Sunday, December 9, 2018

பிரசார காலத்தைக் குறைப்பது முக்கியம்தான்.

அரசியல் மாறினால் ஒழிய, இப்போதைய தேர்தல் எந்த மாற்றத்தையும் தராது. பணம் செலவழித்து, வெற்றி பெறுவதால், ஊழல் ஒழியாது. பணம் செலவு, கட்டுப்பாடு சட்டம் இருந்தாலும், பெரும்பாலும், யாரும் அதை மதிப்பதில்லை. செலவழிக்கப்பட்ட பெரும் தொகை முக்கியமல்ல. அதன் அங்காடி மதிப்பு தான் முக்கியம். செலவைக் கட்டுப்படுத்த ஒரு வழி இருக்கிறது. ஒரு வாரத்தில் தேர்தலை முடித்து விடலாம். பிரச்சார, கால இடைவெளியைக் குறைத்தால், செலவும் குறையும். தேர்தலில் ஒருவர் வெற்றி பெற்று விட்டால், , அவர் காதுக்கு நமது குரல் சென்றடைய வழியில்லை. உலகில், அறுபதுக்கும் மேற்பட்ட நாடுகளில், மனு அளிக்கும் பழக்கம் Petition System நடைமுறையில் உள்ளது. தொகுதியில் குறிப்பிட்ட எண்ணிக்கையினர் மனுவில் கையெழுத்து போட்டால், பாராளுமன்றம் எதிர்வரும் அடுத்த கூட்டத் தொடரில், சட்டரீதியாக, அந்த பிரச்சினையைக் குறித்து ஒரு மணி நேரம் விவாதிக்கும். வெகுஜனக் குரல் மேலே உள்ளவர்களுக்குப் புரிய இது ஒரு வாய்ப்பு. இந்தியாவிலும் அமுல்படுத்தலாம். --- A Rural Manifesto : Realising India’s Future Through her villages நூல் வெளியீட்டு விழாவில் வருண் ஃபெரோஜ் காந்தி எம்.பி.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...