Saturday, November 3, 2018

காலமறிந்து நட............

"மாற்றங்களை உள்வாங்கி
மனங்களை உள்வாங்கி
சூழல்களை உள்வாங்கி
தொடங்கும் செயல்களால்
அக்காரியம் வெல்வதும் முடிவதும்
நம் கையாலாகிறது"
நாம் ஏதேனும் செயல்களை செய்யத்தொடங்கும் முன்
இடம், பொருள், ஏவல் பார்த்து செய்தல் அவசியம் என்கிறார்கள் பெரியோர்கள். அது உண்மையான கூற்றும் கூட. நாம் ஒரு செயலை செய்யத்தொடங்கும் போது அந்த செயல்களை அந்தக்காலச்சூழலுக்கு ஏற்ற செய்தால் மட்டுமே அந்த செயலில் நிலைக்கவும், நீடிக்கவும், வெற்றிகரமாய் பூர்த்தி செய்து சாதிக்கவும் முடியும்.மாறாக இடம்,பொருள், ஏவலைக்காணாமல் செய்தால் அச்செயல் எப்போது முடியும் என்பதை நம்மால் கணக்கிட முடியாது. ஒருவேளை அச்செயல் முடிவுற்றாலும் கூட அச்செயலால் நமக்கு எதிர்வினையையோ , தீவினையயோ, நட்டத்தையோ, தோல்வியையோ சந்திக்கலாம். எனவே நாம் செய்யும் செயல்கள் அந்தந்த சூழலுக்கு ஏற்ப மாற்றங்களை ஏற்று, இடம், பொருள், ஏவலைப்பார்த்து செய்தலே அச்செயலுக்கு பலம் நலம். இதைத்தான் ஒளவை முன்பே அழகாய் சொல்லியிருக்கிறார். பல கிளைகளுடன் கூடிய நீண்ட கம்பீர மரங்கள் எல்லா நேரத்திலும் பூக்களையும்,காய்களையும், கனிகளையும் தருவதில்லை. அந்தந்த பருவத்தில் மட்டுமே பூக்களையோ, காய்களையோ கனிகளையோ தரும். அதைப்போல நாம் இடம், பொருள், ஏவலை வைத்தே நற்காரியங்களை செய்திடல் வேண்டும். அவ்வாறு செய்தாலும் கூட அதற்கான பலன்களாய் வெற்றியும், காரியசித்தியும், இலாபமும், காலம் கூடும் போதே நம்மை வந்தடையும் என்கிறார்.
"கிளைகளோடு கூடிய நீண்ட மரங்களும் பருவத்தில் மட்டும் பழங்களைத் தரும். அது போல மேன்மேலும் முயன்றாலும் நாம் செய்யும் கார்யங்கள் தகுந்த காலம் கூடினால் மட்டுமே பயன் தரும்"

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...