1953 ஆம் ஆண்டு திமுக கூட்டத்தில் மொழிப்பிரச்சனை குறித்து முக்கிய முடிவெடுக்கிறார்கள்
அதை தொடர்ந்து கருணாநிதியை அழைத்த அண்ணாதுரை வடநாட்டு டால்மியா கல்லக்குடியில் சிமெண்ட் பேக்டரி தொடங்கி அந்த ஊரின் பெயரையே டால்மியாபுரம் என்று மாற்றிவிட்டான்.
நீ ஜூலை 15-ஆம் தேதி அங்கு சென்று ரயில் நிலையத்தில் உள்ள டால்மியாபுரம் என்ற போர்டில் கல்லக்குடி என்ற போஸ்டரை ரயில்வே போலீஸின் அனுமதி பெற்று ஊர்வலமாக சென்று ஒட்டி ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்திவிட்டு வா " என்று கூறி இதேபோல அன்றிருந்த திமுகவின் எல்லா முக்கிய தலைவர்களுக்கும் ஒவ்வொரு ஊரில் ஒவ்வொரு அஸைன் மென்ட் கொடுக்கிறார்.
கருணாநிதி தன் நண்பர்களை அழைத்துக்கொண்டு டால்மியாபுரம் செல்கிறார்.
ரயில் நிலையத்திற்கு ஊர்வலமாக செல்ல அனுமதி பெற்றிருந்ததால் ஊர்வலமாக சென்று பெயர்பலகையின் மீது கல்லக்குடி என்ற சுவரொட்டியை ஒட்டினார்.
போலீஸ் கைகட்டி வேடிக்கை பார்த்தது
பத்திரிக்கையாளர்கள் எல்லோரும் வந்து விட்டார்களா என்று செக் செய்து கொண்டு ஆறுமுறை போஸ்டர் ஒட்டுவதைப்போல் போட்டோவுக்கு போஸ் கொடுக்கிறார்.
போலீஸ் கைகட்டி வேடிக்கை பார்த்தது.
மத்திய பிரதமர் நேரு தமிழகத்து காங்கிரஸ் தலைவர்கள் இந்திமொழி என எல்லோரையும் கலந்து கட்டி வாய்க்கு வந்தபடி ஏசுகிறார்.
போலீஸ் கைகட்டி வேடிககை பார்த்தது
மறுநொடி கைது செய்யப்பட்டிருக்கவேண்டுமே...காவலர்களோ அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கின்றனரே.... தங்களுடைய போராட்ட முறையை காவலர்கள் அலட்சியப்படுத்துகிறார்களோ என நினைத்த கலைஞர்.
நேராக அங்கிருந்த சேதுராமலிங்கம் என்ற போலீஸ் அதிகாரியிடம் ஏன் எங்களை கைது செய்யமாட்டேன் என்கிறீர்கள் என்று கேட்டார்...
அவரோ நீங்கள் அனுமதி பெற்றுதான் போராடுகிறீர்கள்
அமைதியான முறையில் உங்களின் போராட்டத்திற்கு ஒத்துழைப்பும் பாதுகாப்பும் கொடுத்து உங்களை சென்னைக்கு செல்ல கார் எர்றி அனுப்பிவைக்கவே எங்களுக்கு
உத்தரவு என்றார்.
அமைதியான முறையில் உங்களின் போராட்டத்திற்கு ஒத்துழைப்பும் பாதுகாப்பும் கொடுத்து உங்களை சென்னைக்கு செல்ல கார் எர்றி அனுப்பிவைக்கவே எங்களுக்கு
உத்தரவு என்றார்.
அப்படியா அப்போ என்ன செஞ்சா கைது செய்வ?
என்று ஒருமையில் அந்த அதிகாரியை பார்த்து கேட்டுக்கொண்டே...
என்று ஒருமையில் அந்த அதிகாரியை பார்த்து கேட்டுக்கொண்டே...
சட்டென்று போராட்ட வியூகத்தில் மாற்றம் ஒன்றை அமல்படுத்தினார்.
கல்லக்குடி என்ற பெயர் மாற்றத்தை உடனடியாக அங்கீகரிக்கவேண்டும். அதுவரை எங்கள் போராட்டம் தொடரும் என்று சொல்லி ரயில் தண்டவாளத்துக்குக் குறுக்கே படுத்தார் கருணாநிதி.
அவரைத் தொடர்ந்து அவருடைய பிரிவில் இருந்த மற்ற தொண்டர்களும் தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்தனர்.
எழுந்திருக்கச் சொல்லி சாம தான பேத முறையில் கெஞ்சி கொஞ்சி பிறகு மிரட்டினர் காவலர்கள்
ஆனால்,கலைஞர் அசைந்துகொடுக்கவில்லை.. ரயில் நிலையத்தின் பெயரை கல்லக்குடி என்று மாற்றும் வரை ரயிலை போக விடமாட்டோம் என்று கூறினர்.
கலெக்டர், மாவட்ட போலீஸ் அதிகாரி, மாவட்ட நீதிபதி ஆகியோர் வந்து ரயிலை போக விடுங்கள்.
உங்கள் கோரிக்கைகளை ரயில்வே மேலிடத்திற்கு அனுப்புங்கள் என்றர்கள்.
ஆனால், கலைஞர் மறுத்துவிட்டார்.
இடையிடையே புகைப்படக்காரர்களை படம் எடுக்கிறார்களா என கண்காணிக்கவும் தவறவில்லை
இதைத்தொடர்ந்து தண்டவாளத்தில் படுத்திருந்தாலும் பரவாயில்லை.
ரயிலை விடுங்கள் என்றனர் அதிகார்கள். ரயில் கிளம்பினால் கலைஞர் குழுவினர் பயந்து போய் எழுந்து விடுவார்கள் என்று அதிகார்கள் நினைத்தனர்.
ஆனால், நடந்ததோ வேறு, ரயில் நெருங்க நெருங்க கலைஞரும், மற்றவர்களும் அசையவில்லை.
இருநூறு மீட்டர் தொலைவில் ரயில் நிறுத்தப்பட்டது. ரயிலுக்கும், கலைஞரின் தலைக்கும் இருநூறுமீட்டர் தூரம்தான் இடைவெளி.
கலைஞரும், மற்றவர்களும் கைது செய்யப்பட்டனர்.
பாளையங்கோட்டைக்கு அனுப்பிவைக்கப்பட்டார் கருணாநிதி.
செய்தி கேட்டு மிகுந்த கோபமடைந்தனர் அண்ணாவும் பிற தலைவர்களும்
போஸ்ட் ஒட்டிட்டு வரச்சொன்னா ஒரு பிரளயத்தையே ஏற்படுத்தி நாடு முழுக்க தன்னப்பத்தி பேச வச்சுட்டானேய்யா கருணாநிதி என்று நிர்வாகிகளிடம் விசனப்பட்ட அண்ணாத்துரை...
இதை வெளியே காட்டிக்கொள்ளாமல் இரண்டாவது நாளே பாளையங்கோட்டைக்கு சென்று
கருணாநிதியை பார்க்கிறார்.
கருணாநிதியை பார்க்கிறார்.
வெளியேவந்து நிருபர்களிடம் அரசாங்கத்தையும் காங்கிரஸையும் வசைபாடிவிட்டு தம்பி கருணாநிதி கம்பி எண்ணும் பாளையங்கோட்டையே எங்களின் பாடிவீடு என கொக்கரிக்கிறார்.
இவர்களை இப்படியேவிட்டால்
கருணாநிதியை ஏசுநாதராக்கி
காங்கிரஸை கரித்துக்கொட்டுவார்கள் என்று உணர்ந்த அரசு கருணாநிதியை உடனே விடுதலை செய்கிறது.
கருணாநிதியை ஏசுநாதராக்கி
காங்கிரஸை கரித்துக்கொட்டுவார்கள் என்று உணர்ந்த அரசு கருணாநிதியை உடனே விடுதலை செய்கிறது.
வெளியே வந்து இப்படிச் சொல்கிறார்
பாம்புகளுக்கும் பல்லிகளுக்கும்
நடுவினிலே தான் இருந்ததாக
பராசக்திவசனம் பேசுகிறார்.
நடுவினிலே தான் இருந்ததாக
பராசக்திவசனம் பேசுகிறார்.
நாடு ஆ என வாய் பிளந்து பார்த்தது.
கருணாநிதி கலைஞராக பரிணமிக்க கல்லக்குடியில் சாதாரணமாக முடிந்திருக்க வேண்டிய போராட்டத்தை
போலீஸ் தடியடி கல்வீச்சு கண்ணீர்புகை குண்டு வீச்சு
துப்பாக்கிச்சூடு இருவருக்கு கால் இழப்பு பதினெட்டுபேர் பலத்தகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதி
இரு அப்பாவிகள் துப்பாக்கிச்சூட்டில் பலி என
பலரை பலி கொடுத்து பலப்பல குடும்பங்களை அனாதையாக தெருவில் நிறுத்தித்தான் ஆனார் என்பது வரலாறு.
துப்பாக்கிச்சூடு இருவருக்கு கால் இழப்பு பதினெட்டுபேர் பலத்தகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதி
இரு அப்பாவிகள் துப்பாக்கிச்சூட்டில் பலி என
பலரை பலி கொடுத்து பலப்பல குடும்பங்களை அனாதையாக தெருவில் நிறுத்தித்தான் ஆனார் என்பது வரலாறு.
இந்த சம்பவத்தை அண்ணா முதல்வராக பதவியேற்றப்பின் இப்படி வர்ணிக்கிறார்...
"தண்டவாளத்தில் தலைவைத்து படு என்றாலும், அமைச்சர் பதவியை ஏற்றுக்கொள் என்றாலும் இரண்டையும் ஒன்றாக பார்ப்பவன் என் தம்பி கருணாநிதி"
மாற்றிச் சொல்லியிருந்தால் அண்ணா அன்றைக்கே அண்ணாவாக இருந்திருக்க முடியாது உணர்ந்தே சொன்னார் உணர்ந்து பயந்தே சொன்னார் அண்ணா.
No comments:
Post a Comment