இளையராஜா அவர்களின் திரையுலக வரவின் பலனாக திரையிசையின் தரம் கற்பனைக்கெட்டாத உயரத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுவிட்டது என்றே சொல்ல வேண்டும்.
இளந்தலைமுறை இசையமைப்பாளர்களுக்கு இந்த உயரம், மிகக் கடுமையான #சவாலாக உள்ளது.
இளையராஜா அவர்கள் உயர்த்திவைத்துள்ள இந்த வளர்ச்சி நியாயமானதுதானா என்று கேட்பது அறிவுடைமையாகாது.
ஆனாலும், இதுபோல் ஒன்று இயற்கையாகவோ, அடிக்கடியோ நிகழ்ந்துவிடுவதில்லை.
நான் இந்நிகழ்வை இப்படிப் பார்க்க முயல்கிறேன்.
இசையின் பரிணாம வளர்ச்சியே இதுபோன்ற நிகழ்வுகளால்தான் அடுத்தடுத்தக் கட்டங்களுக்கு #நகர்ந்திருக்கவேண்டும்.
இசையின் பரிணாம வளர்ச்சியே இதுபோன்ற நிகழ்வுகளால்தான் அடுத்தடுத்தக் கட்டங்களுக்கு #நகர்ந்திருக்கவேண்டும்.
ஆம், பாரம்பரிய இசை வரலாற்றில் நம் நாட்டு இசை மும்மூர்த்திகளான சியாமா சாஸ்திரிகள் , தியாகராஜர் மற்றும் முத்துசுவாமி தீட்சிதர் போன்றவர்களும், மேற்கத்திய சங்கீதத்தில் பாக், மொசார்ட், பீத்தோவன் போன்றவர்களும் வரலாற்றில் மிகப் பெரிதாகப் பேசப்படுபவர்கள் ஆவார்கள்.
இவர்கள் அல்லது இவர்களைப் போன்றவர்கள் பற்றி என்னுடைய சொந்தக் கருத்து இதுதான்:
இவர்கள் எல்லாம் உருவாக்கப்படுகிறார்கள் என்பதைவிட, இசைமேதைகளாக (#genius) இசைஞானத்துடனே #பிறக்கிறார்கள் என்று சொல்லப்படுவதையே நான் மிகவும் நம்புகிறேன்.
பிறவி இசைமேதைகளான இவர்கள், அவரவர் காலக்கட்டங்களிலும் இசைத்துறைக்குச் செய்திருக்கும் சேவை மிகவும் மகத்தானதாகவே இருந்திருக்க வேண்டும்.
நான் இதை உறுதியாகச் சொல்வதற்கான #காரணமும் உண்டு.
ஆம், மிகப் பரவலாக மனித மனங்களை ஈர்க்கும் இந்த இசைத்துறையில், #அதி_புத்திசாலித்தனம் மிகுந்தவர்கள், எண்ணிக்கையில் அதிகமாக இருக்கவே வாய்ப்புகள் அதிகம்.
இத்தகைய இசையறிஞர்கள் மத்தியிலும் மேற்கூறிய மேதைகளின் பெயர்கள் மட்டும் மற்றும் அவர்கள் படைத்த இசைவகை மட்டும் இவ்வளவு உயர்ந்ததாகக் கருதப்படுகிறதென்றால் நிச்சயமாக அவர்கள் படைத்த அந்த #இசையின்_தன்மை ஏதோ ஒருவிதத்தில் வியப்புக்குரியதாகவோ, #ஏற்றுக்கொள்ளப்படும் புதுமையுடன் கூடியதாகவோ, இருந்ததாகத்தானே அர்த்தம்.
இன்னும் ஒருபடி மேலே போய் சொல்லவேண்டுமானால், மேலே குறிப்பிட்டவாறு இசையின் பரிணாம வளர்ச்சியில், அடுத்தக்கட்ட நகர்வாக #இவர்கள்_ஒவ்வொருவரின்புதுமையான அல்லது வித்தியாசமான இசைப் படைப்பு கண்டிப்பாக அமைந்திருக்க வேண்டும் என்றே நான் கருதுகிறேன்.
இவர்களின் இயற்கையாக அமைந்த இந்த #அரிய_இசைஞானமே இசையின் மேன்மைக்கு முக்கிய பங்கு வகித்திருக்க வேண்டும்.
இதுவரை நாம், இசையின் வளர்ச்சி இப்படித்தான் இருந்திருக்க வேண்டும் என்ற எனது கண்ணோட்டத்தில், ஓர் பார்வை பார்த்தோம்.
இதன் அடிப்படையிலேயே என் கண்ணோட்டத்தை நான் நிகழ்காலத்திற்கு அப்படியே நகர்த்துகிறேன்.
மேற்சொன்ன பிறவி மேதைகளின் பட்டியலில் நான் திரையிசையமைப்பாளராக அறிமுகமான '#இளையராஜா' என்னும் ஓர் அதிசயப் பிறவியையும் இணைக்கின்றேன்.
ஆம், அத்தனைத் தகுதிகளையும் பெற்றவர் இவர் என்பதற்கு சான்றாகக்
கீழ்க்கண்ட சங்கீத சான்றோர்களால் வியந்து பார்க்கப்பட்டு சிறந்த பாராட்டுகளைப் பெற்றவரே இந்த இளையராஜா அவர்கள்:
கீழ்க்கண்ட சங்கீத சான்றோர்களால் வியந்து பார்க்கப்பட்டு சிறந்த பாராட்டுகளைப் பெற்றவரே இந்த இளையராஜா அவர்கள்:
செம்மங்குடி ஶ்ரீனிவாச ஐயர்
பால முரளி கிருஷ்ணா
லால்குடி ஜெயராமன்
T V கோபாலகிருஷ்ணன்
இசை விமர்சகர் சுப்புடு
வயலின் L சுப்பிரமணியம்
Zubin Mehta
Lary Bain
ஹரி பிரசாத் சௌராசியா
நௌஷாத் அலி
... இதுபோல் இன்னும் பலர்.
பால முரளி கிருஷ்ணா
லால்குடி ஜெயராமன்
T V கோபாலகிருஷ்ணன்
இசை விமர்சகர் சுப்புடு
வயலின் L சுப்பிரமணியம்
Zubin Mehta
Lary Bain
ஹரி பிரசாத் சௌராசியா
நௌஷாத் அலி
... இதுபோல் இன்னும் பலர்.
மேற்கண்ட இசைமேதைகளிடம் பாராட்டு பெறுவதென்பது அவ்வளவு எளிதான காரியமன்று. இவர்கள் அனைவருமே திரையிசை சம்பந்தமில்லாத (நௌஷாத் அலி தவிர) பாரம்பரிய இசையின் (Classical Music) ஜாம்பவான்கள் ஆவார்கள்.
அதாவது கர்நாடக சங்கீதம், இந்துஸ்தானி சங்கீதம், மேற்கத்திய க்ளாசிகல் இசை, இவற்றில் அவரவரும் சிறந்த மேதைகள் என அழைக்கப்படுபவர்களே, மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்கள்.
இது தவிர இளையராஜா அவர்களின் இசைப் புலமைபற்றி திரைத்துறையில் பாராட்டாதவர்களே கிடையாது என்பதுபோல் பட்டியல் மிகப் பெரிதாக நீளும்.
மேலே விளக்கிய அனைத்தும் இளையராஜா என்ற ஒரு மாபெரும் இசைமேதையைப் பற்றி நான் பிறர் சொல்லக் கேட்டவைகளாகப் பதிவுசெய்கின்றேன்.
ஓர் இசையிலக்கணமறியாத ஆனால் மிகச் சிறந்த இசை ரசனை கொண்ட இளையராஜா ரசிகனாக நான், இந்த இசை சம்பந்தப்பட்ட அறிஞர்கள் கூறியதையெல்லாம், இளையராஜா அவர்களுக்குக் கிடைத்த மிகப் பெரிய
கௌரவமிக்க இசைச் சான்றிதழ்களாக (அவைகளினும் உயர்ந்தவைகளாக) எடுத்துக்கொண்டு, அவைகளின் அடிப்படையில், எனது கருத்தை மீண்டும் தொடர்கின்றேன்.
கௌரவமிக்க இசைச் சான்றிதழ்களாக (அவைகளினும் உயர்ந்தவைகளாக) எடுத்துக்கொண்டு, அவைகளின் அடிப்படையில், எனது கருத்தை மீண்டும் தொடர்கின்றேன்.
(இச் சான்றிதழ்கள் உரைக்கும் அத்தனையும் உண்மை என்பதை, என்னில் நானே உணர்ந்துவைத்துள்ள இளையராஜா இசையின் தாக்கங்களைக் கொண்டு உறுதிப்படுத்திக் கொள்கிறேன்.)
ஆம், இளையராஜா அவர்கள் ஒரு பிறவி இசைமேதை என்பதால், இயற்கையாக அவரில் அமைந்துவிட்ட இந்த உயர்ந்த இசைஞானம், அவரையறியாமலேயே, அவர் சார்ந்த இசையில் பல நுணுக்கமான புதுமைகளைப் புகுத்தி, இசையின் பரிணாம வளர்ச்சியில் தன் பங்கிற்கு ஒரு படி மேலேயே உயர்த்தி இசையை நகர்த்தியுள்ளார் என்றே கருதுகிறேன்.
ஆகவே, இன்றைய இசை தலைமுறையினருக்கு இது மிகவும் கடினமான, எட்டமுடியாத உயரமென்றாலும், இது எந்த ஒரு பரிணாம வளர்ச்சியைப் போலவே, இசைக்கான பரிணாம வளர்ச்சியின் ஒரு நகர்வுதான் என்று நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
மேலே குறிப்பிட்டதுபோல், இசையின் மிக மிக முக்கியமான இந்த நகர்வு அல்லது புதுமை அரிதாக நிகழக்கூடிய ஒன்றே.
அது இளையராஜா என்ற நாம் வாழும் காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு மாபெரும் இசைமேதையால் இந்த அரிய நிகழ்வு #இந்தமுறை_நடைபெறுகிறது.
இதை நினைக்கும்போது, மனது பெருமையின் உச்சத்தை உணரும்விதமாக சிலிர்த்துக்கொள்கிறது.
இப்படிக்கு,
இளையராஜா ரசிகன்.
இளையராஜா ரசிகன்.
No comments:
Post a Comment