கள் என்று புரியவில்லை. உயர் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு தாக்கல் செய்யப்படும் இரண்டாவது பட்ஜெட். இதில் நடுத்தர வர்க்கத்திற்கு, ஒழுங்காக வரி செலுத்துவோருக்கு ஏதேனும் சலுகை இருக்கிறதா என்றால், வெறும் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சுகிறது. டிமானிடைசேஷனுக்கு பிறகு கருப்பு பணம் ஒழிந்து விடும், வானத்தை கிழிப்போம், வைகுண்டத்தை காட்டுவோம் என்றெல்லாம் ஆசை வார்த்தை கூறி, தொழிலாளர்களையும் , அன்றாடம் அலுவலகம் செல்வோரையும், வங்கிகளின் வாசலில் நிறுத்தி, அவர்களுக்கு மென்மேலும் துன்பத்தை கொடுத்தார்களே தவிர வேறு எதுவுமே செய்யவில்லை. அந்த நேரத்தில் நடைபெற்ற வருமான வரி சோதனைக்கு இன்று வரை நடவடிக்கை இல்லை.
"வளர்ச்சி" என்ற ஒற்றை வார்த்தையை வைத்து இன்னும் எவ்வளவு நாள் ஏமாற்ற போகிறார்கள் என்பது ஆண்டவனுக்கு தான் வெளிச்சம்.
தேர்தலுக்கு முன் கருப்பு பணத்தை மீட்போம், அதை வைத்து பட்ஜெட் போடுவோம் என்றெல்லாம் வாய்க்கு வந்ததை பேசி ஆட்சியில் அமர்ந்து விட்டு, இன்று பெரு முதலாளிகளுக்கு மட்டுமே துணை போகும் அரசாக விளங்குவது மிகவும் வேதனை அளிக்கிறது.

முதியோர்களின் வருமான ஆதாரமாக விளங்கும் வங்கிகளின் வைப்பு தொகைக்கான வட்டியை தங்கள் மனம் போன போக்கில் குறைத்து, அனைவரையும் ஷேர் மார்க்கெட், ம்யுசிச்சுவல் பண்ட் என்று முதலீடு செய்ய வைத்து இன்று அதற்கும் புதிதாக வரியை போட்டு, நடுத்தர வர்கத்தின் குரல்வளையை நெறிக்கும் மத்திய அரசின் மக்கள் விரோத போக்கு மிகவும் கண்டிக்கத்தக்கது. இவர்களால் பொதுமக்களை தான் துன்புறுத்த முடியுமே தவிர, ஏமாற்றும் பெரு முதலாளிகளையும், கோடி கணக்கில் கருப்பு பணம் வைத்திருப்பவர்களையும், ஒரு நாளைக்கே கோடி கணக்கில் ஊழல் செய்யும் அரசியல் வியாதிகளையும் ஒன்றும் செய்ய முடியாது.
1.5 கோடி கழிவறை கட்ட போகிறார்களாம், அதையாவது கட்டி விட்டு விலகி கொள்ளுங்கள், அடுத்த முறையாவது , பொது மக்கள் நலம் விரும்பும் அரசு அமையட்டும்.
எல்லாமே செய்ய நினைத்து எதையும் செய்யாமல் மக்களை ஏமாற்ற பட்ஜெட் என்னும்புது வழியில் ஏமாற்றபடுகிறோம் என்பதை மக்கள் உணரும் நாள் எலெக்சன் நாள் .முடிவு ? !!
No comments:
Post a Comment