உத்தரபிரதேச அரசு முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்களின் தந்தை ஆனந்த் சிங் பிஷ்ட் உடல்நல குறைவால் கடந்த 20.4.20 அன்று காலமானார். தந்தை இறந்த செய்தி கிடைத்த போது யோகி ஆதித்யநாத் கொரானா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டத்தினை நடத்தி கொண்டிருந்தார்.
தந்தை இறந்த செய்தி கேட்ட சோகத்தில், அவர் தனது தாயாரை தொடர்பு கொண்டு, தாயாரிடம் கூறியதாவது: தந்தை இறநதது குறித்து நான் மிகவும் வருந்துகிறேன். அவர், எனது குழந்தை பருவம் முதல் நேர்மை, கடின உழைப்பு மற்றும் தன்னலமற்ற சேவை ஆகியவற்றை கற்று கொடுத்தவர்.
கொரானாவிலிருந்து மக்களை பாதுகாக்கும் அதிமுக்கிய பணிகளில் நான் ஈடுபட்டு கொண்டிருப்பதால், நான் தந்தையின் இறதிச் சடங்குகளில் கலந்து கொள்ள முடியாது . எனவே, குறைந்த எண்ணிக்கை கொண்ட உறவினர்களுடன் தந்தையின் இறுதி சடங்கினை நடத்திக் கொள்ளும்படி தெரிவித்து விட்டார்.
ஆனால் இங்கு ஒருவர், தனது தந்தை ஒரு ரிட்டையர்டு முதல்வர் என்றிருந்தும் அவர் இறந்தவுடன் அவரை சொந்த இடத்திலோ அல்லது பொது இடத்திலோ அடக்கம் செய்யாமல், அரசு இடத்தில்தான் அடக்கம் செய்வேன் என்று அடம் பிடித்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து ஒரு அதிகாரியையும் இரவு முழுவதும் உறங்க விடாமல் செய்து கடைசியில் மேற்படி வழக்கில் தனக்கு சாதகமாக தீர்ப்பினைப் பெற்று, ஒரு வழியாக பாரதப் பிரதமர் முதல் ஜனாதிபதி வரை வருவதற்க்கு காரண காரியங்களை ஏற்படுத்தி அமர்க்களமாக அடக்கம் செய்தார்.
இந்த இருவரின் இச்செய்கைகளிலிருந்து , இவ்விருவரில் யார் அரசு அதிகாரத்தையும் கட்சி செல்வாக்கையும் பயன்படுத்தாமல் பண்புடனும், மாண்புடனும் நடந்து கொண்ட உத்தம புத்திரன் யார், ...உத்தம வில்லன் யார் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
எந்நாளும் மேன்மக்கள் மேன்மக்களே என்பது மட்டும் உறுதி..
No comments:
Post a Comment