மருத்துவ குணமுடைய செடிகளைக் கொண்டு சில நோய்களைக் குணப்படுத்தும் மருத்துவ முறை மூலிகை மருத்துவம் எனப்படுகிறது.
இந்த மூலிகை மருத்துவத்தை சித்த மருத்துவர்களும், மரபு வழி மருத்துவர்களும் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர்.
இம்மருத்துவமுறையில் ‘உணவே மருந்து, மருந்தே உணவு’ என்பதையே வலியுறுத்துகிறது.
அகத்தி - வலி, கபம், சோகை, குன்மம்.
அதிமதுரம் - பித்தம், ரத்த தோஷம், வாந்தி, நீர் வேட்கை, சோர்வு, வலி.
அரளி - அரிப்பு, கண் நோய், கிருமி.
அருகம்புல் - கபம், பித்தம், நாவறட்சி, எரிச்சல், தோல்நோய்.
ஆடாதோடை - இரத்த தோஷம், பித்தம், இழுப்பு, இருமல், நாவறட்சி.
ஆவாரை - நீரிழிவு, ரத்த பித்தம்.
இஞ்சி - அஜீரணம், காய்ச்சல், இருமல், வாந்தி, வயிறு உப்புசம்.
எலுமிச்சை - பிரட்டல், வாந்தி, நாவறட்சி, ருசியின்மை, கிருமி நோய்.
ஓமம் - கண்நோய், கபம், விக்கல்.
கடுக்காய் - இருமல், நீரழிவு, மூலம், பெருவயிறு, அக்கி, விஷக் காய்ச்சல், இதய வலி, காமாலை, நீர்க்கடுப்பு.
கண்டங்கத்திரி - இருமல், இழுப்பு, காய்ச்சல், கபம், வாயு, நாட்பட்ட சளி.
கரிசலாங்கண்ணி - பகம், வாதம், கிருமி நோய், இருமல், கண்நோய், தலைவலி
கருவேப்பிலை - இரத்த பித்தம்.
கருவேலம் - பல்வலி, இரத்த தோஷம், கபம், அரிப்பு, கிருமி நோய், விரணம்
கீழாநெல்லி - காமாலை, பித்தம், இருமல்.
No comments:
Post a Comment