1.அக்னியின் மனைவி ஸ்வாஹா தேவியாவாள். ஹோமங்களில் நாமிடும் அவிர்பாகங்கள் ஸ்வாஹா தேவி அக்னியிடம் அளித்து அக்னி பகவான் சம்மந்தப்பட்ட தெய்வங்களிடன் சேர்த்து
விடுவார். அதனால் தான் ஹோமங்களில் நெய் விடும்போதும்
மற்ற பொருட்களை அளிக்கும்போதும் "ஸ்வாஹா" என மந்திரத் தின் முடிவில் வருமாறு கூறி ஹோமத்தில் சேர்க்கிறோம். எனவே இந்த அக்னி நக்ஷத்திர காலத்தில் ஹோமங்கள் பலவும் செய்வது நன்மையளிக்கும். பித்ரு ஹோமங்கள் தில ஹோமங்கள் போன்றவை செய்வது மிகுந்த பலனளிக்கும்.

2. வாழ்க்கையில் எந்த ஒரு செயலிலாவது வெற்றிபெற வேண்டும் என்றால் வயிற்றில் நெருப்பு இருக்கவேண்டும் என்று சொல்வார் கள். இந்த அக்னி நக்ஷத்திர காலத்தில் அறுபடை வீடுகளுக்கு சென்று முருகனை தரிசித்தால் நம் பாவங்கள் நீங்கி வெற்றிமேல் வெற்றி ஏற்படும் என்பது சத்தியம்.
3.பித்ருகாரகனான சூரியன் கிருத்திகை நக்ஷத்திரத்தில் ப்ரவேசிப்பதையொட்டி தந்தையின் உடல் நலனின் அக்கறை செலுத்துவது, தேவையான மருத்துவ பரிசோதனைகளை
செய்வது அவசியமாகும்.
செய்வது அவசியமாகும்.
4. அக்னிஸ்தலமான திருவண்ணாமலையில் கிரிவலம் செய்வது.
5. உடம்பின் சூடு தனியவும் அம்மை, வைசூரி, வேணல் கட்டிகள் ஆகியவை தாக்காமல் இருக்க ஸ்ரீஸீதலாஷ்டகம் எனும் ஸ்லோஹத்தை பாராயணம் செய்வது.
6. அக்னி நக்ஷத்திர காலத்தில் சுத்தமான குடிநீர், நீர் மோர் போன்றவற்றை வெயிலில் களைத்து வருபவர்களுக்கு, நீண்ட தூரம் பயணிகளை சுமந்து செல்லும் பேருந்து ஓட்டுநர், நடத்துனர் போன்றவர்க ளுக்கு வழங்குவது, பறவைகள், வாயில்லா வளர்ப்பு பிரானிகளுக்கு நீர் வைப்பது, வீட்டில் வளர்க்கும் செடிகள் மற்றும் மரங்களுக்கு நீர் ஊற்றுவது ஆகியவை சூரியனால் ஏற்படும் தோஷங்களிலிருந்து நம்மை காக்கும்.
No comments:
Post a Comment