மிகப்பெரும் இறுதி ஊர்வலத்திற்கு, வடகொரியா தயாராவதாக, அமெரிக்காவின் உளவு செயற்கைக்கோள் புகைப்படங்கள் தெரிவித்துள்ளன.
மர்ம தேசமான வட கொரியாவின் சர்வாதிகாரி கிம் ஜாங் உன், இதய பாதிப்பால் மரணப் படுக்கையில் இருப்பதாகவும், அவர் இறந்து விட்டதாவும் பல்வேறு யூகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன. அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்த போது மருத்துவரின் கை நடுங்கியதால் தான், அவரது உடல்நிலை மோசமடைந்ததாகவும் தகவல் வெளியானது. உறுதியான தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகாத நிலையில், வடகொரியாவில் நடப்பது குறித்தும், கிம்மின் நிலை குறித்தும் அறிய அமெரிக்கா, சீன நாடுகள் ஆர்வம் காட்டி வருகின்றன.
இந்நிலையில், அமெரிக்காவின் உளவு செயற்கைக்கோள் வடகொரியாவில் எடுத்த புகைப்படங்களில், ஏப்.,18ம் தேதிக்கு பின், தலைநகர் பியோங்யாங்கில் அமைந்துள்ள மிரிம் ராணுவ அணிவகுப்பு பயிற்சி மைதானம் அருகில், தற்காலிகமான கட்டிடங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது தெரிய வருகிறது. மேலும், ராணுவ அணிவகுப்புகள் நடத்த தற்காலிகமான அமைப்புகள் உருவாகி வருவதும் தெரிகிறது. இது அங்கு அசாதாரண சூழல் நிலவி வருவதை உறுதிப்படுத்துகிறது. கடந்த 2011ல், வட கொரியாவின் தந்தை, கிம் ஜாங் இல் இறந்த போது, பிரமாண்ட ராணுவ அணிவகுப்பு நடந்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment