Saturday, November 3, 2018

ஆரோக்கியமான விவாதத்தை தொடருவோம்.

இந்து மதத்திலுள்ள தீண்டாமைக்கு பயந்து ஓடுவது கேவலம்.
மதமாற்றம் கோழைத்தனம் என நினைப்பர்களுக்கு:
இந்தியா முழுவதும் தேசிய மதமாக அசோகர் காலத்தில் பரவியிருந்த பெளத்தம், இருந்த இடம் தெரியாமல் போனது ஏன்?
உலகெங்கும் மதிக்கப்படும் பெளத்தம், அது தோன்றிய மண்ணில் புதைக்கப்பட்டது ஏன்?
புத்தர் சிலைகள் கடும் வன்மத்துடன், உயிருள்ள மனிதனை கழுத்தை சீவுவதைப்போல், புத்தர் சிலைகளின் தலைகளை உளி வைத்து உடைத்து, மண்ணுக்குள்ளும் நீருக்குள்ளும் மறைத்து வைத்தது ஏன்?
நாடெங்கும், பெளத்த அடையாளங்கள் இந்து அடையாளஙளாக உருமாறியிருப்பது ஏன்?
ஆயிரமாயிரம் பெளத்த பிக்குகள் கழுவிலேற்றி கொல்லப்பட்டது ஏன்?
வீட்டிலுள்ள பெளத்த நூல்களை, போகிப்பண்டிகை என கொளுத்த செய்ததும், ஆடிப்பெருக்கு என ஆற்றில் வீச செய்ததும் ஏன்?
விஹார் நாயகரான புத்தர், விநாயகர் ஆனது ஏன்? அரச மரம் புத்தரின் அடையாளம் தானே? பிள்ளையாரின் அடையாளமாக மாறியது ஏன்? பெளத்தம் அழிக்கப்பட்ட குப்தர் காலம் பொற்காலம் என போற்றப்படுவது ஏன்? பெளத்தம் அழிக்கப்பட்ட குப்தர் காலத்தில் புதிதாக விநாயகர் தோன்றியது ஏன்?
பெளத்தத்தை அழித்து, நம் முன்னோர்களை கொன்று, பயமுறுத்தி, பெளத்தர்களாகிய அவர்களை வலுக்கட்டாயமாக இந்துக்களாக மாற்றியுள்ளனர் என்பதைத்தான் வரலாற்று ஆதாரங்கள் காட்டுகின்றன.
கட்டாயத்தின் பேரில் நம்மீது திணிக்கப்பட்டதை ஏற்றுக்கொண்டு வாழ்வது வீரமா? அல்லது நாம் இழந்ததை மீட்டெடுப்பது வீரமா?
இந்துக்களாய் தொடர்வது தான் கோழைத்தனம். பெளத்தத்தை மீட்டெடுப்பதே வீரம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...