Wednesday, December 5, 2018

நிழல்_சேவை_அமைப்பு.

வேளாங்கண்ணிக்கும் கோடியக்கரைக்கும் இடைப்பட்ட ஒரு கடலோர கிராமம் #வானவன்மகாதேவி.
மொத்தமாக 350 குடும்பங்கள் . ஓரிரண்டு தார்சு வீடுகள் தவிர மற்றவை ஓடு, அஸ்பெஸ்டாஸ், தகரம், மற்றும் கூரை வீடுகள்..
எல்லாமும் காற்றில் பறந்து விட்டது. அரசு அபாய எச்சரிக்கை கொடுத்ததால் வேறு பாதுகாப்பான இடத்துக்குச் சென்ற இவர்கள் மழைவிட்டு திரும்ப வந்து பார்த்தபோது எதுவும் மிஞ்சி இருக்கவில்லை எதுவும் என்றால் எதுவும். கூரையைப் பிய்த்தக் காற்று உள்ளிருந்தப் பொருட்களைக் கூட விட்டுவைக்கவில்லை.
அன்றாடம் கடலுக்குச் செல்லும் ஆண்கள்.
மீன் பிடித்தல் மட்டுமே இவர்களின் முக்கிய பொருளாதாரம்.
சுனாமி அழிவிலிருந்து மீண்டு எழுபது பேர் இணைந்து ஆளுக்கு ஒரு லட்சம் போட்டு வலை வாங்கியுள்ளனர். தங்களுக்கு கடலிலிருந்து ஊர் அடையாளம் தெரிய மிகப்பெரிய போகஸ் லைட் அமைத்துக் கொண்டிருக்கின்றனர்.
200 ஃபைபர் படகுகள் மற்றும் சிறு வலைகள்.
இன்று எதுவும் மிஞ்சவில்லை.#புயலின்_தீவிரத்தை_நீங்கள்_படங்களில்_பார்க்கலாம். அவ்வளவு பெரிய லைட் கம்பம் வளைந்து விழுந்து விட்டது. படகுகள் தூக்கி எறியப்பட்டு பழுது பார்க்கக் கூட வழியற்று நொறுங்கி விட்டது. வலைகள் தாறுமாறாகக் கிழிந்து விட்டன. சவுக்கு, தென்னை, பனையும் பிற எந்த மரங்களும் தப்பவில்லை....
சுனாமி தந்த அழிவைவிட இப்போது இவர்கள் சந்தித்து இருப்பது மிகப்பெரும் துயரம்.
மின்சாரம் வருவதற்கு இன்னமும் ஒரு மாத காலமும், அதற்கு மேலும் பிடிக்கலாம்.
அரசு நிவாரணம் கைக்கு வந்து அது பொருளாக மாற இன்னும் எத்தனை நாட்கள் ஆகுமோ?அரசு செய்ய வேண்டிய வேலையைத் தனி மனிதர்கள் செய்ய முடியுமா? அனைத்துப் பேரிடர்களிலிருந்தும் மக்களைப் பாதுகாக்கவும், அவர்களின் வாழ்வாதாரத்தைத் திரும்பக் கட்டமைக்கும் வேலையை அரசு செய்யாமல் புயலால் பாதிக்காத மற்ற மாவட்ட மக்கள் செய்துவிட முடியுமா? ( இதில் இந்த அரசு, அந்த அரசு,எல்லாம் நொந்த அரசுதான்.)
என்றால், முடியவே முடியாது. 
Image may contain: outdoor
என்ற போதும்,
அரசு தரப்பிலிருந்து உதவி பெற்று அவர்களது வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் வரை, நம்மாலான சிறு முதலுதவியாக ஏதாவது செய்துதானாக வேண்டும்... முதலில் அவர்களது உனவுக்கும் குடி நீர்க்கும் உறுதி செய்து விட வேண்டும்.
எல்லோருக்குமான அத்தனை உதவியையும் எப்படி நிறைவேற்றுவது? தன்னார்வலர்கள்
உதவி மையங்கள் அமைத்து உடனடி உதவித் தேவைப்படும் இடங்களையும், உதவி வரும் இடங்களையும் இணைக்கும் வகையில் வேலை செய்யலாம். அப்படித்தான் இப்போது நடைபெற்று வருகிறது.
இன்னொரு வகை பாதிக்காத இடங்களில் இருந்து உதவி செய்ய விரும்பும் பல சிறு குழுக்களும் அரசு தரப்பிலிருந்து அங்கே உதவி வரும்வரை, ஏதாவது ஒரு கிராமத்தை பொறுப்பேற்று அடிப்படை அவசரத் தேவைகளை பூர்த்தி செய்ய முயற்சிக்கலாம். அல்லது அரசுடனும் அந்த ஊர் மக்களுடனும் இணைந்து குறிப்பிட்ட கால அளவு வரை அம்மக்களுக்கு உதவலாம். அவ்வகையில் 
Image may contain: tree, sky, outdoor and nature
#நிழல்_சேவை_அமைப்பு இந்த #வானவன்மகாதேவி கிராமத்திற்கு, தங்களால் ஆன சிறு உதவியாக
நான்கு ஆழ்குழாய் போர்கள் போட்டு கைப்பம்ப் வைத்துத் தந்துள்ளது. மின்சாரம் கிடைத்து மோட்டார் மூலம் தண்ணீர் கிடைக்கும் வரை #குடி_தண்ணீர்க்கு_உத்திரவாதம்.
நேற்று வரை கடலுக்குப் போய்ச் சம்பாதித்தப் பணத்தில் கௌரவமாக தங்களது வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்த மக்கள் இன்று செய்வதறியாது திகைத்து நிற்பது பெரும் அவலம்.
இருந்த சிறு அளவு விவசாய நிலத்தையும்,
சுனாமியின் போது கடல் நீர் புகுந்து மணல் களி மண்ணால் நிரப்பிவிட்டது..உப்புப் படிந்த விவசாய நிலம் தென்னை, பனை, சவுக்கு தவிர எந்தப் பயிர்களையும் வளர விடவில்லை. வேறு எந்தவகையான உணவு தானியம் விளைவிப்பதற்கான நில அமைப்பும் அங்கில்லை. மேலும் அவர்களுக்கான நிலமும் மிகக் குறைந்த அளவு.இருக்கும் நிலத்தினால் தம் மக்களின் பசியை உடனடியாக போக்க இயலாது..
எனவே ஆட்கள் கடலுக்குப் போய் மீன் பிடிக்கும் தொழிலை தொடங்கும் வரை தாக்குப்பிடிக்க வேண்டும்.. 
Image may contain: 1 person, ocean, sky, outdoor and nature
அதுவரை அன்றாடங்களுக்குத் தேவையான பொருட்களின் ஒரு பகுதிக்கு #நிழல்_சேவை_அமைப்பு பொறுப்பு எடுத்துக் கீழ்கண்டவைகளை அவர்களுக்கு வழங்கியுள்ளது..
அரிசி, ரவை , சப்பாத்தி மாவு , பருப்பு , சர்க்கரை , மற்றும் சமையலுக்குத் தேவையான மளிகைப் பொருட்கள், சமையல் பாத்திரங்கள், கொஞ்சம் மருந்துகள், பெட்ஷீட்கள், கொஞ்சம் உடைகள், முக்கியமாக கொசுவிரட்டிகள், கொசுவலைகள்.
இதில் கவனிக்கத்தக்க செய்தி என்னவென்றால் அங்கே யார்யார்க்கு என்ன வகையான உதவி வேண்டும் என அவர்களுக்குள்ளாக தீர்மானித்து எங்களைக் கேட்டுக்கொண்டதின் பேரில் அனுப்பப்பட்டது.
முக்கியமாக நாற்பது தென்னம்பிள்ளைகள் கேட்டுள்ளார்கள். அதுவும் அனுப்பப்பட்டது.
இனியும் சில மாதங்களுக்கு அவர்களோடு தொடர்பில் இருக்கலாம் என நினைக்கிறோம்.
முதலில் அவர்கள் இந்த அதிர்ச்சியிலிருந்து மீண்ட பின் முடிந்த வரை அவர்களது கீரைகள், காய்கறிகள், பழங்களை பயிரிடப் பயிற்சி, மற்றும் விதைகளை வழங்கவும் முடிவெடுத்துள்ளது.
இது போலொரு துயரம் இனி வேண்டாம் எனும் பிரார்த்தனைகளுடன்
நிழல்_சேவை_அமைப்பு. 

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...