சபரிமலை விவகாரத்தில் எப்படியாவது யாரையாது உள்ளே அழைத்துச் செல்ல வேண்டும், தீர்ப்பை அமல்படுத்த என்ன வேண்டுமானாலும் செய்வோம் என்று துடிக்கும் கம்யுனிஸ்ட் முதலமைச்சர் பிணராய் விஜயன் கேரளா அரசு - நவம்பர் 19 அன்று நீதிமன்றத்தில் ஒரு மனுதாக்கல் செய்துள்ளது காரணம் "மலங்கார சிறியன் சர்ச் விவகாரத்தில்உச்சநீதிமன்றதீர்ப்பை நிறைவேற்றக் கால அவகாசம் கேட்டு". அங்கே சமாதான புறாவாகத் தூது பறக்கும் கம்யூனிஸ்ட் அதே கேரளா அரசு தான் சபரிமலை விவகாரத்தில் காட்டுமிராண்டி தனமாக நடந்து கொள்கிறது கேட்டால்நீதிமன்ற ஆணை என்று. எவ்வளவு பெரிய முரண் இது???? அப்பட்டமான இரட்டை நிலை.
இது போல் காரணங்களால் தான் நான் திராவிட கூட்டத்தையும் வெறுக்கிறேன். இங்கே திமுக , திக கூட்டம் வெளிப்படையாக ஆதரவு தெரிவிப்பது மட்டுமல்லாது தனது தொண்டர்களைக் கொண்டு அவமானம் செய்யும் விதமாகப் பேசியும் வருகிறது. இதே இன்னொரு மத ஆன்மீக விசயங்களில் செய்யுமா இந்த திமுக?????
இந்த சபரிமலை விவகாரத்தில் நியாயமாகப் பேசும் நபர் மதிப்பிற்குரிய ரஜினி அவர்கள் , அதற்காகப் போராடும் ஒரேகட்சி பிஜேபி மற்றும் இதர இந்து அமைப்புகள் மட்டுமே இங்கே.
இங்கே பக்தர்களின் ஆன்மீக உணர்வுகள் மற்ற மதத்தினருக்கு மதிக்கப்படுவது போல் மதிக்கப்பட வேண்டும் என்பதைவலியுறுத்தி - அதை வெளிக்காட்டும் வண்ணமாக வீட்டின் கதவுகள் இல்லை அலுவலகங்கள், கடைகள் எதோ இடத்தில்"#SAVE SABARIMALA"என்ற லேபில் ஓட்டும் வேலைத் தொடங்குகிறோம்". லேபில் எங்களிடம் உள்ளது வேண்டியவர்கள்பெற்றுக்கொள்ளலாம். இது என்னால் ஆனால் சின்ன முயற்சி - தொடங்கி வைக்கிறேன். முதல் கட்டமாக நான்கு நகரங்களில் சுமார் 3லட்சம் வீடுகளில் இந்த லேபில் கொண்டு சேர்க்க முடிவு செய்துள்ளோம்.
01) லேபிள் வேண்டும் என்று நினைப்பர் என்ன செய்ய வேண்டும்?
{நீங்கள் பின்வரும் நகரங்களில் உள்ளவர் என்றால் தேவையான லேபில் பின்வரும் நபர்களிடம் வெள்ளிக் கிழமை முதல்கிடைக்கும். தொலைப்பேசி அழைப்பு மாலை 6 மணிக்குப் பின் அழைக்கவும். பணம் வேண்டியது இல்லை லேபில் இலவசமாகவே தான் தருகிறோம். }
சென்னை : 97898 91491
கோவை : 84896 99000
கரூர் : 97862 79548 / 88380 26103
கோவை : 84896 99000
கரூர் : 97862 79548 / 88380 26103
மதுரை பொறுத்தவரை என்னைத் தொடர்பு கொள்ளவும். மற்ற நகரங்களுக்கும் என்னால் முடித்ததைஅனுப்பிவைக்கிறேன். {மற்ற நகரங்களில் இதை எடுத்துச் செய்ய விருப்பம் உள்ளவர்கள் imsi.maridhas@gmail.com தொடர்புகொள்ளவும்.}
02)நீங்களும் இதை எடுத்துச் செய்ய விரும்பினால் - உங்களுக்கு அந்த லேபில் Design வேண்டும் என்றால் அனுப்பி வைக்கிறோம்.அருகில் உள்ள லேபில் ஸ்டிக்கர் தயாரிக்கும் நிறுவனங்களுக்குச் சென்று ஆடர் செய்து வாங்கி உங்கள் சுற்றுப்புறங்களில் வழங்கவும். விலை அதிகம் கிடையாது. விரும்பும் அனைவரும் செய்யலாம். 2.6*3 inch அளவுள்ள லேபிள் என்பதால் பெரிய விலை இருக்காது.
03)எப்படி விநியோகம் செய்வது மக்களிடம்???
கோவில்களில் , கடைகளின் வாங்கும் பொருட்களுடன் , வீட்டிற்கு அலுவலகத்திற்கு வரும் நண்பர்களிடம் , செய்தித்தாள்களில் வைத்தது , நோட்டு புத்தக கடைகள் மூலம் இப்படி எப்படியாவது மக்களிடம் சென்று சேருங்கள். நீங்களே யோசித்தால் நல்ல திட்டம் கிடைக்கும். எனவே உங்கள் இஷ்டம் எப்படி வேண்டுமானாலும் கொண்டு சேருங்கள். ஆனால் வீணடிக்க வேண்டாம். {மக்களுக்குப் புரியவைத்து சென்று சேர்த்தால் மகிழ்ச்சி}.
நாம் கேட்பது பிற ஆன்மிக நம்பிக்கைகளில் எப்படி நடந்து கொள்கிறார்கள்? அதே போல் மதியுங்கள் என்பது தான் தவிரவேறு இல்லை. ஆனால் திமுக கமியூனிஸ்ட் ???
ஆக இதை மட்டும் உறுதிமொழியாகக் கொள்ளுங்கள் :
"சபரிமலை விவகாரத்தில் பக்தர்கள் உணர்வை மதிக்காத திமுக - கம்யூனிஸ்ட் கூட்டத்திற்கு எங்கள் குடும்பத்தில் இருந்து ஒரு வாக்கு கூட இந்த முறை கிடையாது என்பதை உறுதி அளிக்கிறோம்".
அனைத்து இடங்களிலும் ஆதரவைத் திரட்டும் ஒரு சின்ன முயற்சியாக இதை முன்னெடுக்கிறோம். இதில் கட்சி , தனிநபர் அடையாளம் எதுவும் இல்லை. எனவே அனைவரும் ஒன்றிணைந்து குரல் எழுப்ப வேண்டும் என்பது என் வேண்டுகோள்.
No comments:
Post a Comment