#அப்துர்ரஹ்மான் என்ற தினக்கூலி தொழிலாளியின் ஆயுள்கால கனவும் லட்சியமுமான மக்காவில் ஹஜ் செய்வதற்காக பல வருடமாக ஐந்தும் பத்துமாக சேர்த்துவைத்த பணத்தை கொரோனா பாதித்து ஒன்றுக்கும் வழியில்லாமல் சொந்தபந்தங்களால் ஒதுக்கப்பட்டு வீட்டில் கிடக்கும் பாவங்களை யாரும் ஏற்றெடுத்துபார்க்காத நிலையைக்கண்டு தான் ஹஜ்ஜிற்கு செல்வதற்காக மிச்சப்படுத்திய பணத்தை அவர்களின் சாப்பாட்டிற்காக பொருட்கள் வாங்கி கொடுத்து செலவு செய்துள்ளார்
தனக்கு ஏற்பட்டுள்ள கடன்களும் கடமைகளும் முடிப்பதற்காக மிக சிக்கனாமாக இருந்து சிறிய தூர பயணமென்றால் நடந்து செல்வதுமாக சேர்த்து தன் கடன்களையும் கடமைகளையும் முடித்து பின்பு ஹஜ்ஜிற்காகவும் பணம் சேர்த்து முடித்தபோது தான் மக்களை கொல்லும் கொரோனா வந்து சேர்ந்துள்ளது .
இந்த நிலையில்தான் அருகிலிருப்பவர்கள் தன்னைவிட மிக மோசமான நிலையிலிருப்பதை கண்டு தனது ஹஜ் செல்லும் முடிவை மாற்றியுள்ளார்
" நான் ஹஜ்ஜுக்கு செல்லவில்லை என்றாலும் அல்லாஹ் எனக்கு அதைவிட அதிகமாக நன்மையையும் செல்வத்தையும் எனக்கு தர போதுமானவன் " என்று சந்தோசம் நிறைந்த மனதுடன் சொல்கிறார்
கேரளாவில் மங்கலாபுரம் பக்கமிருக்கும் பந்தவால் கிராமத்தை சேர்ந்தவர் இந்த அப்துர்ரஹ்மான். அல்லாஹ் அவரின் மனதிற்க்கு கணக்கின்றி நற்கூலி கொடுப்பானாக...
No comments:
Post a Comment