Wednesday, December 5, 2018

நம் உடலைப் பற்றிய குறிப்புகள்.


1. மனித மூளையின் எடையானது உடல் எடையில் 3 சதவீதமாகும்.
2. மனிதமூளை, நாம் சுவாசிக்கும் காற்றிலிருந்து 20 சதவீதமும், நாம் சாப்பிடும் உணவிருந்து 20 சதவீத கலோரித்திறனும், நமது உடம்பிலுள்ள ரத்தத்திலிருந்து 15 சதவீதமும் உபயோகப்படுத்திக் கொள்ளும்.
3. மனிதத்தோலின் பரப்பளவு 20 சதுர அடியாகும். மனிதத் தோல் 50 நாட்களுக்கு ஒருமுறை சராசரியாகப் புதுப்பிக்கப்படுகிறது. மனித வாழ்நாளில் 18 கிலோகிராம் எடையுள்ள தோல் புதுப்பிக்கப்படுகின்றது.
4. விழி குவியத்தசைகள் ஒருநாளில் ஒரு லட்சம் தடவை அசைகிறது. இதே அசைவினைக் காலால் செய்தால் 80 கிலோமீட்டர் தூரத்தைக் குறிக்கும்.
5. நாம் நமது கண் இமைகளை 6 வினாடிக்கு ஒருமுறை திறந்து மூடுகிறோம். நம் வாழ்நாளில் சராசரியாக 25 கோடி முறை கண்களைத் திறந்து மூடுகிறோம்.
6. மனித மூளையின் வளர்ச்சி 15 வயதுடன் முடிந்துவிடும்.
7. மனிதக் கண்கள் 17,000 நிறங்களைத் துல்லியமாய் பார்க்கும் திறன் கொண்டது.
8. நம்முடைய உள்ளங்கையில் ஒவ்வொரு சதுர அங்குலத்திலும் 3,000 வியர்வைச் சுரப்பிகள் உள்ளன.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...